சந்தித்தாக வேண்டியதை
எதிர்கொள்பவனை நான் நேசிக்கிறேன்
வெற்றிகரமாக
அடிவைத்து சந்தோஷமான இதயத்துடன்
தினசரி சண்டையில்
பயமின்றி சண்டையிடுபவன் அவன்.
பொறாமை இல்லை,
மனிதரிடம் நம்பிக்கை இழப்பதில்லை
எப்போதும் சிறப்பாக
செயல்படுவான்.
தன்னைவிடக் கீழானவர்களைக்
கண்டு அவன் புலம்புவதில்லை.
புன்னகையுடன்,
நம்பிக்கையான வார்த்தைகளுடன்
போராடும்
ஒவ்வொருவனுக்கும் உற்சாகமூட்டுவான்.
அவன் உன்னதமானவன்
உன்னதமான வாழ்வினால்
விதியை வென்றவன்.
-
சாரா கே.போல்டன்
சார், நல்லா இருக்கீங்களா. நாளை நித்யாவிற்கு வளைகாப்பு.
கடந்த ஏப்ரல் மாதத்தின்
தொடக்கத்தில், ஓர் நாள், அலைபேசி அழைத்த போது, வகுப்பில் இருந்தேன்.
வகுப்பறைக்கு வெளியே வந்து,
அலைபேசியின் திரையினை வருடி, காதருகே கொண்டு சென்ற பொழுது, வெளிப்பட்ட
வார்த்தைகளில் மகிழ்ச்சியும், நட்பும், குழைந்து இணைந்து இன்பத் தேனாய் செவிகளில்
பாய்ந்தன.
நண்பர்களே, அழைத்தவர் யார்
தெரியுமா?