27 ஜூன் 2014

லூயிஸ்

    

ஆண்டு 1815. பாரீஸ் நகரில் அமைந்த பள்ளி அது. சிறுவன் லூயிஸை அந்தப் பள்ளியில்தான் சேர்க்க வேண்டும், அந்தப் பள்ளியால் மட்டும்தான், தன் மகனின் எதிர்கால வாழ்வை, ஒளிமயமானதாக உருவாக்க முடியும் என்று, லூயிஸின் தந்தை திடமாக நம்பினார்.

     செலவைப் பற்றிக் கவலையில்லை. என் மகனுக்காக, என் மகனின் எதிர்கால நலனுக்காக, இருபத்தி நான்கு மணி நேரமும் உழைக்கத் தயார். உழைப்பின் மூலம்  கிடைக்கும் ஒவ்வொரு பைசாவினையும், ஒவ்வொரு ரூபாயினையும், என் மகனுக்காகச் செலவிடவும் தயார். என் மகனுக்கு ஓர் இடம் தாருங்கள்.

20 ஜூன் 2014

ஒரு வருத்தம், ஒரு மகிழ்ச்சி, ஒரு நெகிழ்ச்சி, ஒரு சந்தேகம்


நண்பர்களே, வணக்கம். நலம்தானே. கடந்த ஆறு நாட்களாக வலைப் பக்கமே வர இயலாத நிலை. பள்ளிக்குச் சென்றும் ஐந்து நாட்களாகி விட்டது. காரணம் மனைவியின் உடல் நலக் குறைவு. சிறுநீரகக் கல்லால், பெரும் வேதனையினை என் மனைவி சந்தித்திருக்கிறார்.

     நண்பர்களே, என் மனைவியின் துயர் குறித்து பகிர்வதற்காக இப்பதிவினை எழுதவில்லை. இவ்வாரத்தில், என்னால் ஒரு பதிவருக்கு ஏற்பட்ட வருத்தம், வருத்தம் மறைந்தமையால் ஏற்பட்ட மகிழ்ச்சி, மற்றொரு மூத்த பதிவர், இந்த எளியேன் மேல் காட்டிய அன்பால் ஏற்பட்ட நெகிழ்ச்சி, மருத்துவச் சோதனைகள் குறித்த ஓர் சந்தேகம், இவற்றைப் பரிமாறிக் கொள்ளவே இப்பதிவு.

12 ஜூன் 2014

மால்குடி


     
இலண்டன். ஆண்டு 1934. நன்றாக மழை பெய்து கொண்டருக்கிறது. வீட்டிற்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருக்கிறார் அவர். எழுத வேண்டிய வேலை நிரம்ப இருக்கிறது. ஆனாலும் காலையில் இருந்தே அவர் மனம், ஏனோ வெறுமையாய் இருந்தது.

     நடந்து, நடந்து அலுத்தவர் நாற்காலியில் அமர்கிறார். மேசையில் புத்தகங்கள், மூலையில் ஒரு பழைய காகிதக் கட்டு. இது என்ன? யோசித்தவாரே, அந்தக் காகிதக் கட்டினைக் கையில் எடுத்துப் புரட்டுகிறார். மணி மணியான எழுத்துக்கள், பக்கத்துக்குப் பக்கம்.

05 ஜூன் 2014

கோரா



ஆண்டு 1930. அவர் ஒரு காந்தியவாதி. தேசியப் பற்று, அரிசன முன்னேற்றம் போன்ற காந்தியாரின் கொள்கைகளில் மிகுந்த பிடிப்பு உடையவர். உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்கு பெற்றவர். உப்பு சத்தியாக்கிரகத்தில் பங்கு பெற்றதோடு மட்டுமன்றி, அக்கால கட்டத்தில் பிறந்த, தன் மகனுக்கு லவனம் எனவும் பெயரிட்டவர். லவனம் என்றால் உப்பு.

      காந்தியவாதிகளில் இப்படி பெயர் வைத்தவர்கள் வேறு யாராவது இருக்கிறார்களா என்ன? இப்படிப்பட்ட காந்தியவாதிக்கு நீண்ட நாட்களாக ஓர் ஆசை. காந்தியை ஒரு ஒரு முறையேனும் நேரில் சந்திக்க வேண்டும். ஓரிரு வார்த்தைகளாவது அவருடன் பேசிட வேண்டும்.