14 செப்டம்பர் 2014

விருதா? எனக்கா?

     

நண்பர்களே, வலைப் பூ ஒன்று தொடங்கி, எழுத ஆரம்பித்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறேன். தொடக்கத்தில் மாதம் ஒரு பதிவினை எழுதியவன், இப்பொழுது வாரம் ஒரு பதிவினை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

     எழுதுவதில் ஏதோ ஓர் இனம் புரியாத நிம்மதி கிடைக்கிறது. இம் மூன்று வருடங்களில், நான் சாதித்ததாக நினைப்பது, ஒன்றுண்டு.


     ஆம் நண்பர்களே, உங்களின் அன்பினைப் பெற்றிருக்கிறேனல்லவா, அதனைத்தான் சாதனை என்கிறேன்.

     தஞ்சையில், கரந்தையில், வகுப்பறையில் முடங்கிக் கிடந்த என்னையும், ஊக்குவித்து, உற்சாகப் படுத்தி, எழுத்துலகச் சகோதரனாய் ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள் அல்லவா? உங்கள் பரந்து விரிந்த, பெரிய மனதின் ஓரத்தில், ஓர் சிறிய இடத்தினை, எனக்காக ஒதுக்கி இருக்கிறீர்கள் அல்லவா, அம்மகிழ்ச்சி ஒன்று போதும் எனக்கு.

என்றும் வேண்டும் இந்த அன்பு.

     கடந்த வருடத்தில் ஓர் நாள், வலைப் பூவில் நண்பர்களின் எழுத்துக்களைச் சுவாசித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாய், ஓர் அன்பு முகத்தைக் கண்டேன்.

     எனது கண்களையே என்னால் நம்பமுடியவில்லை. கண்களை நன்றாகக் கசக்கிக் கொண்டு மீண்டும், மீண்டும் பார்த்தேன்.

      உண்மையிலேயே அவர்தானா, என வியந்து நோக்கினேன். ஆம் அவரேதான் என்பதை மனது உறுதி செய்தபொழுது, என் உள்ளம் அடைந்த ஆனந்தத்திற்கு எல்லையேயில்லை.

தஞ்சையம்பதி
    

நான் ஆசிரியராகப் பணியாற்றும், உமாமகேசுவர மேனிலைப் பள்ளிக்கு அருகில், விஷ்னு நெட் கபே என்னும் பெயரில், கணினியகம் ஒன்றினை சில ஆண்டுகளுக்கு முன் நடத்தி வந்தவர்.

      நான், எனது எம்.ஃ.பில்., ஆய்விற்காக, கணித மேதை சீனிவாச இராமானுஜன் அவர்களைப் பற்றிய, தகவல்களைத் திரட்டத் தொடங்கிய பொழுது, எனக்குப் பேருதவி புரிந்தவர் இவர்.

ஆம்மீகத் தொண்டர் திரு துரை.செல்வராஜ்
ஆலயத்தின் தெய்வீக மனம் கமழும் வலை

     தற்சமயம் இவரது வாசம் குவைத். குவைத்தில் இருந்து ஆன்மீகக் கருத்துக்களை, ஆன்மீகச் செய்திகளை, உலகு முழுதும் பரப்பும் உன்னதப் பணியினை நிறைவுடன் செய்து வருபவர்.

     நண்பர்களே, இவரது அன்பைப் பெற்றதையே, பெரும் பேறாக எண்ணி வந்த எனக்கு, இவரின் திருக்கரங்களால், ஓர் விருது கிடைத்திருக்கிறது.

Versatile Blogger


தஞ்சையம்பதிக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை.

தூயஉள்ளம் அன்புள்ளம் பெரிய உள்ளம்
    தொல்லுலக மக்களெலாம் ஒன்றே என்னும்
தாயுள்ளம் கொண்ட தஞ்சையம்பதிக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் மட்டும் போதாது என்பது மட்டும் புரிகிறது. இருப்பினும் என் மனமார்ந்த நன்றியினை காணிக்கையாக்குகிறேன்.

     நண்பர்களே, நான் கடந்து வந்த பாதையினை சற்றே எண்ணிப் பார்க்கின்றேன்.

கரந்தையில் பிறந்தவன்
கரந்தையில் தவழ்ந்தவன்
கரந்தையில் படித்தவன்
கரந்தையில் பணியும் ஆற்றுபவன்
இதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டுமல்லவா?

படித்த பள்ளியிலேயே ஆசிரியர் பணி.
எத்துனை பேருக்கு, இப்படி ஓர் வாய்ப்பு கிட்டும்.

      கணித ஆசிரியரான என்னை நம்பி, தமிழ்ப் பொழில் என்னும் தமிழாராய்ச்சி மாத இதழையே ஒப்படைத்தார்கள். என்னே என் பாக்கியம்.

     கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக, பொழிற்றொண்டராய், இதழியல் பணியும் ஆற்றிவருகின்றேன்.

    கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்பார்கள், அதுபோல, தமிழ்ப் பொழில் இதழின், தமிழ் மனத்தினை, முகர்ந்து, முகர்ந்தே, எழுதவும் தொடங்கியவன் நான்.

01.   கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்
02.   விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம்
03.   கணித மேதை சீனிவாச இராமானுஜன்
04.   கரந்தை ஜெயக்குமார் வலைப் பூக்கள்
எனும் நான்கு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளேன்.

   அடுத்த மாதம், மதுரையில் நடைபெறவிருக்கின்ற, பதிவர் மாநாட்டினில், உங்கள் முன்னிலையில் வெளியிட வேண்டும், என்ற ஆவலில்,
கரந்தை மாமனிதர்கள்
என்னும் சிறு நூலினை அச்சாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளேன்.

     என்னைப் பற்றிச் சொல்ல, இதற்கும் மேல் ஒன்றும் இல்லை.


நண்பர்களே, அன்பின் மிகுதியால், தஞ்சையம்பதி வழங்கிய விருதினை, வலையுலக உறவுகளோடு, பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

     இவ்விருது எனக்கோ புதிது. ஆனால் இவ்விருதினை நான் பகிர்ந்து கொள்ள நினைக்கும் இவர்களோ, பல்வேறு விருதுகளைப் பெற்ற வித்தகர்கள்.

    வலையுலகச் சொந்தங்களே, இதோ மனமகிழ்வோடு, சிரம் தாழ்த்தி, கரம் நீட்டி, விருதினை வழங்குகின்றேன். பெற்றருள்வீர்களாக.

முனைவர் பா. ஜம்புலிங்கம்,

சகோதரி மனோ சாமிநாதன்

நண்பர் மது

சகோதரி மைதிலி கஸ்தூரி ரங்கன்

நண்பர் ரூபன்

சகோதரி சுவாதி

நண்பர் விமலன்

சகோதரி கீதா

நண்பர் சொக்கன் சுப்பிரமணியன்

சகோதரி உஷா அன்பரசு

அந்நாளின் இலக்கியத்தை ஆய்தல் ஒன்றே
     அரும்புலமை எனும்மடமை அகன்ற திங்கே
இந்நாளிற் பழந்தமிழிற் புதுமை ஏற்றி
     எழுத்தெழுத்துக் கினிப்பேற்றிக் கவிதை தோறும்
தென்நாட்டின் தேவைக்குச் சுடரை யேற்றிக்
     காவியத்தில் சிறப்பேற்றி, இந்த நாடு
பொன்னான கலைப்பேழை என்று சொல்லும்
     புகழேற்றி வருகின்றார் – அறிஞர் வாழ்க.
                               
                                 - பாவேந்தர் பாரதிதாசன்.




89 கருத்துகள்:

  1. விருது உங்களுக்கு கிடைத்ததே தாமதம்தான் ..கரந்தையில் வாழும் உங்களுக்கு ,ஒரு காலத்தில் கரந்தையில் வாழ்ந்த திரு ,துரை செல்வராஜுஅவர்கள் வழங்கியுள்ளது பொருத்தமானதே !
    இருவருக்கும் என் வாழ்த்துக்கள் !
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. மிகவும் மகிழ்ச்சி ஐயா... விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    ஐயா.

    விருது தாங்கிய மின்னஞ்சல் வந்து கிடைத்தவுடன் வேகமாக தங்களின் வலைப்பூவை திறந்து பார்த்தபோது மனதில் மகிழ்ச்சி பொங்கியது. தங்களின் விடா முயற்சிக்கு கிடைத்த வெகுமதி ஐயா. தங்களுக்கு கிடைத்த விருதை எங்களுக்கும் பகிர்ந்தளித்தமைக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்....

    உத்தமர் பெற்றறெடுத்த
    உத்தம புதல்வரே.
    மூளையை கசக்கி.
    முதுகு வலி பொறுக்க
    கண்களை விழித்து கண்ணீர் மல்க
    விதைத்த எழுத்துக்கள்
    உலகம் வியக்கும்படி
    வானுயர்ந்து நிக்கிறது......
    வாழ்த்துக்கள் ஐயா.
    த.ம1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே
      போட்டிகள் பல நடத்தி, எழுதுவோரை ஊக்குவிக்கும் தங்களுடன் பகிர்ந்து கொள்வதைப் பெருமையாக நினைக்கின்றேன் நண்பரே

      நீக்கு
  4. மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே, மேலும் பல விருதுகள் பெறவும் மேலும் பல நூல்கள் படைக்கவும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. :) விருது பெற்றதற்கு இனிய நல்வாழ்த்துகள் :)

    பதிலளிநீக்கு
  6. உழைப்பு என்னும் பூவின் மேல்
    வந்தமரும் விருது என்னும்
    வண்டின்(மகரந்த)சேர்க்கையால்
    மலர் காயாகி கனிந்து கனியாகி
    மேலும் பல விதைகளைத் தருவதைப் போல்
    உங்கள் தமிழ் பணி மேலும் சிறக்க இந்த விருது
    உங்களுக்கு ஊக்கத்தை தரும் ,மேன்மேலும்
    எழுத ஆக்கமும் தரும் என்பதில் ஐய்யமில்லை
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வாழ்த்து மிகுந்த மகிழ்வினை அளிக்கின்றது
      நன்றி ஐயா

      நீக்கு
  7. வாழ்த்துக்கள் கரந்தை அவர்களே... மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. இனிய விருதைப்பெற்ற‌தற்கு அன்பு நிறைந்த வாழ்த்துக்கள்!!
    இந்த விருதினை எனக்கும் பகிர்ந்தளித்ததற்கு மனங்கனிந்த நன்றி!!

    பதிலளிநீக்கு
  9. மனம் நிறைந்த வாழ்த்துகள் ஜெயக்குமார். அத்தனை தகுதியும் உங்களுக்கு இருக்கிறது. விருது கொடுத்தவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. விருது பெற்றதற்கு இனிய வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  11. விருது கிடைத்தமைக்கு வாழ்த்துகள். உஷா அன்பரசுவைத் தவிர மற்றவர்கள் புதியவர்கள். விருது பெற்றவர்கள் அனைவரும் சிறப்பான தகுதி உள்ளவர்கள். :))))

    பதிலளிநீக்கு
  12. அண்ணா! எப்பேர்ப்பட்ட ஆட்களோடு எனக்கும் சேர்த்து விருது அளித்திருக்கிறீர்கள் !!!!!!
    மிக்க நன்றி அண்ணா!!!

    பதிலளிநீக்கு
  13. பெருமழையில் நனைந்த சிறு குருவியாக நடுங்குகின்றது என்னுள்ளம்..

    வலைத் தளத்தில் வாஞ்சையுடன் இத்துணை அன்பினைப் பொழிந்த பதிவில் பதுமையாக ஆனேன். வார்த்தையிழந்து நிற்கின்றேன்..

    விடியற்காலையில் - தங்களின் பதிவினைக் கண்டேன்!.. ஆயினும் - விழி நீர் - தடம் மறைத்ததால் தாமதம் ஆயிற்று!..

    இந்த அன்பு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து நிலைக்க அபிராமி அருள்வாளாக!..

    தாங்கள் விருது வழங்கிச் சிறப்பித்த அன்பின் பதிவர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் பேரன்பினைப் பெற்றதை எண்ணி எண்ணி மகிழ்கின்றேன் ஐயா
      என்றும் வேண்டும் இந்த அன்பு
      நன்றி ஐயா

      நீக்கு
  14. வாழ்த்துகள் ஐயா ! உங்கள் தமிழார்வத்தினையும் புலமையையும் பார்த்துவிட்டு தமிழாசிரியர் என்றுதான் இத்தனை நாள் நினைத்திருந்தேன். இன்றுதான் நீங்கள் கணித ஆசிரியர் என அறிந்துகொண்டேன்...

    பதிலளிநீக்கு
  15. அன்புள்ள ஜெயக்குமார்.

    விருதிற்கு வாழ்த்துக்கள். விருதுகளைத் தாண்டியது உங்களின் பதிவுலகம். தவிரவும் தஞ்சையம்பதி அவர்களின் கையால் வாங்குவது சாலப் பொருத்தம். நல்ல மனதுக்காரர். மதுரையில் தாங்கள் வெளியிடப்போகும் நுர்லிற்கு என்னுடைய வாழ்த்துக்கள். மேன்மேலும் பல விருதுகளையும் படைப்புக்களையும் தரவேண்டும்.

    வாழ்க் வளத்துடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா
      வலையுலகில் எனக்கு வழிகாட்டியவர் நீங்கள்
      தங்களின் பாதையில் முடிந்தவரை என் பயணத்தைத் தொடர்வேன்
      நன்றி ஐயா

      நீக்கு
  16. பெயரில்லா14 செப்டம்பர், 2014

    விருது பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்து.
    பணிகள் தொடரட்டும்.
    வேதா.இலங்காதிலகம்:

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் சகோ...தகுதியானவர்களை நாடி விருது வரும் என்பது உண்மை...மனம் நிறைந்த வாழ்த்துக்கள்..அதை என்னுடனும் பகிர்ந்து மகிழும் உங்கள் பண்பு மேலும் பல விருதுகள் கிடைக்கவே வழி வகுக்கும் நன்றி சகோ..

    பதிலளிநீக்கு
  18. பிறந்து வளர்ந்த ஊரிலேயே, அதுவும் கல்வி பயின்ற பள்ளியிலேயே பணி புரிவது உண்மையிலேயே கடவுள் கொடுத்த வரம்தான். நீங்கள் விருது பெற்றமைக்கும், உங்களால் விருது கிடைக்கப் பெற்றவர்களுக்கும் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  19. மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா......

    உங்கள் மூலம் விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  20. மிக்க மகிழ்ச்சி. விழுதுகளை நோக்கி வேர்களின் பயனம் படைத்த உங்களுக்கு வேர்களிடம் இருந்து விருது கிடைத்ததைக் கண்டு பெரும்மகிழ்ச்சியடைகிறேன்.வாழ்த்துக்கள்.வளர்க உங்களது வரிகள் பெருக பல விருதுகள்.நன்றி.

    பதிலளிநீக்கு
  21. விருதுக்கு உரியவர் அதைப் பெறுவதில் வியப்பென்ன... மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  22. அன்பு திரு ஜெயக்குமார் ஐயா...வணக்கம்...

    தங்களின் ஓய்வில்லா பணிகளுக்கு மத்தியிலும், தமிழுக்கும் அதன் இனிமைக்கும் பெருமை சேர்க்கும் விதமாக வாசிப்பவர்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் பதிவுகளை தமிழ் உலகினிற்கு அளித்துவரும் தங்களின் திருக்கரங்களுக்கு இன்னும் பல ஆயிரம் விருதுகள் கொடுத்தாலும் தகும் ஐயா... தங்களின் அர்பணிப்பை கண்டு நான் வியக்காத நாளே இல்லை... தங்களையும், தங்களின் தமிழ் சேவையையும் கவுரவிக்கும் விதமாக, தங்களுக்கு "the Versatile Blogger" விருதினை அளித்த உயர்திரு. தஞ்சையம்பதி ஐயா அவர்களுக்கு எனது நன்றியினையும், தங்களின் திருக்கரங்களால் விருதினை வாங்கிய அத்துனை நல்ல உள்ளங்களும் எனது நன்றி கலந்த வாழ்த்துக்களையும் இச்சமயத்தில் தெரிவித்துக்கொள்ள் நான் கடமைபட்டிருக்கிறேன் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ட கருத்துரைக்கும் வாழ்த்திற்கும்
      நன்றி நண்பரே

      நீக்கு
  23. அன்பின் ஜெயக் குமார் - விருது பெற்றமைக்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  24. அன்பின் ஜெயக் குமார் - தமிழ் மண வாக்கு : 6 -

    விருது பெற்ற கையோடு பலருக்கும் விருதுகளை வாரி வழங்கும் சிந்தனை நன்று - பதிவர் சந்திப்பிற்கு - அக்டோபர் 26 - குடும்பத்துடன் வர அன்புடன் அழைக்கிறோம்.- நூல் வெளியீட்டு விழாவும் பதிவர் சந்திப்பில் நடத்திடுவோம், நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களைக் காணும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் ஐயா
      நன்றி

      நீக்கு
  25. அன்புச் சகோதரனுக்கு வாழ்த்துக்கள் மென் மேலும் விருதுகள்
    வந்து குவியட்டும் !விருது பெற்றுக்கொண்ட ஏனைய சொந்தகளுக்கும்
    என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் !

    பதிலளிநீக்கு
  26. சிறப்பானதொரு விருதை மகத்தான ஒரு மனிதரிடமிருந்து பெற்ற உங்களுக்கு இதயம் நிறைந்த நல்வாழ்த்துகள். விருதுகள் பெற மிகத் தகுந்தவர் நீங்கள். அதை சிறந்தவர்களுக்குப் பகிர்ந்தளித்ததைக் கண்டு மேலும் மகிழ்ச்சி. பதிவர் சந்திப்பில் உங்களைப் பார்க்கலாம், உங்களின் புததகம் வெளியாவதைக் கண்டு மகிழலாம் என்பது கூடுதல் மகிழ்ச்சி. ஆக... பலப்பல மகிழ்ச்சிகளைத் தந்த உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே
      மகத்தான மனிதரிடமிருந்து விருது பெற்றிருக்கிறேன்
      பதிவர் சந்திப்பில் தங்ளைக் காண ஆவலுடன காத்திருக்கிறேன்
      நன்றி நண்பரே

      நீக்கு
  27. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே! ஒரு சிறந்த மனிதரிடமிருந்து சிறந்த விருது பெற்ற எங்கள்நண்பர் ஆசிரியருக்கு வாழ்த்டுக்கள் பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  28. விருது எனக்குமா ? விருதுபெற்ற தங்களை வாழ்த்துவதா ? எனக்கும் விருது கொடுத்த தங்களுக்கு நன்றியுரைப்பதா ? 247 எழுத்துக்களையும் புரட்டிப்பார்க்கிறேன் என்ன எழுதுவதென்று தெரியாமல் நண்பரே...

    பதிலளிநீக்கு
  29. விருது பெற்றமைக்கும் அதனை உங்கள் பதிவுலக சொந்தங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள், ஐயா.

    பதிலளிநீக்கு
  30. vaazthukal Nanbare...
    thakuthiyaana viruthu,,
    paaraattukal - vazangiyavarkalukku..
    oorukku thirumbiythum
    thamizil ulliduven..porutharulka...

    பதிலளிநீக்கு
  31. THE VERSATILE BLOGGER AWARD – இனைப் பெற்ற கரந்தை ஆசிரியருக்கு எனது இனிய வாழ்த்துக்கள்.! பகிர்ந்தளித்தலின் போது தங்களிடமிருந்து அந்த விருதினைப் பெற்ற மற்றைய வலைப் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்!
    த.ம.10

    பதிலளிநீக்கு
  32. விருதுகள் பொறுப்பைக்கூட்டி விடுகின்றன.
    நன்றி சார் தங்களது விருதால் நான்
    கௌரவம் கொள்கிறேன்/

    பதிலளிநீக்கு
  33. இந்தப் பரிசுக்கும் இதைவிடவும் கனமான பரிசுகளுக்கும் தாங்கள் தகுதியுள்ளவரே எனபதில் எவருக்கும் ஐயமில்லை. அது மட்டுமல்ல...இன்னும் சிலருக்கு இந்தப் பரிசினை வழங்கச் சொன்னபோது, உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் தகுதியுள்ளவர்களே! சும்மாவா சொன்னார் வள்ளுவர்- 'பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால்' என்று?

    பதிலளிநீக்கு
  34. //எழுதுவதில் ஏதோ ஓர் இனம் புரியாத நிம்மதி கிடைக்கிறது. // இதுதாங்க அய்யா மிக முக்கியமான ஒன்று.. வாழ்துக்கள்

    பதிலளிநீக்கு
  35. மிகவும் சந்தோஷம்....

    வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  36. வாழ்த்துகள்
    கரந்தையிலிருந்து உலகெங்கும்
    வலைப்பூ வழியே தமிழ் பேணுங்கள்
    இனிதே தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  37. தாங்கள் விருதுபெற்றமைக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ஐயா.

    அன்புடன் எமக்கும் விருதுவழங்கியமைக்கு நன்றிகள் ஐயா.

    பதிலளிநீக்கு
  38. ஜெயக்குமார் , சென்னை15 செப்டம்பர், 2014

    வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  39. வணக்கம்,
    விருது பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
    தொடரட்டும் தங்கள் தமிழ்ப் பணி, நற்பணி

    வாழ்த்துக்களுடன்,
    இரா. சரவணன்

    பதிலளிநீக்கு
  40. வணக்கம் ஐயா!

    விருதுகள் வந்துங்கள் மேன்மையைச் கூறும்!
    பெருகட்டும் மேலும் சிறந்து!

    மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
  41. நீங்கள் விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள். உங்களிடம் விருது வாங்கியவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  42. மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  43. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  44. கரந்தை என்றவுடன் எங்கு கேட்டாலும் உங்கள் ஞாபகமே வரும். உங்கள் எழுத்துக்கள் கல்லைக் கடைந்தெடுத்து இலகுவாய் ஒரு பக்கத்தில் எம் பார்வைக்கு விடும் எழுத்துக்கள். அரும்பணிக்கு இவ்விருது மட்டுமல்ல இன்னும் பல கிடைக்கும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வார்த்தைகள் மிகுந்த மகிழ்வினை அளிக்கின்றன
      நன்றி சகோதரியாரே

      நீக்கு
  45. தமாதாமாக வந்தமைக்கு மன்னிக்கவும் ஜெயக்குமார் சார்.

    எனக்கும் விருது வழங்கி கௌரவித்து விட்டீர்கள் அதற்கு முதலில் என்னுடைய நன்றிகள்.
    விருது வாங்கிய மற்றவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  46. இன்னும் எழுதுக இன்புறுக மென்மேலும்
    பொன்னாய் விருதுகள் பெற்று !

    விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்
    தங்கள் கரங்களால் விருதுகள் வாங்கியோர்க்கும்
    நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  47. ஆர்வம் குறையாத அருந்தமிழ்ப் பணிக்கு வந்திருக்கும் விருதுபோல் வரவேண்டும் மேலும் விருதுகள். அன்பான வாழ்த்துகள்! ப.திருநாவுக்கரசு, தஞ்சை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையும் வாழ்த்தும் மிகுந்த மகிழ்வினை அளிக்கின்றன
      நன்றி

      நீக்கு
  48. ஐயா , பாராட்டுக்கள் பலப்பல ......பிறந்த ஊரில் படித்து அந்த ஊரிலேயே பெருமையுடன் பணி புரியும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை ..வாழ்த்துக்கள் .......உடுவை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையும் வாழ்த்தும் மிகுந்த மகிழ்வினை அளிக்கின்றன ஐயா
      மிக்க நன்றி

      நீக்கு
  49. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
    தங்களின் தளராத உழைப்பிற்கும், தன்னலமில்லா செயல்பாடு, இடைவிடாத முயற்சி, மூத்தோரைப் போற்றும் பாங்கு, வாசிப்பினையே என்றும் சுவாசித்தலாக கொண்டு வாழும் வாழ்க்கை ஆகியவற்றிற்கும் கிடைத்த விருதாக நான் கருதுகிறேன். தங்கள் வாழ்க்கையில் மேலும் பல விருதுகள் பெற மனமார வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு