ஒரு நாள் மாலை நேரத்தில், நாமக்கல்லின் நகர
மண்டபத்திற்குள் நுழைந்தார். மெதுவாக, மிகவும் பொறுமையாக, நகர மண்டபத்தைச்
சுற்றிப் பார்த்தார்.
சுவற்றில் பல ஓவியங்கள் வரிசையாய், மண்டபத்திற்கே
மெருகூட்டிக் கொண்டிருந்தன. ஓவியங்களை ஒவ்வொன்றாக பார்த்து ரசித்தவாறு நகர்ந்தவர்,
ஓர் ஓவியத்த்தின் அருகில் வந்தவுடன், அசையாமல் நின்றுவிட்டார்.
ஓவியத்தின் கருனை மிகுந்த கண்களும்,
அறிவுச் சுடர் வீசும் முகமும் அவரை அசையாமல் நிறுத்திவிட்டது.