31 டிசம்பர் 2018

தொல்காப்பியரைக் கண்டேன்




     பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம்.

     வழிப்பறியும், கூட்டுக் கொள்ளையும், பல சிற்றூர் வணிகர்களைப் பாடாப் படுத்திய காலம்.

     அது ஒரு கடை வீதி

     இருபுறமும் கடைகள் நிரம்பி வழிகின்றன.

     மக்கள் கூட்டம் அலை மோதுகிறது

     திடீரெனக் கூட்டத்தினரிடையே ஒரு பரபரப்பு

     கொள்ளைக் கூட்டத் தலைவன் ஒருவன், கையில் அரிவாளைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறான்.

21 டிசம்பர் 2018

மனைவி அமைவதெல்லாம்




     கல்லூரிக்குள் நுழைந்த முதல் நாளே, அம் மாணவர், உறுதியாய் ஒரு முடிவினை எடுத்தார்.

     எந்த வேலைக்கும் போகக் கூடாது.

     யாரிடமும் கை கட்டி நிற்கக் கூடாது.

15 டிசம்பர் 2018

கோயில் யானை




     ஆண்டு 1916.

     நவம்பர் 22.

     கடலின் நீர் மட்டம் மெல்ல, மெல்ல வெப்பம் கூடுகிறது

     கடல் நீர் ஆவியாகி, பெரு மலையென மேலெழுகிறது.

     மேலே மேலே சென்ற நீர், குளிர்ந்து மேகமாய் மாறுகிறது.

     கடல் நீர் ஆவியானதால், காற்றின் வேகம் அதிகமாகி, ஒரு சுழற்சி ஏற்படுகிறது.

     சுழற்சி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாய் மாறி, தன்னைச் சுற்றியிருக்கும் காற்றை வெகுவேகமாய் உள்ளிழுக்கிறது.

07 டிசம்பர் 2018

நடமாடும் நினைவுப் பெட்டகம்



சுவையான கதை ஒன்று சொல்லுங்கள் அத்தான்

சொல்லட்டுமா? சோழன் மகளை சேரன் மணந்தான். சேரனுக்கோர் செல்வன் பிறந்தான். அந்த செல்வன் இந்தச் சிலையை மணந்தான்;

 'தெரிந்த கதைதானே இது'

 நடந்த கதை கூட

நடக்காத கதை ஒன்று சொல்லுங்கள் அத்தான்

30 நவம்பர் 2018

கருப்பு, காட்டேரி




கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்.

     இக்காலப் பெரியவர்கள் கூறுவதும், எங்கெல்லாம் கும்பாபிசேகங்கள் நடக்கின்றனவோ, அங்கெல்லாம், ஒலிப் பெருக்கி மூலம், அடிக்கடி, காற்றில் தவழ்ந்து வரும் முழக்கமும் இதுவாகத்தான் இருக்க முடியும்.

24 நவம்பர் 2018

பதுங்கு குழியில் முளைத்த எழுத்து




     பதுங்கு குழி

     சீறிப் பாய்ந்து வரும் குண்டுகளிடமிருந்து, தன்னைக் காத்துக் கொள்வதற்காக, மனிதன் கண்டுபிடித்த எளிமையான, வலிமையான தற்காப்பு ஆயுதம், பதுங்கு குழி.

17 நவம்பர் 2018

பேயும் நோயும்




     அது ஒரு காலம்.

     ஒரு பெண் கருத்தரிக்கிறார்.

     குடும்பமே மகிழ்கிறது

     அன்றிலிருந்து உணவு முறை மாறுகிறது

09 நவம்பர் 2018

40 பைசா வைப்பு நிதி




     வைப்பு நிதி

     நிரந்தர வைப்பு நிதி

     நிரந்தர வைப்பு நிதி என்றால் என்ன என்பதை, இன்று நாம் அறிவோம்.

     அதாவது, ஒரு பள்ளியில், ஆண்டுதோறும், ஒரு பேச்சுப் போட்டி நடத்தவும், போட்டியில் வென்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கவும் விரும்புகிறோம் எனில், நாம் என்ன செய்வோம்.

02 நவம்பர் 2018

தம்பிக்காகத் துடித்தவர்





தூத்துக்குடி, திருநெல்வேலி, பாளையங் கோட்டை பகுதிகளிலே,
உணவுக் கடை வைத்திருக்கிற உத்தமர்களுக்கு,
     எனது தம்பி மீனாட்சி சுந்தரம் பசியால் வாடுகிறானாமே, அங்கும், இங்கும் சற்றித் திரிகிறானாமே, அவனை வழியிலே பார்த்தால், விடுதியில் உட்கார வைத்து, தயவுசெய்து, அவனுக்கு உணவளியுங்கள். உங்களது கணக்கு சரி செய்யப்படும்.

26 அக்டோபர் 2018

வெற்றிலை



      பூதம்

     அது ஒரு பூதம்

     அகத்தி, செம்பை, முருங்கை மரங்கள் நிறைந்த நிலத்தினுள் புகுந்து மெல்ல நடக்கிறது.

     பூதம் தன்னை நெருங்குவதை அறியாத விவசாயி ஒருவர், கண்ணும் கருத்துமாய் நீர் இறைத்துக் கொண்டிருக்கிறார்.

     பூதம் விவசாயியின் தோளைத் தொட்டது.

19 அக்டோபர் 2018

கப்பலேறிய யானை




பிறவாமை வேண்டும் மீண்டும்
    பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும்
     வேண்டும்நான் மகிழ்ந்து பாடி
அறவாநீ ஆடும் போதுன்
     அடியின்கீழ் இருக்க வேண்டும்

     காரைவனம் என்னும் மாநகரில் பிறந்தப் புனிதவதியார் பாடிய, தேவாரப் பாடல் இது.

     காரைவனம்

     இன்றைய காரைக்கால்

     புனிதவதியார்

     காரைக்கால் அம்மையார்

     மனித உரு நீங்கி, பேயுரு பெற்ற, காரைக்கால் அம்மையார், என்றென்றும் சிவனின் காலடியில் இருக்க விரும்பி, வரம் கேட்க, இறைவனும் அருளியதாக உரைக்கின்றன, நம் இலக்கியங்கள்.

12 அக்டோபர் 2018

முத்தன் பள்ளம்





     ஒரு திருப்பத்தில் நான்கு ஆண்கள், தலைக்கு மேலாகக் கட்டிலைத் தூக்கிக் கொண்டு விரைந்து வந்து கொண்டிருந்தார்கள். நான்கு பேரும், கட்டிலின் நான்கு கால்களைப் பிடித்திருந்தார்கள்.

      அவர்களுக்குப் பின்னே இரண்டு பெண்கள், தலைவிரி கோலமாக ஓடி வந்தார்கள். அவர்களின் தலைமயிர்கள் கலைந்து விரிந்து கிடந்தன. அவர்களின் அழுகுரல் அத்தனை தூரம் தாண்டியும் சன்னமாகக் கேட்டது.

05 அக்டோபர் 2018

பீரங்கி மேடு




     தஞ்சாவூர்

     நானூறு ஆண்டுகளுக்கும் முன்

     கி.பி 1618 அல்லது 1619

     தஞ்சையின் ஒரு பகுதி மக்கள், தங்கள் வீடுகளைத் துறந்து, கால்நடைகளையும் அழைத்துக் கொண்டு, வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.

28 செப்டம்பர் 2018

மீண்டும் பெரியக் கோவிலுக்கு வந்த இராஜராஜன்



      ஆண்டு 1932.

      தஞ்சாவூர்

      மெல்ல, மெல்ல அந்தச் செய்தி, ஊர் முழுவதும் பரவுகிறது.

      செய்தியினைக் கேட்ட யாவரும் திடுக்கிட்டுத்தான் போனார்கள்.

      நம்ப முடியாமல், திகைத்துத்தான் போனார்கள்

21 செப்டம்பர் 2018

உய்யகொண்டான்




    
       ஓராண்டு, ஈராண்டு அல்ல

       ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்

       மக்கள்

      கைகளில் ஆயுதங்களை ஏந்தி, மக்கள் பெருங்கூட்டமாய் புறப்படுகிறார்கள்,

14 செப்டம்பர் 2018

யான் வாழும் நாளும் ….



     இன்று, நேற்றல்ல

     இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்

     அரசன் ஒருவரும், அமைச்சர் ஒருவரும் குதிரையேறிப் பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.

     காவிரிக் கரை வழி பயணம் தொடர்கிறது.

07 செப்டம்பர் 2018

மாமன்னன் இராஜராஜன் பள்ளிப்படை



     ஆண்டு 1989

     தஞ்சாவூர்

     சீனிவாசபுரம்

     இராஜராஜன் நகர்

     தஞ்சாவூர் பெரிய கோயிலை ஒட்டியுள்ளப் பகுதி சீனிவாசபுரம் ஆகும்.

     இந்த சீனிவாசபுரத்திற்கு அருகில், புத்தம் புதிதாய் தோன்றிய நகர் இராஜராஜன் நகர்.

     வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் முளைத்துக் கொண்டிருந்த காலம்.

     இந்நகரில், புதிதாய் ஒரு வீடு கட்ட, அஸ்திவாரம் தோண்டுவதற்கானப் பணிகள் தொடங்கியிருந்தன.

     அஸ்திவாரத்தின் ஆழம் பத்து அடியை நெருங்கியபோது, பெரும் கருங்கல் ஒன்று இடைமறித்துத் தடுத்தது.

     நீண்ட கல்லாகத் தெரியவே, கல்லின் திசையில் மண்ணை அகற்றியபோது, பணியாளர்கள் திடுக்கிட்டுத்தான் போனார்கள்.

01 செப்டம்பர் 2018

மண் வாசனை



     சொந்த ஊருக்குப் போவது என்பதே ஒரு அலாதியான விசயம்தான். முடிவெடுத்துவிட்ட நேரத்திலிருந்தே, எதிர்வரும் எந்த விசயமும் பெரிதாகத் தெரியாது.

     போட்டி உலகத்தில் இருந்து, விடுப்பு எடுத்துக் கொண்டு, அங்கிருந்து விலகும், ஒரு தற்காலிகப் பயணம் என்பது, விடுதலை சாசனம் எழுதிக் கொள்வது போலத்தான்.

     அது ஒரு பரோல்

25 ஆகஸ்ட் 2018

தஞ்சையில் சமணம்



       சமணம்

     அகிம்சையே மேலான அறம், தீதும் நன்றும் பிறர் தர வாரா என முழங்கியது சமணம்.

     கிறித்துவ ஆண்டு தொடங்குவதற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே, இம்மண்ணில், சமண சமயம் ஆழ வேரூன்றியது.

     கி.மு.4 ஆம் நூற்றாண்டின் இறுதியில், மௌரியப் பேரரசன் சந்திரகுப்தன் முடி துறந்தார்.

17 ஆகஸ்ட் 2018

தஞ்சை சோழர் அரண்மனை



     தஞ்சை

      கி.பி.850

     தஞ்சையினை ஆண்ட முத்தரைய மன்னன் ஒருவனிடமிருந்து, விஜயாலயச் சோழன், தஞ்சையைக் கைப்பற்றிய ஆண்டு கி.பி.850.

     அன்று முதல், தஞ்சை சோழர்களின் தலைநகராய் மாறியது.

     ஓராண்டு, ஈராண்டு அல்ல,

     முழுதாய் 164 ஆண்டுகள் தஞ்சைதான் சோழர்களின் தலைநகர்.

11 ஆகஸ்ட் 2018

மோகனூர்



       
      5.8.2018

     ஞாயிற்றுக் கிழமை

     நண்பர், கேப்டன் ராஜன் அவர்களுடன், மகிழ்வுந்தில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

     கேப்டன் ராஜன்

     உண்மையான கப்பல் கேப்டன்

04 ஆகஸ்ட் 2018

காப்பியக்கோ




திப்பு சுல்தான் வரலாற்றை
இளைய தலைமுறை அறிந்துகொள்ள
மனிதர்களை மதங்கள் பழிதீர்க்காமல்,
மனங்கள் வழி பார்த்து நேசிக்க –
இத்தியாதி, இத்தியாதி நன்மைகள் இந்த நூலால்
நாட்டுக்குக் கிடைக்கும்.

இந்தக் காவியத்தைப் பள்ளிப் பாடநூலாக வைத்தால்
தமிழின் தகவும், தமிழ்மண்ணை ஆண்டவர் தகவும்
ஒருசேரத் தெரியவரும்.
மாணவருலகு நல்ல மாண்புகளை எய்தும்.

28 ஜூலை 2018

எந்தை மறைந்தார்




     28.6.2018

     வியாழக் கிழமை

     அன்றைய பொழுது, வழக்கம்போல்தான் விடிந்தது.

     எந்தை பணிக்குச் சென்றார்

     நான் பள்ளிக்குச் சென்றேன்.

23 ஜூன் 2018

மனம் சுடும் தோட்டாக்கள்




பள்ளியில் பதற்றத்தில்
அருவருப்பின் உச்சத்தில் செல்ல ….

பணியிடத்தில் வழியின்றி
மறைவிடங்கள் நாடி….

பயணத்திலோ
பரிதவித்து அடக்கிக் கொண்டே …

நகரங்கள் கிராமங்கள்
ஒரே நிலைதான்.

17 ஜூன் 2018

தாகம் தீர்க்கும் வழிகள்




     உணவிற்கு மாற்றாக, தானியம், காய்கறி, பழம், பால், இறைச்சி, கோழி, முட்டை, திண்பண்டம், சத்து மாத்திரைகள், புழு பூச்சிகள் எனப் பலப் பொருட்கள் இருக்கின்றன.

     எரி சக்திற்கு மாற்றாக, விறகு, அடுப்புக்கரி, நிலக்கரி, மண்ணெண்ணை, நில ஆவி, புனல் மின்சாரம், அனல் மின்சாரம்,அணு மின்சாரம், சூரிய சக்தி, காற்று, அலை ஆகியவற்றில் இருந்து பெறும் மின்சாரம், சாண எரி வாயு, எனப் பல வழிகள் இருக்கவே இருக்கின்றன.

     ஆனால், தண்ணீருக்கு மாற்றாக என்ன இருக்கிறது?

09 ஜூன் 2018

சித்தப்பா





நினைத்துவிட்டால் நெஞ்செழுந்தே அடித்துக் கொள்ளும்
   நீள்துயரம் முழுவதுமாய் அழுத்திக் கொல்லும்
நனைந்துவிடும் இருகண்கள் துயரம் மொய்த்து
   நட்புத்திரு வேங்கடத்தால் வேகும் நெஞ்சு
         பேராசிரியர் முனைவர் பொன்னியின் செல்வன்







31 மே 2018

மறக்கப்பட்ட புரட்சி





     இந்திய மக்களுக்குச் சுதந்திரம் அளித்தால், அதிகாரம் நாணயமற்றவர்கள், கொள்ளைக்காரர்கள் மற்றும் போக்கிரிகள் கைகளுக்குச் சென்றுவிடும்.

     ஜாதி, மதம், பதவி ஆகிய காரணங்களுக்காகவும் மற்றும் எந்த காரணமும் இல்லாமலும் கூட, தங்களுக்குள் அடித்து மோதிக் கொள்வார்கள்.

     இந்திய நாடே மலிவான அரசியல் சண்டை, சச்சரவுகளால் காணாமல் போகும் நிலை வரும்.

22 மே 2018

மீண்டும் சந்திப்போம்



     சிறுவயதில், என் விரல் பற்றி அழைத்துச் சென்று, இவ்வுலகை எனக்கு அறிமுகப் படுத்திய, என் அன்பு  சித்தப்பாவின்,

11 மே 2018

கல்வியே அழகு



குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு

      வாரிவிடப்பட்ட கூந்தலும், நன்கு உடுத்தப்பட்ட உடையும், ஒப்பனைக்காக முகத்தில் பூசப்பட்ட மஞ்சளும் ஒருவருக்கு உண்மையில் அழகே அல்ல.

06 மே 2018

இராஜராஜன் விருது




      தென்னம நாடு

      தென்னவன் நாடு

      தஞ்சாவூர், ஒரத்தநாட்டிற்கு அருகில் உள்ள சிற்றூர்.

      பாண்டிய மன்னன் ஒருவன் படையுடன் வந்து, இவ்வூரில் சில காலம் தங்கி இருந்த காரணத்தால் தென்னவன் நாடு என இவ்வூர் அழைக்கப் படுகிறது.

      பாண்டிய மன்னன் இவ்வூரில் தங்கியிருந்த காலத்தில், ஒரு சிவலிங்கத்தை நிறுவி, பூசைகள் செய்து, உணவு உண்டதன் காரணமாக, இவ்வூரில் இச்சிவலிங்கம் உறையும் கோயில், இன்றும், பாண்டியுண்டான் என்றே அழைக்கப்படுகிறது.

27 ஏப்ரல் 2018

ஆசிரியரைப் போற்றியவர்





     ஆசிரியர் என்றாலே, அவர் சகல விசயங்களிலும் நேரடியான அனுபவம் உள்ளவர், அது குறித்து ஆழ்ந்து சிந்திப்பவர் என்றுதான் பொருள்.

     எனவே ஆசிரியர்கள் தங்களைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

     ஒவ்வொரு ஆசிரியரும், தன்னை ஒரு கலைஞனாகவே மதிக்க வேண்டும்.

21 ஏப்ரல் 2018

எழுதப் பிறந்தவர்




      அந்த இளைஞருக்கு வயது இருபது இருக்கலாம்.

      தோளில் ஒரு ஜோல்னா பை.

       பையில் ஒரு புத்தகம், சில உடைகள்.

       மனதில் வெறுமை

       வாழ்வு முழுதும் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதை இலட்சியமாய் கொண்ட இளைஞர் இவர்.

        ஆனாலும் சூழல் அமையவில்லை.

         வீட்டை விட்டு ஓடி வந்துவிட்டார்.