27 அக்டோபர் 2014

மதுரையில் மகிழ்ச்சி வெள்ளம்


மதுரை மன்னர் திருமலை நாயக்கர் அவர்களின் விருப்பப்படி, திருமலை நாயக்கர் மகாலைக் கட்டிட, மண் வளம் வாய்ந்த ஓர் இடத்தினைத் தேர்வு செய்து, அங்கு, 305 மீட்டர் நீளமாகவும், 290 மீட்டர் அகலமாகவும் தோண்டித் தோண்டி மண் எடுத்துச் சுட்டு, செங்கல் கற்களை உருவாக்கினர்.

      நாயக்கர் மகாலும் அழகுற கம்பீரமாய் உருவானது. மண் தோண்டி எடுத்த இடத்தில், பாங்குற ஒரு குளமும் உருவானது. இக்குளம்தான், வண்டியூர் மாரியம்மன் தெப்பக் குளம்

21 அக்டோபர் 2014

கரந்தை மாமனிதர்கள்


வான விரிவைக் காணும்போ தெல்லாம் – உமா
மகேச்சுரன் புகழே என் நினைவில் வரும்.

ஆன தமிழ்க் கல்லூரி நிறுவினோன் – மக்கள்
அன்பினோன், அறத்தினோன் ஆன்ற அறிவினோன்

பெற்ற அன்னையை அன்னாய் என்றுவாய்
பெருக அழைக்கவும் நேரமே யில்லை
உற்றார் உறவினர்க் காக உழைக்க
ஒருநாள் ஒருநொடி இருந்ததே இல்லை
கற்றவர் தமிழர் என்னுமோர் உயர்நிலை
காண வேண்டி இல்லந் துறந்து
முற்றுங் காலத்தைத் தமிழ்த் தொண்டாக்கினோன்
வாழ்க தமிழ் முனிவன் திருப்பெயர்

வான விரிவைக் காணும் போதெல்லாம் – உமா
மகேச்சுரன் புகழே என் நினைவில் வரும்

                                   - பாவேந்தர் பாரதிதாசன்

     நண்பர்களே, நான் பிறந்தது கரந்தை. நான் தவழ்ந்தது கரந்தை. நான் வளர்ந்தது கரந்தை. நான் பயின்றது கரந்தை. நான் பணியாற்றுவதும் கரந்தை.

     எனக்கு ஒரு நல் வாழ்வு, ஏற்றமிகு வாழ்வளித்த, கரந்தைக்கு, இதுவரை நான் என்ன செய்திருக்கிறேன்? என்னையேக் கேட்டுப் பார்க்கிறேன். விடைதான் தெரியவில்லை.

18 அக்டோபர் 2014

தில்லையாடி

     

தில்லையாடி வள்ளியமை


ஆண்டு 1914. தென்னாப்பிரிக்கா. ஜோகனஸ்பர்க். அதை வீடு என்று கூற முடியாது, ஒரு குடிசை. அக்குடிசையினுள், கிழிந்த பழையத் துணியினைப் போலத்தான், அப்பெண் கிடக்கிறார். எலும்புகளும், எலும்புகளை மூடிய தோலும் மட்டுமே மிச்சமிருக்கினறன. குழி விழுந்த கண்கள். அவ்வப்பொழுது ஏற்படும் சிறு சிறு அசைவுகள் மட்டுமே, அப் பெண்ணின் உடலில், இன்னமும் உயிர் இருக்கிறது என்பதை உணர்த்துகின்றன.

     கோட், சூட் அணிந்த வழக்கறிஞர் ஒருவர், கவலை தேய்ந்த முகத்துடன், அக்குடிசையினுள் நுழைகிறார். கிழிந்த பாயில் படுத்திருக்கும் உருவத்தைக் கண்டவுடன், அவரது கண்கள் கலங்குகின்றன. எப்படி இருந்த பெண் இப்படி ஆகிவிட்டாரே? இனி இப்பெண் பிழைக்கப் போவதில்லை என்பது பார்த்தாலே தெரிகிறது. நான்தானே, இந்நிலைக்குக் காரணம். என்னால்தானே, இப்பெண் போராட்டத்தில் குதித்தார்.

13 அக்டோபர் 2014

வேருக்கு நீர்


ஜுலை 15
காமராசர் பிறந்தநாள்
கல்வி வளர்ச்சி நாள்
நம் வாழ்நாளில், ஒரே ஒரு முறையேனும்,
ஒரே ஒரு ஏழை மாணவனுக்குக் கல்விக் கட்டணம் செலுத்துவோம்
இதுவே,
கர்மவீரர் காமராசருக்கு
நாம் செலுத்தும்
உண்மை அஞ்சலியாகும்.

     நண்பர்களே, கர்மவீரர் காமராசரின் பிறந்த நாள் அன்று வெளியிட்ட எனது பதிவினை, மேற்கண்டவாறுதான் நிறைவு செய்திருந்தேன்.

     இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், ஒரு மின்னஞ்சல் வந்தது.

08 அக்டோபர் 2014

களிறு கண்டேன்


நண்பர்களே, சிறுவர் முதல் முதியவர் வரை, அனைவரும் விரும்பும் ஒரு விலங்கு உண்டென்றால், அது யானையாகத்தான் இருக்கும்.

     யானைகள் கூட்டம் கூட்டமாக வாழும் இயல்புடையவை. யானைக் கூட்டங்களைப் பொறுத்தவரை குடியாட்சி கிடையாது. மன்னராட்சிதான். மன்னராட்சி என்பதுகூட தவறு, மன்னி ஆட்சிதான், இராணி ஆட்சிதான்.

     வயது முதிர்ந்த பெண் யானையே கூட்டத்திற்குத் தலைமையேற்று வழி நடத்தும். ஒரு கூட்டத்தில் மூன்று சோடிகள் மற்றும் யானைக் குட்டிகள் என பத்திற்கும் மேற்பட்ட யானைகள் இருக்கும்.

     ஒரு முறை, ஒரு பெண் யானை கூட்டத்திற்குத் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டால், அப்பொறுப்பு, அப்பெண் யானை இறக்கும் வரை தொடரும்.

01 அக்டோபர் 2014

செடிகளின் காதலர்


அப்பா

மகனின் குரல் கேட்டுத் திரும்பிப் பார்க்கிறார் தந்தை.

என்னோட மேற்படிப்புப் பற்றி, உங்களுடன் சிறிது நேரம் பேச வேண்டுமப்பா.

      தந்தை மகனை வியப்புடன் பார்க்கிறார். தன் மகனின் வயதுடைய மற்ற பிள்ளைகள் எல்லாம் பொறுப்பின்றி, எதிர்காலச் சிந்தனைகள் ஏதுமின்றி, மகிழ்ச்சியாக, ஊர் சுற்றித் திரியும்போது, இவன் மட்டும், படிப்பைப் பற்றிக் கவலைப் படுகிறானே. தந்தைக்கு மகிழ்ச்சி பொங்குகிறது.

சொல்லப்பா

நான் ஐ.சி.எஸ்., படிக்க விரும்புகிறேன் அப்பா. ஆனால் இப் படிப்பைப் படிக்க இலண்டனுக்குத்தான் சென்றாக வேண்டும். செலவு அதிகமாகும்.

செலவு கிடக்கட்டும். ஐ.சி.எஸ்., படித்து முடித்துவிட்டு, நீ என்ன செய்யப் போகிறாய்.