28 ஜூன் 2019

அப்பா





     எந்தை எம்மை விட்டுப் பிரிந்து, ஓராண்டு ஓடிவிட்டது.

     ஓராண்டு முடிவதற்குள், ஒரு நினைவு மலர் வெளியிட வேண்டும் என்ற ஆவல் எனக்கும், என் மனைவிக்கும்.

13 ஜூன் 2019

ஜகதிப்படை




நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீ ராஜ ராஜீஸ்வரமுடையார்க்கு
நாங் குடுத்தநவும், அக்கன் குடுத்தநவும், நம் பெண்டுகள் குடுத்தநவும்
மற்றும் குடுத்தான் குடுத்தநவும்.
---
     ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்.

     புத்தம் புது கோயில்

     கோயில் முழுவதும் ஒரே பரபரப்பு

02 ஜூன் 2019

இப்படியும் ஒரு ராஜதந்திரம்




     ராஜதந்திரம்

     Diplomacy

     விந்தணு ராஜதந்திரம்

     Sperm Diplomacy

     பனாமா நகரில் வசிக்கும் அட்ரியானாவிற்குத் தன் கணவர் மீது, தீராத காதல்.

     இவருக்கு ஓர் ஆசை

     குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்

     தன் கணவர் மூலம். குழந்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்

     பெற்றுக் கொள்ள வேண்டியதுதானே?

     எப்படி முடியும்?

     மனைவி இருப்பது பனாமாவில்

     இவரது, கியூபாவைச் சேர்ந்தக் காதல் கணவர் இருப்பதோ, அமெரிக்காவின் கலிபோர்னியச் சிறையில்.

     அதுவும் கடந்த 12 வருடங்களாய்.

     1996 ஆம் ஆண்டில், அமெரிக்கர்களைச் ஏற்றிச் சென்ற, இரு விமானங்களைச் சுட்டு வீழ்த்திய கியூபாவின் வீரர்களுடன் இணைந்து சதி செய்ததாகக் குற்றச்சாட்டு.

     இரட்டை ஆயுள் தண்டனை

     2001 ஆம் ஆண்டில் இருந்து அமெரிக்கச் சிறையில்.

     இதோ ஆண்டு 2014 பிறந்து விட்டது

     கடந்த 13 வருடங்களாய், சிறையில் வாடும், தன் கணவரின் குழந்தையைத் தன் கருவில் சுமந்தே தீர வேண்டும் என்னும் அடங்கா ஆசை.

     இரு நாடுகளும் பேசின.

     ஜெரார்டோ ஹெர்னான்டஸ்

     கலிபோர்னியச் சிறையில் வாடும், காதல் கணவனிடமிருந்து, விந்தணுவை எடுத்து அனுப்ப, அமெரிக்கா ஒப்புக் கொண்டது.

     அமெரிக்காவில் இருந்து விந்தணு 2455 கி,மீ பறந்து வந்தது

     செயற்கைக் கருவூட்டல்

     அட்ரியானா கருவுற்றார்.

     ஆனாலும், குழந்தை பிறக்கும் முன்னரே, ஹெர்னான்டஸ் பனாமாவிற்கு விடுதலையாகி வந்ததுதான் சிறப்பு.

    

இரு நாட்டுக் கைதிகளைப் பரிமாற்றம் செய்து கொள்ளும் ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஹெர்னான்டஸ்  விடுவிக்கப்பட்டு, காதலியின் உள்ளத்தில் மட்டுமல்ல, இல்லத்திலும் குடியேறினார்.

     Sperm Diplomacy

     குளிரூட்டப்பட்ட, விழா அரங்கில், பொழிவினைச் செவிமடுத்துக் கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்பதைக் கூட மறந்துதான் அமர்ந்திருந்தேன்.

     விந்தணு ராஜதந்திரம்

     இச்செய்தியினை, தமிழ் நாளிதழ் ஒன்றிற்கு, இவர் அனுப்பியபோது, விந்தணு ராஜதந்திரம் என்றே தலைப்பிட்டு அனுப்பியிருக்கிறார்.

     சற்று யோசித்த, நாளிதழ் என்ன தலைப்பிட்டது தெரியுமா?

     இப்படியும் ஒரு ராஜதந்திரம்.

     ராஜதந்திரத்தில் பல வகைகள் உள்ளன

     Mango Diplomacy

     Cricket Diplomacy

     Bus Diplomacy

     Train Diplomacy

     Tea Diplomacy

     Dress Diplomacy

     Selfie Diplomacy

     Dog Diplomacy

 என இம்மனிதர் அடுக்கிக்கொண்டே போகப் போக, அரங்கே உறைந்துதான் போனது.

தஞ்சாவூர், தமிழ்ப் பல்லைக் கழக
உதவிப் பதிவாளர் (ஓய்வு)


முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள்

மொழி பெயர்ப்பில் எழும் சிக்கல்களும் தீர்வுகளும்
என்னும் தலைப்பில்

தஞ்சாவூர், சரசுவதி மகால் நூலகத்தில்
உரையாற்றிய போது,
தனது பல்வேறு மொழிபெயர்ப்பு அனுபவங்களைச் சுவைபட எடுத்துரைத்தார்.

     கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆயிடுச்சி என இன்றையக் கல்லூரி மாணவர்கள், சர்வசாதாரணமாகப் பேசுவதை கேட்கிறோம்.

     ஆனால் முப்பது வருடங்களுக்கும் முன்பே, நடிகர் ஜெமினி கணேசன், நடிகை சாவித்ரி பற்றிய செய்தியில், இந்த கெமிஸ்ட்ரி என்ற வார்த்தையை மொழிபெயர்த்ததாகக் கூறினார்.

Chemistry of Genimi Ganesan and Savithri is always at helm,
On the Screen and Off the Screen

     People என்ற வார்த்தை பன்மையைக் குறிக்கும் என்பதை நாம் அறிவோம்.

     ஆனால் முன்னாள் பாரதப் பிரதமர், டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள், இந்தியா, பாகிஸ்தான் என இரு நாட்டு மக்களைக் குறிக்க Peoples  என்று குறிப்பிட்டதை, மொழிபெயர்த்த பாங்கை நினைவு கூர்ந்தார்.

Our Peoples should live in Peace

மொழி பெயர்ப்பில் எழும் சிக்கல்களும், தீர்வுகளும்

      தன் உரையில் முததாய்ப்பாக, மொழி பெயர்ப்புப் பணியில், தனது முப்பது ஆண்டுகால அனுபவத்தை முன் வைத்துப், பல கருத்துரைகளைத் தோழமையோடு வழங்கினார்.

     மொழி பெயர்ப்பவர், இரு மொழிகளிலும் அறிவு பெற்றவராக இருக்க வேண்டும்.

     இரு மொழிகளின் பண்பாடு, சமூகம் போன்ற சூழல்களை தெளிவாக அறிந்தவராக இருக்க வேண்டும்

     சொல்லுக்கு சொல் மொழி பெயர்க்கக் கூடாது, பொருளைப் புரிந்து கொண்டு மொழி பெயர்க்க வேண்டும்.

     சிறிய சிறியச் சொற்றொடர்களாக மொழிபெயர்க்க வேண்டும்

     பொருத்தமான எளிய சொற்களைப் பயன்படுத்த வேண்டும்

     கடினமானச் சொற்களைத் தவிர்க்க வேண்டும் எனப் பல்வேறு ஆலோசனைகள் வழங்கிப் பொழிவிற்கு மெருகூட்டினார்.

முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள்
தனது முப்பதாண்டுகால
மொழி பெயர்ப்பு அனுபவங்களை
முத்தானத் தமிழில, எளிய நடையில்
அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில்
தெளிந்த நீரோடைபோல் எடுத்து வைத்தார்.

மொழிபெயர்ப்பில் எழும் சிக்கல்களும் தீர்வுகளும்

கடந்த 30,5,2019 வியாழன் பிற்பகல்,
சரசுவதி மகால் நூலக, தமிழ்த துறையினரால்,
மாதந்தோறும் ஓர் இலக்கிய நிகழ்வு
என்னும் திட்டத்தின் கீழ் நடைபெற்ற, இப்பொழிவிற்கு வந்தவர்களை


சரசுவதி மகால் நூலகத் தமிழ்ப் பண்டிதர்
ஏடகம் திரு மணி.மாறன் அவர்கள்
வரவேற்றார்.

சரசுவதி மகர்ல் நூலக நிருவாக அலுவலரும்,
தஞ்சை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருமான
திருமதி பெ.சாந்தா அவர்கள்
முன்னிலையில் நடைபெற்ற
இவ்விழாவிற்கு,
சரசுவதி மகால் நூலக, நூலகர்
முனைவர் எஸ்.சுதர்சன் அவர்கள்
தலைமை தாங்கினார்.

சரசுவதி மகால் நூலக வடமொழிப் பண்டிதர்
முனைவர் வீரராகவன் அவர்கள்
நன்றி கூற விழா இனிது நிறைவுற்றது.

மொழி பெயர்ப்பில் எழும் சிக்கல்களும் தீர்வுகளும்
பயனுள்ள பொழிவு.

இப்பொழிவிற்கு ஏற்பாடு செய்து
திறம்பட நடத்திய
சரசுவதி மகால் தமிழ்ப் பண்டிதர்


ஏடகம் திரு மணி.மாறன் அவர்களின்
பணி போற்றுதலுக்கு உரியது

போற்றுவோம், வாழ்த்துவோம்.