ஆண்டு 1919. அன்னியர் ஆட்சியில் அடிமைப் பட்டுக்
கிடந்த தேசம் அது. சீர்திருத்தச் சட்டம் ஒன்றினை இயற்றிய அன்னியர்கள், அச் சட்டத்தின்படி,
மாகாண, மத்திய சட்டசபைகளுக்குத் தேர்தல் நடத்த இருப்பதாக அறிவித்தனர்.
1920 இல் தேர்தலும் நடைபெற்றது. தேசிய அளவிலான
கட்சியும், மாகாண அளவிலான கட்சியும் தேர்தலை எதிர் கொண்டன.
கல்வியில், வேலை வாய்ப்பில், சமூகத்தில் உரிமை
வேண்டும், சமமாய் உரிமை வேண்டும், சம உரிமை வேண்டும் என்று உரத்துக் கூறி, மனித தர்மமே
இன்றைய தேவை என முழங்கியது மாகாணக் கட்சி.