26 பிப்ரவரி 2015

மகிழ்வுடன் ஓர் நாள்


நண்பர்களே, கடந்த 18.2.2015 புதன் கிழமையன்று, பள்ளியில், சக ஆசிரிய நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தபோது, பேச்சு சுற்றுலா பற்றி திரும்பியது.

     பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியர் எந்நேரமும் படிப்பு, படிப்பு, தேர்வு, தேர்வு என படிப்பதும், சிறு, குறு தேர்வுகளை எழுதுவதிலுமே, காலத்தைக் கரைத்துக் கொண்டிருக்கும் நேரமிது.

     கனவில் கூட, புத்தகங்களும், தேர்வு அறைகளும் தோன்றும், மன அழுத்தம் மிகுந்த காலம் இது.

      அதனால், ஒரே ஒரு நாளேனும், புத்தக நினைவின்றி, ஆடிப் பாடி மகிழ வைத்து, ஓர் புத்துணர்ச்சியை, புது வலிமையை, புத்தம்புது எழுச்சியை வழங்கினால் என்ன, என்று தோன்றியது.

22 பிப்ரவரி 2015

விளையும் பயிர்

   

 ஆண்டு 1921. பசுமலை. அந்தச் சிறுவனுக்கு வயது பதிமூன்றுதான் இருக்கும். நெற்றி முழுவதும் திருநீரு பூசியிருந்தான். புத்தகப் பையினைத் தோளில் தொங்கவிட்டபடி பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கிறான்.

     வழியில், ஒரு தெரு முனையில், பெருங் கூட்டம் ஒன்று கூடியிருந்தது. கூட்டத்தின் நடுவில் நின்று கொண்டு, மத போதகர் ஒருவர், உரத்த குரலில், தனது மதத்தின் பெருமைகளை முழங்கிக் கொண்டிருக்கிறார்.

     நெற்றி முழுவதும் திருநீரு அணிந்திருந்த, அச்சிறுவன், கூட்டத்தைப் பிளந்து கொண்டு, முன் வரிசைக்குச் சென்று, அம் மத போதகர் பேசுவதை, ஆர்வமுடன் கேட்கத் தொடங்குகிறான்.

எனது ஆண்டவரே உண்மையானவர். அவரே உங்களின் பாவத்தை போக்கும் வல்லமை படைத்தவர், உங்களுக்கு மோட்சத்திற்கான வழியினைக் காட்டி அருளும் அன்பு மனம் படைத்தவர்.

15 பிப்ரவரி 2015

சுவரைத் தட்டுங்கள், கதவு திறக்கும்

     

இருள் சூழ்ந்த இரவில், விளக்குகள் இல்லாத பொழுதில், தட்டுத் தடுமாறி, நண்பன் வீட்டுக்கு வந்த ஒருவன், வாசல் எங்கு என்று தெரியாமல் சுவரைத் தட்டினான். அது வாசலில்லை என்று தெரிந்ததும், சுவரைத் தட்டிக்கொண்டே நடந்தான், ஒரு வழியாய் வாசல் வந்தது. தட்டியவுடன் கதவு திறந்தது.

சுவரைத் தட்டுங்கள் கதவு திறக்கும்.

09 பிப்ரவரி 2015

குரு போற்றுவோம்


ஆண்டு 2008. அக்டோபர் 22. இந்தியாவின் முதல் நிலவு விண்கலத்தை ஏந்திச் செல்லும் ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்கிறது.

     சந்திரயான்.

     இந்த நூற்றாண்டின், மிகப் பெரிய விஞ்ஞான சாகசம், சாதனை என உற்சாகத்தோடு உச்சரிக்கப்படும், வெற்றிப் பயணம் சந்திரயான். நிலவிலும் நீருண்டு என்பதை கண்டுபிடித்து, உலகிற்கு அறிவித்த, நிரூபித்த நிகரற்ற பயணம் சந்திரயான்.

03 பிப்ரவரி 2015

16 வயது தலைமையாசிரியர்


ஆண்டு 2002 இல் ஓர் நாள். மேற்கு வங்கத்தின் பெர்காம்பூரில் உள்ள, ராஜ் கோவிந்தா சுந்தரி வித்யாபீத் அரசுப் பள்ளி. பிற்பகல் 2.00 மணி. பள்ளியின் அன்றைய அலுவல் முடிவடைந்து விட்டதை தெரிவிக்கும் வகையில் மணி ஓசை ஒலிக்கின்றது. அரை நாள் மட்டுமே செயல் படும் பள்ளி அது.

     மாணவ, மாணவியர் உற்சாகமாக பள்ளியை விட்டு, தங்கள் வீடுகளை நோக்கி, கூட்டம் கூட்டமாக சிரித்துப் பேசிக் கொண்டே நடக்கத் தொடங்கினர்.

      ஒரு மாணவன் மட்டும், புத்தகப் பையினை தோளில் சுமந்தபடி, அவ்வூரையும் தாண்டி நடந்து சென்று கொண்டிருந்தான். ஒன்பது வயதே நிரம்பிய மாணவன் அவன்.