குலன் அருள் தெய்வம்
கொள்கை மேன்மை
கலைபயில் தெளிவு கட்டுரை
வன்மை
நிலம்மலை நிறைகோல்
மலர்நிகர் மாட்சியும்
உலகியல் அறிவோடு உயர்குணம்
இணையவும்
அமைபவன் நூலுரை யாசிரி
யன்னே.
ஓர் ஆசிரியர் என்பவர், உயர் குடியில் பிறந்தவராகவும், பல நூல்களைக் கற்றறிந்த
அறிவும், அவ்வறிவை மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில், எடுத்துக் கூறத்
தகுந்த ஆற்றல் உடையவராகவும், நாவன்மை கொண்டவராகவும், நிலத்தையும், மலையையும், தராசுவையும்,
மலரையும் ஒத்த குணங்கள் உடையவராகவும், உலக ஒழுக்கத்தை உணர்ந்தவராகவும், உயர்ந்த குணங்கள்
பலவற்றை உடையவராகவும் இருக்க வேண்டும் என்பது நன்னூலாரின் கருத்தாகும்