காந்தி கணக்கு.
இந்தச் சொல்லாடலை, நாம் அனைவருமே அறிந்திருப்போம்.
காந்தி கணக்கு.
இதன் உண்மைப் பொருளை, இச் சொல்லாடல் உருவான கதையை அறிந்திருப்போர் குறைந்த அளவிலேயே இருப்பர்.
மகாத்மா காந்தி அவர்கள் உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தை அறிவித்தபோது,
பெரும்பாண்மையான வணிகர்கள், செல்வர்கள்,
இப்போராட்டத்தை ஆதரித்த போதிலும், இப்போராட்டத்தில் நேரடியாக பங்கெடுக்க விரும்பவில்லை.
இருப்பினும், சத்தியாகிரகத் தொண்டர்களுக்கு உதவ விரும்பினர்.
காற்று வெளியில், ஒரு செய்தியை ரகசியமாய் உலாவ விட்டனர்.