இதுதாண்டா
மாப்பிள்ளை எங்களுக்குக் குலசாமி. இந்த ஊருக்கு ஒண்ணுமில்லாம வந்தோம். இந்த மண்ணும்,
இந்த சாமியும்தான் எங்களுக்கு வழி காட்டுச்சு.
பாப்பாவுக்கு ஆவணியில கல்யாணம் வச்சுருக்கிறேன்.
முத பத்திரிக்கையை அய்யனாருக்கு வச்சுட்டுப் போகலாம்னு வந்தேன்.
செல்வி அக்காவும், முருகேசன் மாமாவும் பத்திரிக்கையை
வச்சு, சாமி கும்பிட்டுவிட்டு சென்ற பிறகு, அந்த கல்யாணப் பத்திரிக்கையை எடுத்துப்
பிரித்துப் பார்த்தேன்.
பெண்ணின் தாய் மாமன் பெயராக, எங்கள் ஊரில் உள்ள ஏழு சாதி மக்களும் இருந்தார்கள்.