கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும் – தென்னை
நல்கிய குளிரிள நீரும்
இனியன என்பேன் எனினும் – தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்
எனப் பாடுவார் புரட்சிக்
கவி, பாவேந்தர் பாரதிதாசன். இத்தகைய உயிரணையத் தமிழை, உலகெலாம் பரப்ப, இன்று
நமக்குக் கிடைத்திருக்கும் பேராயுதம்தான் இணையம்.