நண்பர்களே, நம் ஒவ்வொருவர்
குடும்பத்திற்கும் குல தெய்வம் என்று ஒரு தெய்வம் இருக்கும். குல தெய்வம் என்பது பெரும்பாலும், ஊருக்கு
வெளியில் இருக்கும் காவல் தெய்வமாகவே இருக்கும்.
எங்கள் குடும்பத்தின் குல தெய்வம் போல், உங்களுக்கு
அமைந்திருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. ஆம் நண்பர்களே, எங்கள் குல தெய்வம்,
ஊருக்கு வெளியில் மட்டுமல்ல, ஆற்றிற்கு நடுவில் அமைந்துள்ளது.
தீவு என்ற சொல்லை நாம் நன்கறிவோம்.
நாற்புறமும் கடலால் சூழப்பட்ட நிலப்பகுதி தீவு எனப்படும். எங்கள் குல தெய்வம்
இருக்கும் இடமும், ஒரு தீவுதான். ஆனால் கடலால் அல்ல, ஆற்றினால் நாற்புறமும்
சூழப்பட்ட, அதுவும் கொள்ளிடம் ஆற்றினால் நாற்புறமும் சுற்றி வளைக்கப்பட்ட, ஒரு
சிறு நிலப் பரப்பில், ஒரு திட்டில் எங்கள் குல தெய்வம் கோயில் கொண்டுள்ளது.