20 டிசம்பர் 2019

தமிழ் மரபுத் திருமணம்






     இன்றைக்கு முப்பது வருடங்களுக்கும் முன்.

     அவருடைய வயது 62.

     கண் மருத்துவரைப் பார்க்கச் சென்றார்.

     இவரது கண்களை நன்கு பரிசோதித்த மருத்துவரின் முகத்தில் கவலையின் ரேகைகள் பரவத் தொடங்கின.

13 டிசம்பர் 2019

நோய் நாடி நோய் முதல் நாடி



     ஹோமோ சப்பியன்ஸ்

     இன்று உலகில் வாழும், ஒரே மனித இனத்திற்கு வழங்கப்பட்டுள்ள அறிவியல் பெயர்.

    ஹோமோ பேரினத்திற்குள் இருந்தப் பல இனங்கள், இன்று இல்லாமலேயே போய்விட்டன.

    ஹோமோ பேரினத்தில், இன்று வரை தப்பிப் பிழைத்திருக்கும் ஒரே இனம் ஹோமோ சப்பியன்ஸ்.

08 டிசம்பர் 2019

கழுதை அழுத கதை





     ஆண்டு 1968

     அவர் ஒரு கவிஞர்

     சாதாரணக் கவிஞரல்ல, பாவலர்

     அன்று காலை உணவை உட்கொண்டபின், ஆற்றங்கரையோரம், மெல்லிய தென்றல் காற்றை அனுபவித்தபடி நடந்து செல்கிறார்.

     ஆற்றின் ஒரு கரையில், துணிகளை வெளுப்பதையே தங்கள் தொழிலாகக் கொண்ட சிலர், துணிகளைத் துவைத்துக் கொண்டிருக்கின்றனர்.

     துணிகளைச் சுமந்து வந்தக் கழுதைகள், ஆற்றங்கரைதனில், வரிசையாய் வளர்ந்திருந்த மரங்களின் நிழலில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றன.

     திடீரென்று ஒரு கழுதையும், அதன் குட்டியும் பெருங்குரலெடுத்துக் கூச்சலிடத் தொடங்குகின்றது.

01 டிசம்பர் 2019

13 ஆம் உலகம்




     ஏய், என்ன பண்ணப் போறே? என்று அவள் கையைப் பிடித்து இழுத்தான் மதி.

     இங்கேயிருந்து குதிக்கப் போகிறேன் என்றாள் அவள் தீர்மானக் குரலில்.

     ஒரு நொடி திகைத்துப் போனான் மதி

     உனக்கென்ன வெறி புடிச்சுருக்கா? இப்போ நாம எவ்ளோ உயரத்துல இருக்கோம் தெரியுமா? என்று கேட்டதும்

     பத்தாயிரம் அடி உயரத்தில் என்று மிரட்சியோடு பதிலளித்தாள் பக்கத்தில் இருந்த பணிப்பெண்.