31 மே 2017
27 மே 2017
22 மே 2017
சோலச்சி
மகாகவி பாரதியின் வாழ்வு பற்றியும்,
பாரதியின் எழுச்சி மிகு கவிதைகள் பற்றியும், பள்ளியின் தலைமையாசிரியர் திரு இக்னேசியஸ்,
உள்ளத்து உணர்வுகளைக் கிளர்ந்தெழச் செய்யும் வகையில், பாடம் நடத்தியதை, மனதில் அசை
போட்டவாறே, வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தான், அந்த ஐந்தாம் வகுப்பு மாணவன்.
வீட்டிற்குள் நுழைந்தான்.
வீட்டுச் சுவற்றில், அடுப்பின் கரித் துண்டினால்,
அண்ணன் ஏதோ எழுதிக் கொண்டிருந்தான்.
அன்பே ஆருயிரே
அழகின் வடிவே
அன்னக் கிளியே
அம்மா நீ எங்கே ……
16 மே 2017
விபுலாநந்தர்
திருக்கொள்ளம்
புதூர்
தஞ்சாவூர், திருவாரூர் சாலையில், கொரடாசேரியில்
இருந்து இடதுபுறம் திரும்பி, கும்பகோணம் சாலையில் பயணித்தால், சிறிது தொலைவிலேயே, குடவாசல்
என்னும் சிற்றூர், நம்மை எதிர் கொண்டு வரவேற்கும்.
குடவாசலைத் தாண்டி, ஒரு சில கிலோ மீட்டர் தொலைவில்,
இடது புறம் திரும்பிய, சில நிமிடங்களில், கம்பீரமாய் தலை நிமிர்ந்து நிற்கிறது ஒரு
திருக்கோயில்.
திருக்கொள்ளம்புதூர்
திருக்கோயில்.
நற்சாந்துப்பட்டி, கோனூர் சமீன்தார் திரு பெ.ராம.ராமன் அவர்களால், பெரும் பொருட்
செலவில், முழுவதுமாய், திருப்பணிச் செய்யப் பெற்று, புது உருவமும், புதுப் பொலியும்
பெற்ற திருக்கோயில்.
11 மே 2017
பட்ட மிளகாய்
ஆனால், பன்னிரெண்டாம் வகுப்போடு, இவருக்கும்,
படிப்புக்குமான பந்தம் முடிந்து போனது.
காரணம் சூழல்.
குடும்பச் சூழல்.
படித்தது போதும், வேலைக்குப் போ, என வறுமை இவரை
விரட்டியது, பள்ளியை விட்டுத் துரத்தியது.
04 மே 2017
தேடப்படுபவர்
நாளும் பொழுதும்
தமிழ்தான் தமிழரின்
முகவரியென்று உரைப்பவர்.
உறவுக்கும் நட்புக்கும்
உப்பாகக் கரைபவர்.
நிலவாகச் சிரித்தாலும்
நித்திலமாய் ஜொலித்தாலும்
சந்தணமாய் கமழ்ந்தாலும் – கைகுலுக்கித்
தென்றலாய் தவழ்ந்தாலும்
முதுகு சொரிவதை
முகமன் கூறுவதை தவிர்ப்பவர்.
முன்னுக்குப் பின்
முரணாக நடப்போரை வெறுப்பவர்.
அதிகாரத்தால் அந்தஸ்தால்
அவலம் நிகழ்ந்தால் துடிப்பவர்.
அவ்வப்பொழுது
பாட்டெழுதி பட்டாசாய் வெடிப்பவர்.