ஒரு சாய்வு நாற்காலியில் சாய்ந்து
கொண்டு, பலகையை, அதன் கைப் பிடிகளில் வைத்துக் கொண்டு எழுதிக் கொண்டே இருப்பார்.
எழுதுவதற்கானக் குறிப்புகளைத் தயாரித்துவிட்டார்
எனில், அனைத்துக் குறிப்புகளையும் ஒருமுறை படித்து, உள் வாங்கிக் கொண்டு எழுதத் தொடங்கி
விடுவார்.
எழுத, எழுத பக்கத்திற்குப் பக்கம், எண்கள் கொடுத்து
எழுதுவார்.
எழுதி முடிக்க முடிக்க காகிதங்கள் கீழே விழுந்து
கொண்டே இருக்கும்.
பதிப்பகத்தார் வந்து, அறை முழுவதும், பரவிக்
கிடக்கும், தாட்களை எடுத்து, வரிசைப் படுத்தி,
அச்சிட எடுத்துக் கொண்டு போய்விட வேண்டியதுதான்.
எழுதியதை மீண்டும் சரிபார்க்கும் பழக்கமோ,
அடித்து அடித்துத் திருத்தம் செய்யும் வழக்கமோ இவரிடம் கிடையவே கிடையாது.
அப்பேர்ப்பட்ட எழுத்தாளர்.
கடந்த மூன்று நாட்களாய் பேனாவைத் தொட்டுக்கூடப்
பார்க்காமல், சாய்ந்த வண்ணம் அமர்ந்தே இருக்கிறார்.