26 அக்டோபர் 2018
19 அக்டோபர் 2018
கப்பலேறிய யானை
பிறவாமை வேண்டும் மீண்டும்
பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும்
வேண்டும்நான் மகிழ்ந்து பாடி
அறவாநீ ஆடும் போதுன்
அடியின்கீழ் இருக்க வேண்டும்
காரைவனம் என்னும் மாநகரில் பிறந்தப்
புனிதவதியார் பாடிய, தேவாரப் பாடல் இது.
காரைவனம்
இன்றைய காரைக்கால்
புனிதவதியார்
காரைக்கால் அம்மையார்
மனித உரு நீங்கி, பேயுரு பெற்ற, காரைக்கால் அம்மையார்,
என்றென்றும் சிவனின் காலடியில் இருக்க விரும்பி, வரம் கேட்க, இறைவனும் அருளியதாக உரைக்கின்றன,
நம் இலக்கியங்கள்.
12 அக்டோபர் 2018
முத்தன் பள்ளம்
ஒரு திருப்பத்தில் நான்கு ஆண்கள், தலைக்கு மேலாகக்
கட்டிலைத் தூக்கிக் கொண்டு விரைந்து வந்து கொண்டிருந்தார்கள். நான்கு பேரும், கட்டிலின்
நான்கு கால்களைப் பிடித்திருந்தார்கள்.
அவர்களுக்குப் பின்னே இரண்டு பெண்கள், தலைவிரி
கோலமாக ஓடி வந்தார்கள். அவர்களின் தலைமயிர்கள் கலைந்து விரிந்து கிடந்தன. அவர்களின்
அழுகுரல் அத்தனை தூரம் தாண்டியும் சன்னமாகக் கேட்டது.