28 பிப்ரவரி 2025

மூங்கில்

  


மடி வேண்டும் – ஒரு

மடி வேண்டும்.

மனச்சுமையை இறக்கிவைத்து

மாளாத கண்ணீரைக்

கொட்டி மனம் கழுவுவதற்கே

மடி வேண்டும் – ஒரு

மடி வேண்டும்

20 பிப்ரவரி 2025

ஈரச்சுவடு

     என்ன செய்யச் சொல்ற, ஒம் பேச்சுலயும், நீ பக்கத்துல ஒக்காந்து வர்ற சந்தோசத்துலயும், புத்திய பறிகொடுத்துட்டேன்.

     அது இந்த 61 ல எனக்கும், 58 ல ஒனக்கும் வாய்ச்சிருக்கு.

     ஊம், வாய்க்கும் வாய்க்கும், கொமட்டுல நாலு இடி இடிச்சா.

     துள்ளி விளையாடுதோ கெழம்?.

15 பிப்ரவரி 2025

விதைப் பொறுக்கு விழா

 


இந்தப் புவிதனில் வாழு மரங்களும்

இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும்

அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும்

ஔடத மூலிகை பூண்டுபுல் யாவும்

எந்தத் தொழில் செய்து வாழ்வன வோ

06 பிப்ரவரி 2025

தமிழகமே வளர்த்த சங்கம்

 

     அந்தோ தமிழகமே, ஏனோ நின் மக்கள், அவர்தம் கடமையை உணர்ந்திலர்? வெள்ளம் மிகுந்து வருகின்றதே, ஏ, தமிழா, நின் கரைகளை வலிமை பெறச் செய்க. விரைந்து நோக்குதி. அன்றேல் நினது வீர வாழ்வு மாயும். நீ அடிமைத்தளைப் பூணுவாய். இஃதுண்மை, இஃதுருதி. இது வீண்மொழியல்ல.

01 பிப்ரவரி 2025

தி.ம.நா.,

 

     ஆண்டு 1948.

     பாபநாசம்.

     தஞ்சை மாவட்டம்.

     காலை 10.00 மணி.

     அந்தச் சிறுவனுக்கு வயது வெறும் 14.

     பாபநாசம் கிளைச் சிறையில் இருந்து வெளியே வருகிறான்.