கி.பி. 1510 ஆம் ஆண்டு.
பீட்டர்
ஹென்கின்.
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பூட்டு செய்யும் தொழிலாளிக்கு
திடீரென்று ஓர் எண்ணம் மின்னலாய் வெட்டியது.
எண்ணத்திற்கு உருவம் கொடுத்தார்.
நின்ற நிலையிலான, நேரத்தைக் காட்டும் கடிகாரத்தை
வடிவமைத்து உலகிற்கு அளித்தார்.
நவீன உலகின் முதற் கடிகாரம்.
இவரைத் தொடர்ந்து, கி.பி. 1656 ஆம் ஆண்டு, டச்சு
நாட்டைச் சார்ந்த ஹியூஜன்ஸ் என்பவர், ஊசல்
அசைவில் இயங்கும் கடிகாரத்தைக் கண்டுபிடித்தார்.
60 நிமிடம் ஒரு மணி.
24 மணி நேரம் ஒரு நாள்
இவ்வாறு ஒரு நாளினை 24 மணி நேரமாகவும், ஒரு மணி
நேரத்தை 60 வினாடிகளாகவும், நமக்கு வரையறுத்துக் கொடுத்தவர் இவர்தான்.
இன்றைய கடிகாரங்கள் எல்லாம், இவர் கண்டுபிடித்த
கடிகாரத்தின் முன்னேறிய வடிவங்கள்தான்.
சரி, கடிகாரங்களைக் கண்டுபிடிப்பதற்கு முன்,
நேரங்களை எவ்வாறு கணக்கிட்டிருப்பார்கள்.
நாம் அறிந்ததுதான்.
மணல் குடுவையைப் பயன்படுத்தி
நீரைப் பயன்படுத்தி
இப்படிப் பலப் பல வகைகளிலும் நேரத்தைக் கணக்கிட்டனர்
நம் முன்னோர்.
பொழுதளந்து அறியும்
பொய்யா மாக்கள்
தொழுது காண்கையர்
தோன்ற வாழ்த்தி
எறினீர் வையகம் வெலிஇய
செல்வோய் நின்
குறுநீர்க்கன்னல் இணைத்தென்று இசைப்ப
பண்டைய நாட்களில், பொய் பேசாத நாழிகைக் கணக்கர்
என்பவர்களால், குறுநீர்க் கன்னல் என்னும்
கருவியைக் கொண்டு, நாழிகையைக் கணக்கிட்டதாகக் கூறுகிறது இந்த முல்லைப் பாட்டு.
முல்லைப் பாட்டில் மட்டுமல்ல, தொல்காப்பியம்
முதலிய, பழந்தமிழ் நூல்களிலேயே, கால அளவுப் பெயர்கள் காணப்படுகின்றன.
நாழிகை
தூய தனித் தமிழ்ச் சொல்.
நம் முன்னோர் இந்த கால அளவை முறையைத்தான் பயன்படுத்தினர்.
60 நாழிகைகளைக் கொண்டது ஒரு நாள்.
30 நாழிகைகள் ஒரு பகல்.
30 நாழிகைகள் ஒரு இரவு.
பகல் என்பது சூரிய உதயம் முதல் மறைவு வரை.
அதாவது இன்றைய நேரத்தில் சொல்வதானால், காலை
6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை.
ஒரு நாழிகை என்பது இன்றைய கணக்கில் 24 நிமிடங்கள்.
இப்படித்தான் அளந்தார்கள்.
மணல், நீர், குறுநீர்க் கன்னல் முதலிய முறைகளைப்
பயன்படுத்தி, அரண்மனைகளில் வசித்த மன்னர்களும், பெரும் மாளிகைகளில் வாழ்ந்த அமைச்சர்களும்,
பெரும் செல்வர்களும் நேரத்தைக் கணக்கிட்டிருக்கலாம்.
ஆனால், மக்கள்.
ஒரு குச்சியை, நிழல் சாயும் பக்கமாக, சிறிது
சாய்த்து நடுவர்கள்.
நிழல் செல்லும் பக்கத்தே, ஒரு அரைவட்டம் போடுவார்கள்.
அரைவட்டத்தை நாழிகைக் கோடுகளால் பிரிப்பார்கள்.
நேரத்தை அறிவார்கள்.
இதுமட்டுமல்ல, பயணத்தின் நடுவில், நேரத்தை அறிய
விரும்பினால், தரையில் கிடக்கும் ஒரு மெல்லியக் குச்சியை எடுத்து, பதினாறு விரற்கடை அளவிற்கு ஒடிப்பார்கள்.
பின்னர் அக்குச்சியை, இரண்டாக, சரிசமமான அளவாக, ஒடித்து விடாமல் மடிப்பார்கள்.
பிறகு நிழல் சாயும் பக்கமாக, அந்த குச்சியின்,
ஒரு பாதியை, தரையில் கிடக்கும் படியாகவும், மறுபாதி, மேலே நிமிர்ந்து நிற்கும் படியாகவும்
வைப்பார்கள்.
நிமிர்ந்து நிற்கும் குச்சியின் நிழல், சரியாக,
கீழே படுத்துக் கிடக்கும் குச்சியின் மேல் விழும்படிச் செய்வார்கள்.
நிமிர்ந்து நிற்கும் குச்சியின் நிழல், கீழே
படுத்து உறங்கும் குச்சியை விட, நீளமாக இருக்குமானால், நிமிர்ந்து நிற்கும் குச்சியின்
உயரத்தை, கொஞ்சம் கொஞ்சமாக உடைத்து, குச்சியின் நிழலும், படுத்துறங்கும் குச்சியின்
நீளமும், சமமாக இருக்குமாறு அமைப்பார்கள்.
நிமிர்ந்து நிற்கும் குச்சியின் நிழலைவிட, படுத்துறங்கும்
குச்சியின் நீளம் அதிகமாக இருப்பின், படுத்துறங்கும் குச்சியை உடைத்து, நிழலுக்குச்
சமமாக குச்சியின் நீளத்தைக் குறைப்பார்கள்.
இவ்வாறு, மேற்பகுதியிலோ, கீழ்ப் பகுதியிலோ ஒடித்து,
ஒடித்து, நிழலையும், கீழேக் கிடக்கும் குச்சியையும் சமப்படுத்துவார்கள்.
விரற்கடையின் அளவே நாழிகை என்பதை அறிவார்கள்.
இந்த நாழிகையினை, காலைப் பொழுதாயின், கடந்து
விட்ட நாழிகை எனவும், பிற்பகல் பொழுதாயின், மீதமிருக்கும் நாழிகை எனவும் கணக்கிட்டு
அறிவார்கள்.
இம்முறையினைப் படிப்பதற்குத்தான் நேரமாகுமே தவிர,
கணக்கிடுவதற்கு, ஒரு நிமிடம் கூட ஆகாது.
குச்சியின் நீளம் ஐந்து விரற்கடை எனில், காலைப் பொழுதில் கடந்தது ஐந்து நாழிகை. மணி எட்டு.
( 5
நாழிகை X 24 நிமிடம் = 120 நிமிடங்கள்
= 2 மணி )
( காலை 6 மணி + 2 மணி = 8 மணி)
பிற்பகலாயின், மீதமிருப்பது ஐந்து நாழிகை. மணி
நான்கு.
( மாலை 6 மணி – 2 மணி = மாலை 4 மணி)
காட்டுத் துரும்பெடுத்து
கண்டம் பதினாறாக்கி
நீட்டிக் கிடத்த அங்கு
நின்றதுவே நாழிகையாம்.
எவ்வளவு எளிமையாய், இனிமையாய், இம்முறையினை நம்
முன்னோர் பாட்டாக எழுதி வைத்திருக்கிறார்கள் பாருங்கள்.
இதனைவிட எளிமையான, மற்றொரு முறையினையும் நம்
முன்னோர் பயன்படுத்தி வந்துள்ளனர்.
ஒருவர் வெயிலில் நிமிர்ந்து நிற்பார்.
விழும் நிழலின் நீளத்தை அளப்பார்.
நிழலின் நீளத்தோடு, ஐந்தினைக் கூட்டுவார்.
கூட்டி வந்த கூட்டுத்தொகையால், நூறை வகுப்பார்.
கிடைக்கும் ஈவே நாழிகை.
காலை நேரம் ஆயின் கடந்த நேரமாகும்.
பிற்பகல் நேரமாயின், மீதமிருக்கும் நேரமாகும்.
நிழலின் நீளம் 5 அடி எனில், 5 + 5 = 10
அடுத்து 100 ஐ பத்தால் வகுக்க வேண்டும்
நூறை
பத்தால் வகுத்தால் கிடைக்கும் ஈவு பத்து ஆகும்.
காலை எனில் கடந்தது பத்து நாழிகை.
மாலை எனில், மீதமிருப்பது பத்து நாழிகை.
இன்றைய கணக்குப்படி,
10 நாழிகை x 24 நிமிடம் = 240 நிமிடங்கள் = 4 மணி நேரம்
காலைப் பொழுது எனில், காலை 6.00 மணியில் இருந்து
4 மணி நேரத்தைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.
காலை 10.00 மணி
பிற்பகல் எனில்.
மாலை 6.00 மணியில் இருந்து 4 மணி நேரத்தைக் கழித்துக்
கொள்ள வேண்டும்.
பிற்பகல் 2.00 மணி.
இதற்கும் ஒரு பாட்டு வைத்திருக்கிறார்கள், நம்
முன்னோர்.
அடியளந்து பாண்டவரைக்
கூட்டித் துரியோதன்
முதலோரை வகுக்க வந்த
ஈவு பகல் நாழிகை.
வியப்பாக இருக்கிறதல்லவா.
இதுபோன்று, பகல் நேரத்தை மட்டுமல்ல, விண்மீன்களைக்
கொண்டு இரவு நேரத்தையும் பல வழிகளில் கணித்திருக்கிறார்கள் நம் முன்னோர்.
நம் முன்னோர் பெருமைக்கு உரியோர்.
போற்றுதலுக்கு உரியோர்.
பெருமிதத்திற்கும் உரியோர்.
நண்பர்களே,
வணக்கம்.
தங்களின் தொடர் வாழ்த்துகளாலும், ஊக்குவித்தலாலும்,
மேலும் எனது இரு நூல்கள் அமேசான் தளத்தில் இணைந்துள்ளன.
தரவிறக்கம்
செய்ய, நூலின் பெயரினைச் சொடுக்கவும்
வலைச்
சித்தருக்கு ஜெ
சிறப்பான தகவல் ஐயா...
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்கு2 மின்னூல்களையும் தரவிறக்கம் செய்து கொள்வேன்... நன்றி ஐயா...
பதிலளிநீக்குதங்களின் வழிகாட்டலே இம்மின்னூல்களுக்குக் காரணம் ஐயா
நீக்குநன்றி
பின்புலத்தில் மெல்லிய இசையோடு உங்களின் அசத்தல் குரலில் 'குரல் வழிப் பதிவு' மிகவும் ரசித்தேன்... வாழ்த்துகள்...
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குஅருமையான செய்தி அண்ணா. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குஅருமையான பகிர்வு. வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குஅரிய தகவல் நண்பரே...
பதிலளிநீக்குமின்நூல்கள் வெளியீட்டுக்கு வாழ்த்துகள்.
தரவிறக்கம் செய்கிறேன் நண்பரே...
நன்றி நண்பரே
நீக்குகுரல் ஒலிப்பேழை கேட்டேன் நண்பரே...
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குவியப்பான தகவல்கள்.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குகுரல்வழிப் பதிவு இன்றுதான் முதன்முறை கேட்டேன். அருமை.
பதிலளிநீக்குமகிழ்ந்தேன்
நீக்குநன்றி நண்பரே
அரிய தகவல்களுடன் அருமையான பகிர்வு!
பதிலளிநீக்குதிருவிசை நல்லூருக்கு கும்பகோணத்திலிருந்து எப்படிச் செல்ல வேண்டும்?
' பண்பெனப்படுவது' நூலில் அப்துல் கலாம் அவர்களது ஓவியம் மிகவும் அழகு!
கும்பகோணம் நகரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் 8 கிமீ தூரத்தில் உள்ளது திருவிடை மருதூர். அங்கிருந்து வட மேற்கு திசையில் 3 கிமீ தூரத்தில் திருவிசநல்லூர் திருத்தலம் இருக்கிறது.
நீக்குதிருவிடைமருதூரிலிருந்து காவிரி ஆற்றைக் கடந்து 10 நிமிடங்கள் பயணித்தால் திருவிசநல்லூர் பகுதியை அடைய முடியும். மொத்தம் 4 கிமீ தூரம் ஆகும்.
அப்துல் கலாம் அவர்களது ஓவியம் இணையத்தில் கிடைத்தது.
நன்றி சகோதரியாரே
தகவல் தெரிவித்ததற்கு இனிய நன்றி!!
நீக்குவாய்ப்பிருப்பின் சூரிய கடிகாரத்தை நேரில் பார்த்து ஒரு பதிவு எழுதுங்கள்
நீக்குஒவ்வொரு பதிவிலும் புதிய மின்னூல்கள் பற்றிய செய்தி உங்களின் எழுத்தார்வத்தையும், ஈடுபாட்டையும் வெளிப்படுத்துகிறது. மற்றவர்களுக்கு ஊக்கத்தைத் தருகின்ற பணி மென்மேலும் சிறக்க மனம் நிறைந்த வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஞானசம்பந்தரால் பாடல் பெற்ற திருவிசநல்லூர் கோயிலுக்குச் சென்றுள்ளேன். அந்தக் கடிகாரத்தைப் பார்த்துள்ளேன்.
நீக்குநானும் ஒரு முறை திருவிச நல்லூல் கோயிலுக்குச் சென்றிருக்கிறேன்
தங்களது வாழ்த்திற்கு நன்றி ஐயா
சிறப்பான படைப்பு
பதிலளிநீக்குமகிழ்ச்சி - தங்கள்
மின்நூல்களைப் பதிவிறக்கிப் படிக்கிறேன்.
மிகவும் வியப்பான தகவல்கள்
பதிலளிநீக்கு//இதுபோன்று, பகல் நேரத்தை மட்டுமல்ல, விண்மீன்களைக் கொண்டு இரவு நேரத்தையும் பல வழிகளில் கணித்திருக்கிறார்கள் நம் முன்னோர்.//
இது இன்னும் வியப்பான தகவல்.
நல்ல தகவல்கள். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
குரல்வழிப்பதிவும் நன்றாக இருக்கிறது
மின்னூல் வெளியீட்டிற்கு வாழ்த்துகள்!
துளசிதரன்
கீதா
நன்றி ஐயா
நீக்குஅதுவொரு கணக்கு. கற்றுக் கொண்டேன்
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குமிக அருமையான பதிவு ஐயா ...நல்ல தகவல்களை அறிந்துக் கொண்டேன்..
பதிலளிநீக்குசெய்து பார்க்கும் ஆசை வருகிறது ...
தங்களின் மின்னூல்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா ...முந்தைய நூல்களை தரவிக்கி விட்டேன் ...இனி தான் வாசிக்க வேண்டும்
நன்றி சகோதரி
நீக்குநல்ல பதிவு நண்பரே
பதிலளிநீக்குதஞ்சை மண் காலத்தை அளவிடுதலிலும் முதன்மையில் இருக்கிறது என்ற தங்களது கட்டுரை வாயிலாக கண்டேன். மகிழ்ந்தேன்.
உங்களது அறிவுத்தேடல் எங்களுக்கு பயனுள்ளதாக அமைகிறது.
நன்றி நண்பரே
நீக்குசிறப்பான தகவல் ஐயா, காலத்தை அளக்கும் கருவியை கண்டுபிடித்ததில் முன்னோடி நான் வாழும் நாட்டார் என்றாலும் காலத்தை தடி கொண்டு கணப்பொழுதில் அளந்த எம் மூதாதையோர் என்னும் விடயம் அறிந்திருந்தாலும் அதன் சரியான விளக்கம் உங்கள் மூலம் தான் அறிகின்றேன். உங்கள் தளம் என்னால் மேலோட்டமாகப் படிக்கும் தளம் அல்ல. குறிப்பு எடுப்பது வழக்கம். நன்றி ஐயா
பதிலளிநீக்குநன்றி சகோதரி
நீக்குசிறப்பான தகவல்கள். எத்தனை திறம்பட இருந்திருக்கிறார்கள்.
பதிலளிநீக்குமின்னூல்கள் - வாழ்த்துகளும் பாராட்டுகளும். தொடரட்டும் மின்னூல்கள்.
நன்றி ஐயா
நீக்குதொடர்ந்து பயனுள்ள பல தகவல்களைப் பகிர்ந்து வரும் உங்களுக்கு மிகவும் நன்றி ஐயா.
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குதங்களின் இந்த பதிவினை படிக்க படிக்க மிகுந்த ஆர்வமாய் இருந்தது நண்பரே.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்கு