சென்னையை அன்று வந்தடைந்த தொடர் வண்டிகள்
அனைத்தில் இருந்தும், பேரூந்துகள் அனைத்தில் இருந்தும், பெண்கள் கூட்டம் கூட்டமாய்
வந்து இறங்கினர். சென்னையே பெண்களால் நிரம்பத் தொடங்கியது.
24 செப்டம்பர் 2014
கரந்தை தர்மாம்பாள்
18 செப்டம்பர் 2014
நண்பா, விரைந்து முன்னேறு
சங்கங்களால் – மக்கள்
சாதித்தல் கூடும் பெரும்பெருங் காரியம்
சிங்கங்கள் போல் – இளஞ்
சிங்கங்கள் போல் – பலம்
சேர்ந்திடும் ஒற்றுமை சார்ந்திட லாலே
எங்கும் சொல்க – கொள்கை
எங்கும் சொல்க – இதில்
எது தடைவந்த போதிலும் அஞ்சற்க
- பாரதிதாசன்
நண்பர்களே, சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த
நாடு நம் நாடு, நம் தமிழ் நாடு.
முதல், இடை, கடை என்னும் முச்சங்கம் வைத்து, தாயினும் மேலாகத் தமிழை வளர்த்ததனால்தான்,
கடற் கோள்களால் மூழ்காது, காலத்தால் கரையாது, இன்றும்
நிலைத்து நிற்கிறது நம் மொழி.
சங்கம் வைத்துச் சமூகப் பணியாற்றுவதானால்,
எண்ணற்ற நல் உள்ளங்களின் ஒத்துழைப்பு வேண்டும், ஊக்குவிப்பு வேண்டும், உடல்
உழைப்பு வேண்டும்.
14 செப்டம்பர் 2014
விருதா? எனக்கா?
எழுதுவதில் ஏதோ ஓர் இனம் புரியாத நிம்மதி
கிடைக்கிறது. இம் மூன்று வருடங்களில், நான் சாதித்ததாக நினைப்பது, ஒன்றுண்டு.
11 செப்டம்பர் 2014
பாரதி போற்றுவோம்
தமிழ்
பாரதியால் தகுதி பெற்றதும்
தமிழால் பாரதி
தகுதி பெற்றதும்
என்னென்று
சொல்வேன்.
பாரதிதாசன்
ஆண்டு 1921. சென்னை திருவல்லிக்கேணி.
பார்த்தசாரதி கோயில். கடந்த இரண்டு நாட்களாகவே, அக்கோயில் யானையின் குணம்
மாறியிருந்தது. அமைதியின்றித் தவித்துக் கொண்டேயிருந்தது. யானையின் பாகன் கூட
அருகில் செல்ல அச்சப்ட்டார்.
கருப்பு கோட், இடையிலோ வெள்ளை வேட்டி,
தலையிலோ முண்டாசு அணிந்த அவர், நெஞ்சம் நிமிர்த்தி, கம்பீரமாக, கையில் தேங்காய்ப்
பழத்துடன் யானையினை நெருங்கினார். இக்கோயிலுக்கு வரும் பொழுதெல்லாம், யானைக்குத்
தேங்காய் பழம் கொடுத்து மகிழ்ச்சி கண்டவர் இவர். இதோ இன்றும் தேங்காய் பழத்துடன்
யானையை நெருங்குகிறார்.
05 செப்டம்பர் 2014
கல்வி, தியாகத் திருநாள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)