28 மார்ச் 2019

நில மகள் 2



இந்த மண் உங்கள் மண் அல்ல.

        இந்த மண் உங்கள் சொந்த மண்ணே அல்ல.


       விஞ்ஞானிகள் திகைத்துத்தான் போயினர்.

       எவ்வித ஆய்வினையும் செய்யாமல், வெறும் கண்களால் பார்த்தே சொல்கிறீர்களே, எப்படி? நம்பும்படி இல்லையே? என்றனர்.

      மீண்டும் சொல்கிறேன், இது உங்கள் சொந்த மண் அல்ல.

      உங்கள் சொந்த மண், சுமத்ரா தீவின் அசல் மண், பூமிக்கும் கீழே, இரண்டு அடிக்கும் கீழே இருக்கிறது.

22 மார்ச் 2019

நில மகள்




    ஆண்டு 2006.

    இந்தோனேசியா.

    சுமத்ரா தீவு

    2004 ஆம் ஆண்டில் ஆழிப் பேரலைகள் அடுக்கடுக்காய் எழுந்து, சுனாமி என்னும் பெயரால், உலகையே புரட்டிப் போட்டதல்லவா? அச்சுனாமி, உயிர் பெற்று, பெரும் உக்கிரத்தோடு எழுந்த இடம்தான், இந்த சுமத்ரா தீவு.

17 மார்ச் 2019

சீனா தானா






     நேரில் பார்த்த அடுத்த நொடி, விரைவாய் விரிவும் அன்புப் புன்னகை.

     தன்னை அறியாமலேயே நீண்டு, நம் கரம் பற்றி மகிழும் மெல்லியக் கரங்கள்.

     பாசம் கலந்த நேசக் குரல்

12 மார்ச் 2019

தெருவில் படி




     ஆண்டு 1911.

     டிசம்பர் 13.

      இந்தியாவை ஆண்டுகொண்டிருந்த, ஆங்கிலேய நாட்டின், இளவரசர் ஐந்தாம் ஜார்ஜ் இந்தியாவிற்கு வந்திருந்தார்.

      இளவரசர் அல்லவா

      வரவேற்பு தடபுடலாக நடந்தது.

01 மார்ச் 2019

ஆசான் மறைந்தார்



     ஆண்டு 1989

     இவர் ஒரு பீகாரி

     தஞ்சாவூர் மாவட்டத் துணை ஆட்சியராகப் பொறுப்பேற்றார்.

     தமிழ் வார்த்தைகள் ஒன்றினைக் கூட அறியாதவர்

     இவருக்கு ஓர் ஆசை