27 ஜூலை 2015

நெருதா


திடீரென்று நம்மைவிட்டுப் பிரிந்த
மாமனிதருக்கு
கண்ணீர் அஞ்சலியைச்
சமர்ப்பிப்போம்


நெருதா


ஆண்டு 1972. சிலி நாடு. தெருவே அதிரும் வகையில் வேகமாய் வந்த, இராணுவ லாரியானது, அந்த வீட்டின் முன், தரைதேய கிறீச்சிட்டு நின்றது.

    லாரியில் இருந்து குதித்த ராணுவ வீரர்கள், வீட்டின் கதவினை உடைத்துக் கொண்டு உள்ளே பாய்கிறார்கள். வீட்டில் யாருமில்லை.

     வீட்டினை சல்லடை போட்டுத் தேடிய வீரர்களின் கண்களில், அந்த அறையின் கதவு தென்பட்டது. பாதாள அறையின் கதவு.

     ஒரு இராணுவ வீரன், தன் துப்பாக்கியின் பயனட்டால் கதவை உடைக்க, கீழ் நோக்கிச் செல்லும் படிகள் தெரிந்தன.

22 ஜூலை 2015

காமராசர் இல்லத்தில் வேதனைமிகு நிமிடங்கள்

   

அந்த அம்மையாருக்கு வயதாகிவிட்டது. முன்புபோல் உழைக்க இயலாத நிலை, சிறு வயது முதலே, உழைத்து உழைத்துக் களைத்த தேகம். இப்பொழுது வயதும் தன் வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டது.

    வீட்டில் கழிவறை வசதிகூடக் கிடையாது. இயற்கை அழைக்கும் பொழுதெல்லாம், பகலானாலும் சரி, நடு இரவானாலும் சரி, தெருவினைக் கடந்து, பொது இடத்திற்குத்தான் சென்றாக வேண்டும்.

      வீட்டிற்கு அருகிலேயே, வீட்டினை ஒட்டியபடி இருந்த ஒரு சிற்றிடம் விற்பனைக்கு வந்தது.

     ஒரு நாள் வீட்டிற்கு வந்த தன் மகனிடம், தயங்கித் தயங்கிக் கேட்டார்.

15 ஜூலை 2015

பச்சைத் தமிழன்


அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
-          பாவேந்தர் பாரதி

     நடுநிலைப் பள்ளிகளை எல்லாம், உயர் நிலைப் பள்ளிகளாக உயர்த்த, கல்வி அதிகாரிகளுடன், திருச்சிக்கு சென்றார் அம் மாமனிதர்.

     ஒரு பள்ளியில் தலைமையாசிரியர் தலைமையில், ஐந்து ஆசிரியர்கள், மாலையோடு, வரவேற்கக் காத்திருந்தனர்.

     பள்ளியினுள் நுழைந்த அம் மாமனிதர், மாலைகளோடு நிற்கும் ஆசிரியர்களைப் பார்த்தார்.

12 ஜூலை 2015

கவிஞரின் இல்லத்தில்

    

கடந்த 2.7.2015 வியாழக்கிழமை அன்று, என் அலைபேசி உயிர் பெற்று, பிசாசு படத்தின் வயலின் இசையை இசைக்கத் தொடங்கியது.

    தொடு திரையை வருடியபோது, வயலின் இசை மௌனமானது, அமைதியாய் வெளிப்பட்டது ஒரு குரல்.

     300 ஆண்டுகளுக்கு முன்னரே பிறந்து, தவழ்ந்து, மறைந்திருக்க வேண்டும் என்று எண்ணுபவர் இவர்.

07 ஜூலை 2015

மகா கலைஞன்

     

ஆண்டு 1895. இலண்டன் மாநகர். அது ஒரு விழா அரங்கு. அந்த ஆறு வயதுச் சிறுவன், சுவற்றிற்கும், இருக்கைகளுக்கும் இடையேயான, நடை பாதையில், ஒண்டி ஒடுங்கி அமர்ந்திருக்கிறான்.

     கலையான முகம். ஆனாலும் குழி விழுந்த கண்கள். உணவினையே மறந்து போன வயிறு. இன்று எப்படியும் உணவு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை, அச்சிறுவனின் முகத்தில் தெரிகிறது.

01 ஜூலை 2015

வெட்டுடைய காளி

     

ஆண்டு 1772. அது ஒரு அடர்ந்த காட்டுப் பகுதி. காட்டுப் பகுதியில், மரங்களுக்கு இடையே புகுந்து, மேடு பள்ளங்களை, ஒரே பாய்ச்சலில் தாண்டித் தாண்டி, அக் குதிரை வேகமாய், வெகு வேகமாய் பறந்து கொண்டிருக்கிறது.

         தாயே, சிவகங்கைச் சீமை வெள்ளையர் வசமாகிவிட்டது. நமக்கு விருப்பாட்சிதான் பாதுகாப்பான இடம். அங்கு செல்லுங்கள்.வெள்ளையர்கள் தங்களைத் தேடிக் கண்டுபிடித்து, தீர்த்துக் கண்ட பல குழுக்களை, பல்வேறு இடங்களுக்கும் அனுப்பியுள்ளனர். உடனே புறப்படுங்கள்.

     அமைச்சரின் குரல் காதுகளில் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது.

     எனது கணவரை, இந்த வெள்ளைக் காரப் பாவிகள், நய வஞ்சகமாக, மறைந்து நின்று சுட்டுக் கொன்று விட்டனர். என்னையும் கொல்லத் துடிக்கின்றனர். பழி வாங்கியாக வேண்டும், படை திரட்டியாக வேண்டும், இழந்த மண்ணை மீட்டாக வேண்டும். அதுவரை பதுங்கித்தான் ஆக வேண்டும்.