31 மார்ச் 2018

பஞ்சும் பசியும்





     ஒரு சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு, பலகையை, அதன் கைப் பிடிகளில் வைத்துக் கொண்டு எழுதிக் கொண்டே இருப்பார்.

     எழுதுவதற்கானக் குறிப்புகளைத் தயாரித்துவிட்டார் எனில், அனைத்துக் குறிப்புகளையும் ஒருமுறை படித்து, உள் வாங்கிக் கொண்டு எழுதத் தொடங்கி விடுவார்.

      எழுத, எழுத பக்கத்திற்குப் பக்கம், எண்கள் கொடுத்து எழுதுவார்.

      எழுதி முடிக்க முடிக்க காகிதங்கள் கீழே விழுந்து கொண்டே இருக்கும்.

       பதிப்பகத்தார் வந்து, அறை முழுவதும், பரவிக் கிடக்கும், தாட்களை எடுத்து,  வரிசைப் படுத்தி, அச்சிட எடுத்துக் கொண்டு போய்விட வேண்டியதுதான்.

       எழுதியதை மீண்டும் சரிபார்க்கும் பழக்கமோ, அடித்து அடித்துத் திருத்தம் செய்யும் வழக்கமோ இவரிடம் கிடையவே கிடையாது.

       அப்பேர்ப்பட்ட எழுத்தாளர்.

       கடந்த மூன்று நாட்களாய் பேனாவைத் தொட்டுக்கூடப் பார்க்காமல், சாய்ந்த வண்ணம் அமர்ந்தே இருக்கிறார்.

24 மார்ச் 2018

என்னை நான் சந்தித்தேன்





     ஒவ்வொரு எழுத்தாளனும் ஒரு சுயம்பு மாதிரி, அவனாகவே உருவாகனும். அவனாகவே தன்னை வளர்த்துக்கனும்.

17 மார்ச் 2018

மீசை வைத்த புத்தர்



      ஆய்வு.

      இன்று ஆய்வு என்பது பெரும்பாலும், நூல்களுக்கு உள்ளேயே சுருங்கிவிட்டது.

      ஆய்வியல் நிறைஞர் ( எம்.ஃபில்.,) ஆய்வாகட்டும், முனைவர் பட்ட (டாக்டர்) ஆய்வாகட்டும், இலக்கியம், தத்துவம், கதை, சிறுகதை, நாவல் என நூல்களின் பக்கங்களை ஆய்வு செய்வதிலேயே நிறைவு பெற்றுவிடுகிறது.

     ஆய்விற்காக நூல்களைத் தாண்டி, களத்தில் இறங்குவோர் வெகு சிலரே.

     அந்த வெகு சிலரில் இவர் முக்கியமானவர்.

10 மார்ச் 2018

வேண்டாம் சினிமா





வானோங்கி நிற்குது பார் தோழா
     வாழ்வைப் பணயம் வைத்தோம்
உண்மை உணர்வாரில்லை தோழா
     உழைப்பை மதிப்பாரில்லை
பாவிகள் வாழுகின்றார் தோழா
     பாட்டாளி மாளுகின்றார்
ஆவி துடிக்குதடா தோழா
     ஆத்திரம் பொங்குதடா

பெரும் பெரும் மாளிகைகளைக் கட்டியும், வானூர்தி செய்தும், கழனி உழுதும், உழைக்கும் தொழிலாளர் வர்க்கம், அதன் பலனை அனுபவிக்க இயலாமல், மூன்று வேளை உணவிற்கும் வழியின்றி மாளும் அவலத்தைக் கவிஞரின் வரிகளில் வாசிக்கும் பொழுதே, நமக்கும் ஆத்திரம் பொங்குகிறதல்லவா?

03 மார்ச் 2018

வெட்டிக்காடு




      ஆண்டு 2017.

      அக்டோபர் மாதம் 25 ஆம் நாள்.

      மாலை நேரம்.

      ஆற்றின் கரைதனில் நின்றுகொண்டிருக்கிறோம்.

       நானும், நண்பர் திரு கா.பால்ராஜ் அவர்களும்.

       புது ஆறு என்றழைக்கப்படும், கல்லணைக் கால்வாயின் கரையில் நின்று கொண்டிருக்கிறோம்.