12 அக்டோபர் 2013

தஞ்சைக்கு வந்த சீனா

                                                     ஓவியம்  தருவாய், சிற்பம்
                                                               உணர்விப்பாய், கவிதை  யூட்டக்
                                                     காவியம் தருவாய், மக்கள்
                                                              கலகல வெனச்சி ரிப்பு
                                                    மேவிடும்  விகடம்  சொல்வாய்
                                                            மின்னிடும்  காதல்  தந்து
                                                    கூவுவாய், வீரப் பேச்சுக்
                                                            கொட்டுவாய்க்  கோலத்  தாளே   
எனப் பத்திரிக்கையின் மகத்துவத்தைப் பாடுவார் பாவேந்தர் பாரதிதாசன். நண்பர்களே, இக்கவிதை வலைப் பூவிற்கும் கச்சிதமாய்ப் பொருந்துகிறதல்லவா?

யாதும்  ஊரே  யாவரும்  கேளிர்
என்பார் கனியன் பூங்குன்றனார். கேளிர் என்றால் சுற்றம், நண்பர், உறவினர் என்பது பொருளாகும். நண்பர்களே, கனியன் பூங்குன்றனாரின், இவ்வரிகளுக்கு உயிர் கொடுத்து, மெய்ப்பித்து வருவது வலைப் பூ அல்லவா?

     நண்பர்களே, வலைப் பூ நமக்கு புதுப் புது உறவுகளை, நண்பர்களை, நாள்தோறும் வற்றாத அட்சய பாத்திரமாய் வழங்கிக் கொண்டே இருக்கிறது.

     நண்பர்களே, வலை உலகின் அட்சய பாத்திரமே என் இல்லம் நாடி வந்தது, எங்களையும், தன் சுற்றமாய், நட்பாய், உறவாய் இணைத்துக் கொண்டது என்று கூறினால் நம்புவீர்களா?

     உண்மை நண்பர்களே, உண்மை.

     கடந்த 7.10.2013 திங்கட் கிழமை காலை 8.30 மணியளவில், தஞ்சைக்கு, என் இல்லத்திற்கு, தன் மனைவியுடன் வருகை தந்தார் அன்பின் சீனா.


    


     தஞ்சையில் பிறந்தவர். மதுரையில் வளர்ந்தவர். சென்னையில் பணியாற்றி, மீண்டும் மதுரையில் குடிபுகுந்தவர். சங்கம் வைத்துத் தமிழ் வளர்க்கும் மதுரையில், வலைச்சரம் வைத்துத் தமிழ் போற்றுபவர்.

     தமிழ் கற்றவர். புலவர் இல்லை. ஆனால் புரவலர்.

     நாமெல்லாம் கணினியில் எழுதி, நமது எழுத்துக்களைக் கண்டு மகிழ்கிறோம். இவரோ பிறரை எழுதவைத்து அழகு பார்ப்பவர். புத்தம் புது வலை உலக எழுத்தாளர்களை அறிமுகப் படுத்துவதில் ஆனந்தம் அடைபவர்.

வலைப் பதிவு உலகின்
பிதாமகர்
வலைச் சரம்
நிருவாகக் குழுவின் தலைவர்.

எனக்கு எழுதுவதில் இருந்த இன்பத்தை விட, பதிவுகளைப் படித்துப் பார்ப்பதிலும், பொருள் பொதிந்த மறுமொழிகள் எழுதியதிலும் அதிக இன்பம் பெற்றேன். அதிக நேரம் செலவிட்டேன். அதிக நண்பர்களைப் பெற்றேன் என்கிறார்.

      சொல்ல மறந்து விட்டேன் நண்பர்களே இவரது முழுப் பெயர் சிதம்பரம் காசி விஸ்வநாதன் என்பதாகும். காரைக் குடியினைச் சேர்ந்தவர். சிதம்பரம் என்னும் பெயரினை அங்குள்ளோர், சீனா தானா என்றுதான் அழைப்பார்கள்.

     இவரோ தானா வைத் தனியே விட்டு விட்டு, அன்பை இணைத்துக் கொண்டார். அன்பின் சீனா ஆனார்.

     அன்பின் சீனா அவர்களின் மனைவி திருமதி மெய்யம்மை ஆச்சி.

    ஏதோ படிக்க வேண்டும் என்று படித்தேன். ஆனால் படித்தால்தான் சோறு என்பதை அசை போட்டே வளர்ந்தேன். கற்றபோது சுவைக்கவில்லை கல்வி. கற்பித்தபோது சுவைத்தது. என் சொல்லைக் கேட்டு சின்னஞ்சிறு உள்ளங்கள் மயங்கின. அவர்களை நல்லவர்கள் ஆக்க வேண்டும் என்றே நான் நல்வழி நடந்தேன். இதுதான் நான், இது – மெய். இதைத் தவிர வேறில்லை எனக்கு என்று கூறுகிறார்.

வாக்கு கற்றவன் வாத்தியார்
என்பர் நம் முன்னோர். இவர் முழுமையாக வாக்கு கைவரப் பெற்றவர். இவரது பேச்சு தமிழருவி.

     தற்பொழுது இலண்டனில் வசிக்கின்ற, இவரது மகள் கூறுவாராம்

                    எனது
                    தாயும் தந்தையும்
                    திருக்குறளின்
                    இரண்டு அடிகள்.

     திருமதி மெய்யம்மை ஆச்சி அவர்களும், ஒரு வலைப் பூ வைத்திருக்கிறார். வலைப் பூவின் பெயரே, இவரது உள்ளத்தை நமக்கு நன்கு உணர்த்தும்.

பட்டறிவும் பாடமும்

          நான் பிறந்தது தஞ்சையில். எட்டாம் வகுப்பு வரை படித்தது தஞ்சையில். 1963 ஆம் ஆண்டு மதுரையில் குடியேறினோம். தஞ்சை மண்ணில் கால் பதித்து, ஆண்டுகள் 50 கடந்து விட்டன. பிறந்த வீட்டினையும், படித்த பள்ளியினையும், மீண்டும் ஒரு முறை பார்க்க ஆவலாய் உள்ளேன் என எனக்கு முன்னரே மின்னஞ்சல் அனுப்பி இருந்தார் அன்பின் சீனா.

ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே
நினைவலைகளை நோக்கி ஓர் இனிய பயணம் தொடங்கினோம்.
 
மருத்துவர் தம்பையா
    முதன் முதலில் அகத்தியர் இல்லம் சென்றோம். அகத்தியர் வாழும் இல்லம் என்னும், எனது முந்தையப் பதிவினைப் படித்தமையால், முதலாவதாக அகத்தியர் இல்லம் செல்ல விரும்பினார்.

     அகத்தியர் இல்லத்தில், மருத்துவர் தம்பையா அவர்களை அறிமுகப்படுத்தினேன். ஐந்து நிமிடம், பத்து நிமிடமல்ல, இரண்டு மணி நேரத்திற்கும் மேல், பேசினர், பேசினர், பேசிக்கொண்டே இருந்தனர்.

                 செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது
                 வயிற்றுக்கும் ஈயப் படும்

     தமிழாசிரியை திருமதி மெய்யம்மை ஆச்சியும், தமிழ் உணர்ந்த ஞானி தம்பையா அவர்களும், பேசுவதைக் கேட்டேன், கேட்டேன், மெய் மறந்து கேட்டுக் கொண்டேயிருந்தேன்.

     அன்பின் சீனா அவர்கள் கேட்டார், மனம் என்பது நமது உடலில் எங்கிருக்கிறது?

     அதன்பின் நடந்த உரையாடலை விவரிக்கும் வயதோ, அறிவோ, அனுபவமோ எனக்கில்லை. மிகவும் தத்துவார்த்தமான உரையாடல் அது. பரவச நிலையில் அமர்ந்திருந்தேன்.


   
சுமார் இரண்டு மணி நேரம் கழித்து, அகத்தியர் இல்லத்தில் இருந்து, புறப்பட மனமின்றி புறப்பட்டோம். புறப்படுவதற்கு முன் அகத்தியர் இல்லத்தின், அருட்பெருஞ் ஜோதி அறக்கட்டளையின் சார்பாக, தினந்தோறும் நடத்தப் பெறும் அன்னதானத்தின் ஒரு நாள் செலவினை தான் ஏற்பதாகக் கூறி ரூ.3000 நன்கொடை வழங்கினார்.

    
யானையை விழுங்கும் பாம்பு

தஞ்சைப் பெரிய கோயிலுக்குச் சென்றோம். நண்பகல் 12.00 மணி. காலை ஊன்ற இயலவில்லை. வெயில் சுட்டுப் பொசுக்கியது, கோயிலில் நடக்கவே இல்லை. ஓடினோம்.

     சீனா அவர்கள், தான் பிறந்த வீடு, மேல வீதியும் தெற்கு வீதியும் சந்திக்கும் இடத்தில், சங்கட மடத்தினை ஒட்டியவாறு இருந்தது என்றார். இரு வீதிகளும் இணையும் இடத்திற்குச் சென்றோம். புதுப் புதுக் கட்டிடங்கள். இடையே இரண்டே இரண்டு பழமை மாறாத ஓட்டு வீடுகள்.

     இடது புறம் இருக்கிறதே ஒரு ஓட்டு வீடு, வீட்டின் முன் புறம் ஒரு சிறிய பெட்டிக் கடை. இந்த வீடு, இந்த வீடுதான் நண்பர்களே, நமது அன்பின் சீனா அவர்கள் பிறந்த வீடு. மழலையாய் தவழ்ந்த வீடு.







முகம் நிறைந்த மகிழ்வோடு, வீட்டினையே பார்த்துக் கொண்டு நிற்கிறார். வீட்டிற்குள் செல்ல முடியுமா? அனுமதிப்பார்களா? என்ற ஏக்கம் கண்களில் தெரிந்தது. நான் மெதுவாக, பெட்டிக் கடையில் இருந்த பெண்மணியிடம் விவரத்தைக் கூறினேன். சார், நீங்க கரந்தைதானே? என்றார். ஆம் கரந்தைதான். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் ஆசிரியராகப் பணியாற்றுகின்றேன் என்றேன். சார், நானும் சங்கத்தில்தான் படித்தேன். இது என்னுடைய வீடுதான். தாராளமாக வீட்டினுள் சென்று பாருங்கள் என்றார்.


     அடுத்த நொடி சீனா குழந்தையானார். வீட்டைச் சுற்றிச் சுற்றிப் பார்த்து மகிழ்ந்தார். நண்பர்களே, 50 ஆண்டுகளுக்குப் பிறகு, நாம் பிறந்த வீட்டினைப் பார்ப்பதற்கு இணையான மகிழ்ச்சி ஏதேனும் இருக்கிறதா என்ன?


       
 அன்பின் சீனா அவர்கள் சிறுவனாய் இருந்த பொழுது, சீனாவின் நண்பர்கள் பலர், கல்வி பயின்ற பள்ளி, கல்யாணசுந்தரம் மேனிலைப் பள்ளி. சென்றோம். அப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு பாண்டியராஜன் அவர்கள் எனது நண்பர். தலைமையாசிரியரைச் சந்தித்தோம். தாராளமாகப் பள்ளியைச் சுற்றிப் பாருங்கள் என்றார். கண்களில் மகிழ்ச்சி மின்ன, ஒவ்வொரு வகுப்பாகப் பார்த்தார் சீனா. சில மணித்துளிகள் கடந்த பின் அங்கிருந்து புறப்பட்டோம்.

     ஒவ்வொரு மனிதனாலும், மறக்க இயலாத பள்ளி என்று ஒன்று இருக்குமானால், அது அவர்கள் முதன் முதலில் கல்வி கற்க காலடி எடுத்து  வைத்த பள்ளியாகத்தான் இருக்கும். இதோ, இதுதான் நண்பர்களே, அன்பின் சீனா அவர்கள், அரைக்கால் டிராயர், சட்டையுடன், ஐந்து வயதில் தயங்கித் தயங்கி நுழைந்த முதல் பள்ளி. அன்பின் சீனா அவர்கள் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஐந்தாண்டுகள் தொடக்கக் கல்வியைப் பயின்ற பள்ளி.


  
  
 அ,ஆ, ..... எனத் தமிழ் எழுத்துக்களை சீனாவின் மனதில் முதன் முதலில் விதைத்த பள்ளி.

டி.கே.சுப்பையா நாயுடு தொடக்கப் பள்ளி

     இப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும், எனது நண்பர் திரு ஆறுமுகம் அவர்கள் அன்போடு வரவேற்றார். தலைமையாசிரியை முகம் மலர வரவேற்றார். சிறிய பள்ளிதான். எனினும் ஆயிரம், ஆயிரம் இளம் சிறார்களுக்கு எழுத்தறிவித்த ஆலயமல்லவா.



       தலைமையாசிரியர் அறையின் சுவர்களில் மாட்டப் பெற்றிருந்த படங்களை சீனா ஆர்வமுடன் பார்க்கிறார். சீனா அவர்களின் தலைமையாசிரியர் திரு வேணுகோபால் என்பவர், ஆசிரியர் தினம் கொண்டாடப் படுவதற்கு காரண கர்த்தாவான, மேதகு முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருட்டிணன் அவர்களிடமிருந்தே, நல்லாசிரியர் விருது பெறும் படம் சீனாவின் கண்களைக் கவர்ந்தது. எனது தலைமையாசிரியர், எனது தலைமையாசிரியர் என குழந்தைபோல் கூறினார்.

      சீனா அவர்கள் 6, 7 மற்றும் 8 ஆம் வகுப்புகளைப் பயின்ற பள்ளி வீரராகவா மேனிலைப் பள்ளி. மங்கல விலாஸ் எனப்படும் அரசர் காலத்துக் கட்டிடம். தரைத் தளத்தில் ஒரு காலத்தில் நீதி மன்றம் இயங்கி வந்தது. முதல் தளத்தில் பள்ளியின் 6,7 மற்றும் 8 ஆம் வகுப்புகள் இயங்கி வருகின்றன.

     இன்று தரைத் தளம் பயன்பாடின்றி பூட்டப் பட்டுள்ளது. மெதுவாகப் படிகளில் ஏறி, முதல் தளத்திற்குச் சென்றோம். அங்கிருந்த ஆசிரியைகள் வரவேற்றனர்.

     சீனா அவர்கள் அப் பள்ளியின் முன்னாள் மாணவர் என்பதை அறிந்தபோது, அந்த ஆசிரியைகளின் மகிழ்ச்சி இரட்டிப்பானது.


     இதோ, இதுதான் எனது வகுப்பு என்றார் சீனா. அங்கு வகுப்பறையில் அமர்ந்திருந்த மாணவர்களிடம் சிறிது நேரம் பேசுங்களேன் என்றேன்.


     மாணவர்களே, உங்களைப் போல் சிறுவனாய் நான் பயின்ற பள்ளி இது. நான் பயின்ற வகுப்பு இது. இன்று நான் வாழ்வின் உயர்ந்த நிலையில் இருப்பதற்கு இந்த பள்ளிதான் காரணம். கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் கடந்த நிலையில், எனது பள்ளியை, எனது வகுப்பைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையினால் இன்று இங்கு வந்துள்ளேன். மாணவர்களாகிய நீங்கள், நல்ல முறையில் பயின்று, என்னைப் போல் வாழ்வில் உயர வேண்டும் என்று மாணவர்களை வாழ்த்தினார்.




     அடுத்த நொடி மாணவர்கள், அன்பின் சீனா அவர்களைச் சூழ்ந்து கொண்டனர். கை கொடுத்து மகிழ்ந்தனர். தங்களது புத்தகத்தின், முதல் பக்கத்தில் கையொப்பமிட்டுக் கொடுங்கள் எனப் புத்தகத்துடன் சீனாவைச் சுற்றி வளைத்தனர்.

     ஒவ்வொரு மாணவனுக்கும் கையொப்பமிட்டுக் கொடுத்தார். அப்பொழுது அவர் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்க்க வேண்டுமே. தான் பயின்ற பள்ளியில், தான் பயின்ற வகுப்பில் அமர்ந்து, மாணவர்களுக்கு ஆட்டோகிராப் போடும் பொழுது ஏற்படும் இன்பத்திற்கு எல்லைதான் ஏது. இதற்குத் தானே ஆசைப் பட்டார் அன்பின் சீனா.

     நேரம் பிற்பகல் 2.30 ஆகிவிட்டதால், வீட்டிற்குத் திரும்பினோம். சிறிது நேர ஓய்வு. மீண்டும் 3.30 மணிக்குப் புறப்பட்டோம்.
மணி மாறன
     சரசுவதி மகால் நூலகம் சென்றோம். சுற்றுலா வந்த மாணவ, மாணவியர் வரிசையாய் நூலகத்திற்குள் சென்று கொண்டிருந்தனர். சரசுவதி மகால் நூலகத்தில் பணியாற்றும், எனது நண்பர் மணி.மாறன் என்கிற சரபோஜி அவர்களைச் சந்தித்தோம். நூலகத்தில் ஒவ்வொரு பகுதிக்கும் அழைத்துச் சென்று விவரங்களை எடுத்துரைத்தார்.

     பின்னர் அருங்காட்சியகம் பார்த்தோம். எனது அலைபேசி அழைத்தது. மறு முனையில் ஹரணி. எங்கிருக்கிறீர்கள் என்றார். அரண்மனையில் என்றேன். அடுத்த பத்தே நிமிடங்களில் நேரில் வந்தார். தஞ்சையின் மிக முக்கியப் பதிவர் ஹரணி. அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பேராசிரியர்.


ஹரணி
அரண்மனையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள மிகப் பெரிய திமிங்கலத்தின்
எலும்புக் கூட்டின் தலைப் பகுதியில் சீனாவுடன் ஹரணி
திமிங்கலத்தின் வால் பகுதியில் சீனாவுடன் நான்

     திருமதி மெய்யம்மை ஆச்சி அவர்கள் அண்ணாமலையில் பயின்றவர். ஹரணியோ அன்னாமலையில் பணியாற்றுபவர். கேட்கவும் வேண்டுமா? அதிலும் ஹரணிக்கு, அன்பின் சீனாவுடனும், திருமதி மெய்யம்மை ஆச்சியுடனுமான முதல் சந்திப்பு இது. உரையாடல் நீண்டு கொண்டே சென்றது. நண்பர்களே, மெத்தக் கற்றவர்களின் உரையாடலைக் கேட்பதும் இன்பம்தானே. கேட்டேன், ரசித்தேன்.

     பின்னர். புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில் சென்றோம். தொடர்ந்து மேல வீதியில் சங்கர நாராயண சாமி கோயில், காமாட்சி அம்மன் கோயில்.

    இரவு வீடு திரும்ப மணி 9.00 ஆகிவிட்டது. இருவரும் எனது இல்லத்திலேயே தங்கினர்.

     மறுநாள் காலை வைத்தீஸ்வரன் கோயில் செல்லப் புறப்பட்டனர். எனது மனைவியையும் உடன் அழைத்துச் சென்றனர். நான் பள்ளிக்குச் சென்றேன்.

     மாலை 4.00 மணியளவில் மூவரும் வீடு திரும்பினர். வைத்தீஸ்வரன் கோயிலில் வழிபட்டதை மறக்க இயலாது. அருமையான தரிசனம் என்றனர். பின்னர் பிரியா விடை பெற்று மதுரை புறப்பட்டனர்.

     நண்பர்களே வலையில் மீன்கள் சிக்கும். ஆனால் வலைப் பூவிலோ, புதுப் புது உறவுகள் மலர்ந்து மனம் வீசுகின்றன.


105 கருத்துகள்:

  1. நல்லோர் உறவு கிடைப்பது அரிது. அந்த அரிய வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கு. நீங்க அதிர்ஷ்டசாலி

    பதிலளிநீக்கு
  2. நட்பின் வலையில் சிக்கிய நறுமலர்கள். நல்லதொரு பதிவு. வாழ்க.. வளர்க!..

    பதிலளிநீக்கு
  3. அருமையான நட்பு தங்களுக்கு கிடைத்திருக்கிறது. போகும் இடமெல்லாம் உங்கள் நண்பர் ஒருவர் இருந்தைக் காணும் போது உங்கள் நட்பு வட்டம் புரிகிறது. நடந்தவற்றை அழகாக, அற்புதமாக பதிவாக தந்து அசத்தி விட்டீர்கள். நீங்கள் புதுக்கோட்டை கணினித் தமிழ்ப் பயிலரங்கத்திற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த போது உங்களுடன் கரம் குலுக்கிக் கொண்டது பசுமையான நினைவாக உள்ளது. சீனா அய்யா அவர்களின் வாழ்க்கை வரலாற்றையே நேர்த்தியாகக் கூறி சென்றுள்ளது தங்கள் எழுத்து. பகிர்வுக்கு நன்றீங்க அய்யா.

    பதிலளிநீக்கு

  4. திரு .அன்பின் சீனா அவர்களின் இளமைக்கால நினைவுகள் மலரும் நினைவாக மனதிற்கு மகிழ்ச்சியை தருகிறது. பதிவிற்கு பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  5. மிகவும் அருமையான பதிவு. தகவலுக்கு நன்றிகள்.

    மீண்டும் பொறுமையாக வருவேன்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  6. //
    ஞாபகம் வருதே
    ஞாபகம் வருதே// அழகான நினைவலைகள்.. சுவாரஸ்யம்!

    பதிலளிநீக்கு
  7. சொல்லா வார்த்தைகளே இல்லை..நெகிழ்ச்சிமிக்க பதிவு. சீனா ஐயா துணைவியாருடன் உங்கள் வீடு வந்ததை சென்ற இடங்களை அனுபவங்களை அழகாகப் பொறுமையுடன் எழுதி இருக்கிறீர்கள். வலையில் பல நட்பு(பூ)க்கள் மலர்கின்றன, மகிழ்ச்சி! மெய்யம்மை ஆச்சியின் தளம் மற்றும் ஹரணி அவர்களின் தளம் அறிந்துகொண்டேன் நன்றிங்க ஜெயக்குமார்!

    பதிலளிநீக்கு
  8. பிறந்த வீட்டினை சுற்றிப் பார்க்கும் போதும், படித்த வகுப்பறையை பார்க்கும் போதும், ஐயா அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள் என்று நினைக்கும் போதே மனம் துள்ளுகிறது... இனிமையான மறக்க முடியாத சந்திப்பு ஐயா... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐயா மறக்க முடியாத சந்திப்பு அச்சந்திப்பு. ஐயா அவர்கள் தன் இளமைக் கால நினைவுகளை அசை போடும் போது அருகில் இருக்கக் கூடிய நல் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. நன்றி ஐயா

      நீக்கு
  9. அருமையான பதிவு மற்றும் பயணம்.

    பதிலளிநீக்கு

  10. மிக நெகிழ்ச்சியான பதிவு!. சந்தோஷத்தில் மிகப் பெரிய சந்தோஷமே பிறரை சந்தோஷப்படுத்துவதுதான்.
    அதை மிகச் சரியாக செய்துள்ளீர்கள். வாழ்த்துகள் அய்யா!

    பதிலளிநீக்கு
  11. நண்பரே ! ஒவ்வொரு எழுத்தும்,ஒவ்வொரு வர்த்தையும் அன்பினில் தோய்த்து எழுதப்பட்டுள்ளது ! வாழ்த்துக்கள் ! ---காஸ்யபண்.

    பதிலளிநீக்கு
  12. வலை உலகின் அட்சய பாத்திரமே இல்லம் நாடி வந்து,தங்களையும், தன் சுற்றமாய், நட்பாய், உறவாய் இணைத்துக் கொண்டது மகிழ்ச்சியளித்தது..

    வலைப்பூ உலகில் மலர்ந்து மணம் வீசும் அழகிய பகிர்வுகள்..

    கற்றோரை கற்றோரே விரும்பி
    சுற்றமாக்கிக்கொண்ட அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  13. அன்பின் சீனாவும் அவரது மனைவி மெய்யம்மை ஆச்சியும் திருச்சியில் வலைப்பதிவர்களை சந்தித்துவிட்டு தஞ்சை சென்ற நாள் முதல் உங்கள் பதிவு எப்போது வரும் என்று ஆவலாய் எதிர்பார்த்து இருந்தேன். உங்கள் பதிவைக் கண்டதும் மிக்க மகிழ்ச்சி. நன்கு விளக்கமான பதிவு.

    // அன்பின் சீனா அவர்கள் கேட்டார், ” மனம் என்பது நமது உடலில் எங்கிருக்கிறது? ”
    அதன்பின் நடந்த உரையாடலை விவரிக்கும் வயதோ, அறிவோ, அனுபவமோ எனக்கில்லை. மிகவும் தத்துவார்த்தமான உரையாடல் அது. பரவச நிலையில் அமர்ந்திருந்தேன். //

    அன்புன் சீனாவின் நல்ல தத்துவமான கேள்வி. மருத்துவர் தம்பையாவுடன் நடந்த உரையாடலை அன்பின் சீனா அவர்கள் எழுதவேண்டும் என்பது எனது ஆசை.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா. மனம் பற்றி இருவரும் அதிக நேரம் பேசிக் கொண்டே இருந்தனர் ஐயா. அதனைக் காதால் கேட்கும் பாக்கியம் எனக்குக் கிட்டியது. உரையாடலை எழுத அன்பின் சீனா அவர்களை நானும் வேண்டுகிறேன்

      நீக்கு
  14. // முகம் நிறைந்த மகிழ்வோடு, வீட்டினையே பார்த்துக் கொண்டு நிற்கிறார். வீட்டிற்குள் செல்ல முடியுமா? அனுமதிப்பார்களா? என்ற ஏக்கம் கண்களில் தெரிந்தது. //

    தான் பிறந்து தவழ்ந்து வளர்ந்த அந்த வீட்டினைப் பார்ப்பதில்தான் எத்தனை மகிழ்ச்சி. அதேபோல அவர் படித்த பள்ளிகளையும் ஒரு குழந்தையாகவே மாறி பார்த்துள்ளார்.( பள்ளிகள் இருந்த இடத்தின் பெயரை சொல்ல மறந்து விட்டீர்கள் )
    // மாணவர்களே, உங்களைப் போல் சிறுவனாய் நான் பயின்ற பள்ளி இது. நான் பயின்ற வகுப்பு இது. இன்று நான் வாழ்வின் உயர்ந்த நிலையில் இருப்பதற்கு இந்த பள்ளிதான் காரணம். கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் கடந்த நிலையில், எனது பள்ளியை, எனது வகுப்பைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையினால் இன்று இங்கு வந்துள்ளேன். மாணவர்களாகிய நீங்கள், நல்ல முறையில் பயின்று, என்னைப் போல் வாழ்வில் உயர வேண்டும் என்று மாணவர்களை வாழ்த்தினார்.//

    அன்பின் சீனாவைப் போல ஒவ்வொருவரும் தான் படித்த கல்விநிலையங்களை எண்ணிப் பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பள்ளிகள் சீனா ஐயா அவர்களின் வீட்டிற்கு அருகிலேயே உள்ள பள்ளிகள்தான். கல்யாணசுந்தரம் மேனிலைப் பள்ளி, அய்யங்கடைத் தெருவில் உள்ளது. வீரராகவா மேனிலைப் பள்ளி, சீனா ஐயா அவர்களின் வீட்டிற்கு எதிரிலேயே உள்ள , தெற்கு வீதியிலும், டி.கே.சுப்பையா நாயுடு தொடக்கப் பள்ளி, தெற்கு வீதியை அடுத்துள்ள நாணயக்கார செட்டித் தெரு என்னும் குறுகிய சந்திலும் உள்ளது. வருகைக்கு நன்றி ஐயா

      நீக்கு
  15. // மறுநாள் காலை வைத்தீஸ்வரன் கோயில் செல்லப் புறப்பட்டனர். எனது மனைவியையும் உடன் அழைத்துச் சென்றனர். நான் பள்ளிக்குச் சென்றேன். //

    வெளியூர் செல்லும் அளவிற்கு உங்கள் மனைவி அந்த புதுமையான தலைவலியிலிருந்து ஓரளவு குணமடைந்து விட்டார் என்பதில் மிக்க மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐயா, தங்களைப் போன்ற நல் உள்ளங்களின் அன்பினாலும், வேண்டுதலினாலும், குணமடைந்து வருகிறார்.ஓரளவு அல்ல கிட்டத் தட்ட குணமடைந்து விட்டார். தங்களின் அன்பிற்கு நன்றி ஐயா

      நீக்கு
  16. பதிவைப் படிக்கும் எங்களுக்கே
    உள்ளம் அத்தனை பூரிக்குதெனில்
    இளமைக்கால நினைவுகளில் மூழ்கிய
    அன்பின் சீனா அவர்கள் எவ்வளவு
    சந்தோஷம் அடைந்திருப்பார், அதை உடனிருந்து
    அனுபவிக்கும்படி ஏற்பாடு செய்த உங்களுக்கு
    எங்கள் மனமார்ந்த நன்றி
    படங்களுடன் மிகச் சிறப்பான பதிவைத் தந்தமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா. உண்மையிலேயே, சீனா ஐயா தங்கியிருந்த இரண்டு நாட்களும், மகிழ்ச்சியோட நகர்ந்தன.

      நீக்கு
  17. பெயரில்லா12 அக்டோபர், 2013

    வணக்கம்
    ஐயா

    இப்படிப்பட்ட பெரியவர்களை சந்திக்க கிடைக்குமா என்ற மன ஏக்கத்துடன் எத்தனை பேர் இருப்பார்கள் அவர்களில் நானும் ஒருவன்.
    சீனா ஐயா பிறந்து வாழ்ந்து படித்த இடங்களை பார்க்கும் போது மிக சந்தோசம் அடைந்திருப்பார்....... அருமையாக பதிவை வெளியிட்ட உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  18. அன்பின் ஜெயக்குமார்

    நினைவுகளை எழுத்தாய்ப் பார்க்கின்ற போது நெஞ்சம் இனிக்கின்றது - நிகழ்வுகளை நிழற்படமாய் பதித்திருக்கும் பாங்கு எண்ணி எண்ணி மகிழத் தக்கது. நாமே சொல்வதை விட மற்றவர் சொல்வதைக் கேட்கும் பொழுதும் பார்க்கும் பொழுதும் மகிழ்வு பன்மடங்கு ஆகிறது ..........

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா. தங்களின் வருகை எங்களுக்கு மட்டுமல்ல,வலை உலக உறவுகளுக்கு எல்லாம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதை மறு மொழிகள் நன்கு உணர்த்துகின்றன ஐயா.
      தங்களுடன் பேசியதும், பழகியதும் பன்மடங்கு மகிழ்வினை ஏற்படுத்தி உள்ளது ஐயா. நன்றி

      நீக்கு
  19. // நண்பர்களே, வலை உலகின் அட்சய பாத்திரமே என் இல்லம் நாடி வந்தது, எங்களையும், தன் சுற்றமாய், நட்பாய், உறவாய் இணைத்துக் கொண்டது என்று கூறினால் நம்புவீர்களா?//

    நிச்சயமாக நான் நம்புவேன். அட்சயபாத்திரத்தை தங்கள் இல்லத்திற்கு அனுப்பி வைத்ததே எங்கள் திருச்சி மாநகர பதிவர்கள் தானே ! ;))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட்சய பாத்திரத்தை அனுப்பி வைத்த திருச்சி மாநகர பதிவர்களுக்க என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்து மகிழ்கின்றேன் ஐயா. அதிலும் குறிப்பாக தங்களுக்கு. இன்சுலின் ஊசி கூட எடுத்துக் கொள்ளாமல், நேரம் பார்க்காது, பதிவர்களின் வீட்டிற்கு சீனா அவர்களை அழைத்துச் சென்றதை, இருவருமே சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்கள் ஐயா. மீண்டும் ஒரு முறை நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

      நீக்கு
  20. //கடந்த 7.10.2013 திங்கட் கிழமை காலை 8.30 மணியளவில், தஞ்சைக்கு, என் இல்லத்திற்கு, தன் மனைவியுடன் வருகை தந்தார் அன்பின் சீனா.//

    தங்களின் அழகான இல்லமும், அற்புதமான உள்ளமும், வரவேற்பு நிகழ்ச்சிகளின் படங்களும் அருமையாய் உள்ளன. மிக்க மகிழ்ச்சி.

    >>>>>

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் உளமார்ந்த வாழ்த்திற்கு, மனமார்ந்த நன்றிகள் ஐயா

      நீக்கு
  21. //எனக்கு எழுதுவதில் இருந்த இன்பத்தை விட, பதிவுகளைப் படித்துப் பார்ப்பதிலும், பொருள் பொதிந்த மறுமொழிகள் எழுதியதிலும் அதிக இன்பம் பெற்றேன். அதிக நேரம் செலவிட்டேன். அதிக நண்பர்களைப் பெற்றேன் என்கிறார்.//

    உண்மைதான்.

    முழுமையாக ரஸித்துப் படித்தபின்னரே, முழுமையாகப் பின்னூட்டம் தருபவர்கள் எனக்குத்தெரிந்து மிகமிகக் குறைவான எண்ணிக்கையில் உள்ள ஒருசிலர் மட்டுமே. அதில் இவரும் ஒருவரே.

    ஒரு பதிவைப்படிக்கையில் மேம்புல் மேயும் பழக்கம் இவரிடம் கிடையவே கிடையாது.

    பதிவை முழுமையாகப்படித்தபின், மறுமொழி இடுவதுடன், பிறர் எழுதியுள்ள பின்னூட்டங்களையும் பொறுமையாகப் படித்து ரஸித்து, அதைப்பற்றியும் பாராட்டி எழுதக்கூடிய தனித்தன்மை உள்ளவர்.

    >>>>>

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தன்னைப் பிறர் படிக்க வேண்டும் என்று எண்ணாது, பிறரைப் படித்து ஊக்குவிக்கும் உள்ளத்திற்குச் சொந்தக்காரர் சீனா.
      நன்றி ஐயா

      நீக்கு
  22. //அடுத்த நொடி சீனா குழந்தையானார். வீட்டைச் சுற்றிச் சுற்றிப் பார்த்து மகிழ்ந்தார். நண்பர்களே, 50 ஆண்டுகளுக்குப் பிறகு, நாம் பிறந்த வீட்டினைப் பார்ப்பதற்கு இணையான மகிழ்ச்சி ஏதேனும் இருக்கிறதா என்ன?//

    இல்லவே இல்லை தான். அந்த மகிழ்ச்சியை எழுத்தினில் எடுத்துரைக்க இயலாது. நானும் இதே அனுபவத்தை சமீபத்தில் பெற்றுள்ளேன். ;)

    அதைப்பற்றிகூட நகைச்சுவையாக ஓர் பதிவினில் எழுதியுள்ளேன்.

    http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_09.html

    >>>>>

    >>>>>

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா , உடனடியாக தங்களின் பதிவிற்குச் சென்றேன், படித்தேன், தங்களைப் பற்றி அறியாத பல செய்திகளை அறிந்தேன் ஐயா,
      ///////நான் பிறந்த தேதி: 08.12.1949 குருவாரம் எனப்படும் வியாழக்கிழமை, சாயங்காலம் சுமார் 4.30 மணிக்கு. ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி அவதரித்த அதே “புனர்பூச” நக்ஷத்திரம், மிதுன ராசி.//////
      இராமச்சந்திர மூரத்தி அவதரித்த நன்னாளில், பிறந்த தங்களை, சிவன் கோயில் குளத்தால் என்ன செய்ய முடியும். கோயில் பாசியைப் பயன்படுத்தி, தங்களை இரு கரம் கொண்டு அரவணைத்து வாழ்த்தத்தான் முயன்றிருப்பான்.
      நன்றி ஐயா. மீண்டும் மீண்டும் தளத்திற்கு வந்து கருத்தளித்தமைக்கு மனமார்ந்த நன்றி ஐயா.
      இக்கருத்துக்களில் இருந்தே, அன்பின் சீனா அவர்களின் பேரில் தாங்கள் வைத்திருக்கும் அளவற்ற அன்பை, பாசத்தை உணர்ந்து கொண்டேன் ஐயா. நன்றி

      நீக்கு
  23. //அரண்மனையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள மிகப் பெரிய திமிங்கலத்தின் எலும்புக் கூட்டின் தலைப் பகுதியில் சீனாவுடன் ஹரணி//

    திமிங்கலத்தின் எலும்புக் கூட்டின் தலைப் பகுதியில் இன்றைய இரண்டு எழுத்துலகத் திமிங்கலங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. ;)

    >>>>>

    பதிலளிநீக்கு
  24. //திமிங்கலத்தின் வால் பகுதியில் சீனாவுடன் நான்//

    ஆஹா, திமிங்கலம் வாலால் தட்டினாலே ஆள் காலி என்பார்கள். வால் பகுதியில் நீங்கள் இருவருமா ? இவரிடமும் நாங்கள் இனிமேல் மிகுந்த எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். ;)

    >>>>>

    பதிலளிநீக்கு
  25. // மறுநாள் காலை வைத்தீஸ்வரன் கோயில் செல்லப் புறப்பட்டனர். எனது மனைவியையும் உடன் அழைத்துச் சென்றனர். //

    சந்தோஷம். வைதீஸ்வரன் கோயில் பெயரை நினைத்தாலே வியாதிகள் பறந்தோடி விடும்.

    இந்தப்பதிவினைப்படிக்கும் எல்லோருக்கும் பிணி நீங்கட்டும்.

    அருமையான பதிவினை அழகாகக் கோர்வையாக எழுதியுள்ள தங்களுக்கு என் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையும் வாழ்த்தும், இப்பதிவினைப் படிக்கும் அனைவருடைய பிணியினையும் நீக்கட்டும் ஐயா.
      தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி ஐயா

      நீக்கு
  26. ஜெயகுமார் சார் தங்கள் விருந்தோம்பல் நெகிழ வைக்கிறது. சந்திப்பு நெகிழ வைத்தது என்றால் அதை எழுதிய விதம் அருமை. உங்கள் பதிவு நானும் தஞ்சை வரவேண்டும் என்ற ஆவலை தூண்டி விட்டது.
    நல்லோர்கள் என்றாவது ஒருநாள் சந்திப்பர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரைவில் தங்களை தஞ்சையில் எதிர்பார்க்கின்றேன் ஐயா. தங்களின் வரவிற்காகக் காத்துக் கொண்டிருக்கின்றேன்.
      நிச்சயம் விரையில் சந்திப்போம் ஐயா. நன்றி

      நீக்கு
  27. தங்களின் உபசரிப்பு மேன்மையினை நாங்களும் அனுபவிக்கவேண்டும் என்ற தீராத அவாவினை ஏற்படுத்திவிடுகிறது இப்பதிவு. பர்சிலும் விடுமுறை கணக்கிலும் போதுமான இருப்பை முன்னெச்சரிக்கையோடு வைத்திருங்கள். (௨) அன்பின் சீனா அவர்களுக்கு, அவர் பழகி வளர்ந்த இடங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. நம்மில் பலருக்கு அத்தகைய நல்வினைப்பேறு இருக்குமா என்பதே கேள்விக்குறி. அவருக்கும் அவர் துணைவியாருக்கும் எமது விசாரிப்புகளைத் தெரிவியுங்கள். - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களை வரவேற்க மன மகிழ்வோடு காத்திருக்கின்றோம ஐயா. வாருங்கள்.

      நீக்கு
  28. அன்பின் சீனா அவர்கள் சென்றிட்ட தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, அகத்தியர் இல்லம், மேல்நிலைப் பள்ளி, பிறந்த வீடு
    ஆகிய அனைத்தையுமே உங்களோடு நாங்களும் வந்து கண்டு
    மகிழ்ந்ததைப் போன்ற உணர்வினைத் தரக்கூடிய வண்ணம் இருந்தது
    உங்கள் வர்ணனை; நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே. அருமையான வாய்ப்பு எனக்குக் கிட்டியது.

      நீக்கு
  29. அன்புக்குரிய ஜெயக்குமார், இதைக் காட்டிலும் சிறப்பான ஒரு சந்திப்பு இருக்கக் கூடுமா எனத் தெரியவில்லை. திரு. சீனாவின் கடந்த காலத்துக்குள் திகட்டத் திகட்டக் கூட்டிச் சென்று பரவசப் படுத்தி விட்டீர்கள். அவர் தன் வாழ்க்கையிலேயே பெற்ற மிகப் பெரிய பரிசாய் இந்தச் சந்திப்பைச் சொல்லலாம்.

    2013ல் உங்கள் விருந்தோம்பல் அலாதியானது. நட்பின் பொருள் அழகாய் மலர்ந்திருக்கிறது இப்பதிவில்.

    தம்பதி சகிதராய் நெடுநாள் வாழ வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா, தங்களின் மனமார்ந்த வாழ்த்திற்கு, இதயம் கனிந்த நன்றியினைத் தெரிவித்து மகிழ்கின்றேன் ஐயா. நன்றி

      நீக்கு
  30. சீனா அய்யாவுடனான தங்களது சந்திப்பை அழகாக எடுத்துரைத்தமைக்கு நன்றி சார் இப் பதிவில் தங்களுடன் வந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது

    பதிலளிநீக்கு
  31. ரொம்பவும் விரிவாக, அருமையாக எழுதியிருக்கிறீர்கள்! நம் தஞ்சையை அருமையாக சுற்றிக்காட்டியிருக்கிறீர்கள்!! பெரிய கோயிலுக்குப்போன நேரம் தான் சரியில்லை!!

    இனிய வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சகோதரியாரே. தஞ்சையிலேயே இருந்தும், நேரம் தெரியாமல், நண் பகல் வேளைவில் பெரியக் கோயிலுக்கு அழைத்துச் சென்று விட்டேன். பின்னர்தான் எனது தவற்றை உணர்ந்தேன். ஆனால் அன்பின் சீனா , சளைக்கவில்லை, மறுநாள் வைத்தீஸ்வரன் கோயில் சென்று வந்த பிறகு, மாலை 4 மணிக்கு பெரியக் கோயிலை, ஆற அமர சுற்றிப் பார்த்து விட்டுத்தான் மதுரைக்கு கிளம்பினார்.
      இனிய வாழ்த்திற்கு நன்றி சகோதரியாரே

      நீக்கு
  32. ஒரு மகிழ்ச்சியான செய்தி.

    இன்று (13.10.13) காலை திரு சீனா சாரும் Chidambaram Kasiviswanathan
    திருமதி மெய்யம்மை ஆச்சி அவர்களும் வந்திருந்தார்கள். ஸ்ரீ ஆண்டாள் கோவில் தரிசனம் செய்து சிவகாசி கிளம்புவதாக சொல்லி சென்றார்கள்.
    வந்த போது தஞ்சாவூர் சென்றது, அங்கு அவர்கள் பிறந்த வீடு பார்த்தது, படித்த பள்ளிக்கு சென்றது, தஞ்சை பெரிய கோவில் சென்றது ஆகியவை பற்றி பேசினார்கள்.
    இன்றைய மின்னஞ்சலில் திரு கரந்தை ஜெயக்குமார் அவர்கள் பதிவை பார்த்த்தும் மிகுந்த ஆச்சரியம். சீனா சார் திரு கரந்தை ஜெயக்குமார் அவர்கள் வீட்டிற்கு தான் விருந்தினராக சென்றிருக்கிறார். திரு கரந்தை ஜெயக்குமார் அவர்கள் பதிவில் அற்புதமாக, படங்களுடன் எழுதியிருக்கிறார். பின்னூட்டங்களும் ஏராளம். அது நண்பர்கள் சீனா சார் மீது உள்ள அன்பை காட்டுகிறது. அந்த பதிவின் இணைப்பை கீழே கொடுத்திருக்கிறேன். நண்பர்கள் தஞ்சை பயண பதிவை படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
    நன்றி நண்பர்களே.

    http://karanthaijayakumar.blogspot.com/2013/10/blog-post_12.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐயா. பின்னூட்டங்கள் ஒவ்வொன்றும், சீனா ஐயா அவர்களிட்த்து, வலையுலக நண்பர்கள் வைத்திருக்கும், மாறா அன்பினைத்தான் சுட்டிக் காட்டுகின்றன.
      தங்களின் தொடர் வரவிற்கும், வாழ்த்திற்கும் நன்றி ஐயா
      தங்களைத் தங்களின் தஞ்சைப் பயணத்தின்போது சந்திக்க ஆவலாய் காத்திருக்கின்றேன் ஐயா

      நீக்கு
  33. சிதம்பரம் என்னும் பெயரினை அங்குள்ளோர், சீனா தானா என்றுதான் அழைப்பார்கள்./

    அ,ஆ, ..... எனத் தமிழ் எழுத்துக்களை சீனாவின் மனதில் முதன் முதலில் விதைத்த பள்ளி.//

    சீனா தானா ஆனா ஆவன்னா படித்த பள்ளியைக் கண்டு மகிழ்ந்த காட்சி நிறைவளித்த நன்னாள் .....

    விஜய தசமி நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// சீனா தானா ஆனா ஆவன்னா படித்த பள்ளி//
      அருமையான சொற்றொடர் சகோதரியாரே.
      படிக்கவே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
      தங்களின் மீள் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மனமார்ந்த நன்றியினை தெரிவித்து மகிழ்கின்றேன் சகோதரியாரே

      நீக்கு
  34. மதிப்புக்குரிய அன்பின் சீனா அவர்களின் தஞ்சை விஜயத்தை, தங்களை சந்தித்ததை, தான் பிறந்த வீட்டைக் கண்டு மகிழ்ந்ததை..... எல்லாம் மிக மிக மகிழ்வுடன் படித்தேன். ஆஹா! நல்லவர்களின் நட்பை விட பெரிதென்ன உண்டு? தங்கள் நட்பு சிறக்க வாழ்த்துகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐயா. நல்லவர்களின் நட்பைவிட பெரியது எதுவும் கிடையாது. நன்றி ஐயா

      நீக்கு
  35. மீண்டும் ஒரு ஆட்டோப் கிராப்போல நினைவுகள் சுகம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் . நினைவுகள் என்றுமே சுகமானவைதான். நன்றி ஐயா

      நீக்கு
  36. நண்பர்களே வலையில் மீன்கள் சிக்கும். ஆனால் வலைப் பூவிலோ, புதுப் புது உறவுகள் மலர்ந்து மனம் வீசுகின்றன.
    அருமையான வார்த்தைகள்! வலைப்பூக்கள் நித்தம் நித்தம் மலர்ந்து புதுப்புது அருமையான உறவுகளையும் நண்பர்களையும் தருகிறது! மிக அருமையாக அன்பின் சீனாவின் தஞ்சை பயணத்தை அழகாக தொகுத்து பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  37. பதில்கள்
    1. ஆம். அன்பின் சீனா இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியாற்றியவர். அது மட்டுமல்ல, இவ்வங்கியானது, கணினி மயமாக்கப் பட்டபொழுது, அதன் சாப்ட்வேரை எழுதியவர்களுள் முக்கியமானவர்.

      நீக்கு
  38. தங்களது பதிவு விருந்தோம்பல் என்னும் சொல்லுக்கே பொருளாக
    இருக்கிறது.

    நான் தஞ்சை வரும்பொழுது தங்களை சந்திக்கவேண்டும்

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களை தஞ்சையில் சந்திக்க, வரவேற்க காத்திருக்கின்றேன் ஐயா. அவசியம் தொடர்பு கொள்ளுங்கள். எனது அலைபேசி எண். 94434 76716

      நீக்கு
  39. பெயரில்லா13 அக்டோபர், 2013

    மிக நல்ல பதிவை மகிழ்ந்து வாசித்தேன்.
    இனிய வாழ்த்து.
    இறையாசி நிறையட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  40. அருமையான சந்திப்பு. உங்களுடன் நாங்களும் இருந்தது போல் ஒரு உணர்வு. நன்றி.

    பதிலளிநீக்கு
  41. அய்யாவை சிறப்பித்த தங்களுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  42. உடன் வந்திருந்தால்கூட இந்த அளவு மகிழ்ச்சி ஏற்பட்டிருக்குமோ என்று எண்ணுமளவு ஒரு நட்பை, நீங்கள் பகிர்ந்துகொண்ட விதம் மிகவும் அருமையாக இருக்கிறது. ஒவ்வொரு முறையும் நீங்கள் இவ்வாறாக நண்பர்களை அறிமுகப் படுததும் பாங்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. நட்பு வட்டாரத்தைப் பெரிதாக்கிக் கொள்வதோடு எங்களுக்கு அறிமுகப்படுத்திவைப்பதற்கு மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  43. அன்பின் சீனா அவர்களின் தஞ்சைப் பயணம் பற்றி நேர்முக வர்ணனை போல அழகாக விவரித்துள்ளீர்கள். நாங்களும், உங்களுடனும் அன்பின் சீனா அவர்களுடனும் எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்தது போன்ற உணர்வு தங்கள் பதிவைப் படித்ததும் ஏற்பட்டது. பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  44. அன்புள்ள ஜெயக்குமார்..

    வணக்கம். தங்களின் அன்பு அளவிடற்கரியது. நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் எனக்கு நன்றி சொல்லத் தேவையே இல்லை ஐயா. தாங்களும், சோழ நாட்டில் பௌத்தம் திரு ஜம்புலிங்கம் அவர்களும் காட்டிய பாதையில்,சுட்டிக் காட்டிய பாதையில், தவழ்ந்து செல்பவன் ஐயா நான். நான்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.நன்றி ஐயா

      நீக்கு
  45. இரண்டு மூன்று நாட்களாய் வீட்டில் இருக்கவில்லை. இன்று வந்து படிக்கும் முதல் பதிவு உங்களுடையது. நாங்கள் உங்களைச் சந்தித்துப் பேசிய அரைமணிநேரத்திலேயே உங்கள் விருந்தோம்பலும் பணிவும் அன்பும் நெகிழவைத்ததை உணர்ந்தவன் நான். அன்பின் சீனா உங்களுடன் ஏறத்தாழ இரண்டு நாட்கள் இருந்திருக்கிறார். நிச்சயமுங்கள் அன்பில் மூழ்கி இருப்பார். அவரே எழுதி இருப்பது போல் நம் மகிழ்ச்சியை பிறர் எழுதப் படிக்கும்போது அது இரட்டிப்பாகிறது. பிறந்து வளர்ந்த இடத்தைப் பல வருடங்களுக்குப் பின் சென்று பார்க்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியை நான் அனுபவித்திருக்கிறேன். அதை “ வேரைக் காட்ட , ஊரைக் காட்ட, தேரைக்காட்ட “என்று பதிவில் எழுதி இருக்கிறேன். எங்கள் பூர்வீக வீட்டைப் பார்த்தபோது எனக்குக் கிடைத்த மகிழ்ச்சியை நானேதான் எழுத வேண்டி இருந்தது. கொடுப்பினை இருந்தால் உங்களை மீண்டும் சந்தித்து மகிழ ஆவல். நீங்கள் பெங்களூர் வர வாய்ப்பு உள்ளதா.?மகிழ்வின் வெளிப்பாடு உங்கள் பதிவு. உங்களையும் அடையாளம் காட்டுகிறது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லாரைக் காண்பதும் நன்றே
      நல்லார் சொல் கேட்பதும் நன்றே
      என்று கூறுவர். எனக்குத் தங்களுடனும், அன்பின் சீனா ஐயாவுடனும் பழகுவதற்கான இனிமையான வாய்ப்பினை ,இந்த வலைப் பூ ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது.
      சீனா ஐயா அவர்கள் பிறந்ததும், படித்ததும் தஞ்சையாய் அமைந்தது, என் கொடுப்பினை. நன்றி ஐயா

      நீக்கு
  46. அருமையான நட்பு தங்களுக்கு கிடைத்திருக்கிறது. போகும் இடமெல்லாம் உங்கள் நண்பர் ஒருவர் இருந்தைக் காணும் போது உங்கள் நட்பு வட்டம் புரிகிறது. நடந்தவற்றை அழகாக, அற்புதமாக பதிவாக தந்து அசத்தி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  47. வணக்கம்....
    சீனா ஐயா அவர்கள் வயது வித்தியாசம் பார்க்காமல் பழகும் பண்பாளர்.
    காரைக்குடி வந்த போது எங்கள் இல்லம் சென்று வந்தவர் அதன் பின்பு எனக்கு அனுப்பும் ஒவ்வொரு மெயிலிலும் என் மனைவி, குழந்தைகள் நலம் கேட்காமல் விடுவதில்லை.

    இந்த முறை வீடு குடிபோன போது மதுரையில் இருந்து அம்மாவுடன் காரில் வந்து வாழ்த்திச் சென்றார். அவருடன் அதிகம் பேச வேண்டுமென நினைத்திருந்தேன். ஆனால் வீட்டு விழா அவசரத்தில் நன்றாகக் கூட கவனிக்க முடியவில்லை என்ற வருத்தம் எனக்கும் மனைவிக்கும்....
    இந்த முறை ஊருக்கு வரும்போது மதுரையில் ஐயா வீடு சென்று வர வேண்டும்...

    படங்களுடன் நல்ல பகிர்வு ஐயா...
    நானும் உங்கள் நட்பு வட்டத்துக்குள் வருகிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நட்பு வட்டத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கின்றேன். இரண்டு நாட்கள் அவர்களுடன் பழகும் நல் வாய்ப்பு எனக்குக் கிட்டியதில் மகிழ்ச்சி அடைந்தேன். நன்றி நண்பரே

      நீக்கு
  48. நண்பர்களே, வலைப் பூ நமக்கு புதுப் புது உறவுகளை, நண்பர்களை, நாள்தோறும் வற்றாத அட்சய பாத்திரமாய் வழங்கிக் கொண்டே இருக்கிறது.

    நண்பர்களே, வலை உலகின் அட்சய பாத்திரமே என் இல்லம் நாடி வந்தது, எங்களையும், தன் சுற்றமாய், நட்பாய், உறவாய் இணைத்துக் கொண்டது //
    சீனா சார் அவர்களின் வரவை அழகாய் பகிர்ந்து இருக்கிறீர்கள்.
    சீனாசார் மகள் தன் தாய் தந்தையரைப்பற்றி சொன்னது அருமை.
    சீனா சார், அவர் படித்த பள்ளி, அவர் வாழ்ந்த இல்லம் எல்லாம் பார்வை இட்டது மகிழ்ச்சியான தருணம் அவருக்கு. தன் தலைமை ஆசிரியர் அவர்கள் போட்டோ பார்த்தவுடன் மகிழ்ந்த காட்சியை கண் முன்னே கொண்டு வந்து விட்டீர்கள்.
    சீனா சாரை மதுரையில் சந்தித்தோம் நாங்களும் எங்கள் மகள் கயல்விழி முத்துலெட்சுமியுடன்..
    நட்பு வாழ்க! வளர்க!
    வாழ்த்துக்குள் இனிய பதிவர் சந்திப்பு பதிவுக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோதரியாரே. உண்மையிலேயே சீனா ஐயாவுடனான சந்திப்பு வாழ்வில் என்றும் மறக்க இயலாதது.

      நீக்கு
  49. என் அன்பிற்கினிய நண்பர் ஜெயகுமார் அவர்களுக்கு.,
    தங்களின் பதிவு மிகவும் அற்புதமாக இருந்தது என்று மட்டும் சொன்னால் போதாது, ஆனால் அதற்கு மேல் வார்த்தை இன்றி நான் தவிக்கிறேன். நம்மை விட வயதிலும் அனுபவத்திலும் மூத்தோரை ஒரு குழந்தையை போல அழைத்து சென்று அவர் படித்த பள்ளிகளையும் அவர் பிறந்து வளர்ந்த வீட்டினையும் கண்டு களிக்க செய்தது மட்டுமல்லாமல் அவர் அடைந்த மகிழ்ச்சியினை தங்களின் மகிழ்ச்சியாக எண்ணி மிக அழகாக புகைப்படங்களுடன் பதிவு செய்திருக்கும் தங்களின் உயர்ந்த உள்ளத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மேலும் திரு.ஹரணி அவர்களும் உங்களுடன் இருந்ததை எண்ணும் போது மனம் உற்சாகம் பெறுகிறது. மேலும் மெலும் வளரட்டும் தங்களின் தொண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே. தமிழில் தங்களின் கருத்துரையினைக் காண்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. அழகுத் தமிழில் தட்டச்சு செய்யப் பழகிவிட்டீர்கள். அப்படியே தங்களின் வலைப் பூவிலும் எழுதலாமே...

      நீக்கு
  50. அனுபவங்கள் பிறருக்குச் சொல்லி மீட்டும்போது மனமகிழ்ச்சி ஏற்படும். சிறந்த நட்பும் சீரான வழ்வம் அமைவது அருமை . உங்களிடம் வந்த சீனு அவர்களுக்கும் நிச்சயம் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும் என்று நம்புகின்றேன் .

    பதிலளிநீக்கு
  51. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு