31 மே 2018

மறக்கப்பட்ட புரட்சி





     இந்திய மக்களுக்குச் சுதந்திரம் அளித்தால், அதிகாரம் நாணயமற்றவர்கள், கொள்ளைக்காரர்கள் மற்றும் போக்கிரிகள் கைகளுக்குச் சென்றுவிடும்.

     ஜாதி, மதம், பதவி ஆகிய காரணங்களுக்காகவும் மற்றும் எந்த காரணமும் இல்லாமலும் கூட, தங்களுக்குள் அடித்து மோதிக் கொள்வார்கள்.

     இந்திய நாடே மலிவான அரசியல் சண்டை, சச்சரவுகளால் காணாமல் போகும் நிலை வரும்.

22 மே 2018

மீண்டும் சந்திப்போம்



     சிறுவயதில், என் விரல் பற்றி அழைத்துச் சென்று, இவ்வுலகை எனக்கு அறிமுகப் படுத்திய, என் அன்பு  சித்தப்பாவின்,

11 மே 2018

கல்வியே அழகு



குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு

      வாரிவிடப்பட்ட கூந்தலும், நன்கு உடுத்தப்பட்ட உடையும், ஒப்பனைக்காக முகத்தில் பூசப்பட்ட மஞ்சளும் ஒருவருக்கு உண்மையில் அழகே அல்ல.

06 மே 2018

இராஜராஜன் விருது




      தென்னம நாடு

      தென்னவன் நாடு

      தஞ்சாவூர், ஒரத்தநாட்டிற்கு அருகில் உள்ள சிற்றூர்.

      பாண்டிய மன்னன் ஒருவன் படையுடன் வந்து, இவ்வூரில் சில காலம் தங்கி இருந்த காரணத்தால் தென்னவன் நாடு என இவ்வூர் அழைக்கப் படுகிறது.

      பாண்டிய மன்னன் இவ்வூரில் தங்கியிருந்த காலத்தில், ஒரு சிவலிங்கத்தை நிறுவி, பூசைகள் செய்து, உணவு உண்டதன் காரணமாக, இவ்வூரில் இச்சிவலிங்கம் உறையும் கோயில், இன்றும், பாண்டியுண்டான் என்றே அழைக்கப்படுகிறது.