மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய் பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே
என்னும்
தொல்காப்பியப் பாடல் வழி குறிப்பிடப்படும்
முல்லை, குறிஞ்சி, மருதம் மற்றும் நெய்தல் எனப்படும் நான்கு நிலப் பாகுபாடே,
இன்றைய அத்துணை வேளாண் ஆய்வுகளுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும் அடிப்படையாகும்.