19 செப்டம்பர் 2025

சான்றாண்மை


     சான்றாண்மை.

     சான்றாண்மை என்பது எல்லாவிதமான பண்பு நலன்களும் நிறைந்த ஒரு சொல்.

     சான்றாண்மை என்பதும் சால்பு என்பதும் ஒன்றுதான்.

06 செப்டம்பர் 2025

கண் மறை மனிதர்கள்

     கடந்த 31.8.2025 ஞாயிற்றுக் கிழமை காலை, என் அலைபேசி அழைத்தது. மறுமுனையில் நண்பர் வெற்றிவேல் முருகன்.

     ஜெயக்குமார் சார், நான் குடும்பத்துடன், இரும்புதலை வந்திருக்கிறேன் என்றார்.

     இன்று மாலை தங்களைச் சந்திக்க வருகிறேன் என்றேன் நான்.

26 ஆகஸ்ட் 2025

கஞ்சிரா

 

     இவர் ஒரு ஜமீன்தார்.

     சிறந்த கலாரசிகர்.

     கலைகளையும், கலைஞர்களையும் போற்றிப் புரக்கும் வள்ளல்.

18 ஆகஸ்ட் 2025

முதல் அரசியல் நாடகக்காரர்

 

     ஆண்டு 1940, டிசம்பர் 31.

     சென்னை, ராயல் நாடக அரங்கம்.

     ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆவலுடன் மேடையைப் பார்த்தவாரே காத்திருக்கின்றனர்.

     திரை விலகுகிறது.

29 ஜூலை 2025

தன்னைத்தானே எழுதிக்கொண்ட கதை

 

     ஆண்டு 1852.

     அமெரிக்கா.

     அது ஒரு பதிப்பகம்.

     அன்று ஒரு புது நூல் அச்சாகி விற்பனைக்கு வந்தது.

     அச்சிடப்பட்ட பிரதிகளின் எண்ணிக்கை ஐயாயிரம்.

     பதிப்பகத்தாருக்கு, இப்புத்தகத்தின்மேல், பெரும் நம்பிக்கை ஏதுமில்லை.

20 ஜூலை 2025

வேழத் தாவளம்

 

     சோழ நாடு.

     சேர நாடு.

     பாண்டிய நாடு.

     தொண்டை நாடு.

     கொங்கு நாடு.

     பழந்தமிழகத்தின் ஐந்து நாடுகள் இவை.

08 ஜூலை 2025

கூடும் ஓடும்



     சுமார் பதினான்கு வருடங்களுக்குமுன், இவர்தான், என்னை ஒரு வலைப்பூ தொடங்க அறிவுறுத்தினார்.

     நானும் என் பெயரிலேயே ஒரு வலைப்பூவைத் தொடங்கினேன்.

     Karanthaijayakumar.blogspot.com

     இவ்வலைப்பூவின் மூலம், 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23 ஆம் நாள், இணைய உலகில், வலதுகாலை எடுத்து வைத்து நுழைந்தேன்.

29 ஜூன் 2025

இருபதே நாளில் ஒரு பாலம்

 


     நாச்சியார் கோயில்.

     கும்பகோணம்.

     பொதுப் போக்குவரத்து தொடங்கப் பெற்றக் காலம்.

     நகரப் பேருந்து எண் 4.

20 ஜூன் 2025

சாம்பலில் இருந்து எழுந்தவர்


     திருப்பதி சென்று திரும்பி வந்தால், ஓர் திருப்பம் நேருமடா.

     திருப்பம் நிகழும், வாழ்வு மலரும் என்று நம்பித்தான், நண்பர்கள் பன்னிரெண்டு பேர் ஒன்றிணைந்து, தஞ்சைக் கரந்தையில் இருந்து, ஒரு வேனில் திருப்பதி புறப்பட்டனர்.

     வழியில் ஒரு திருப்பம் வந்தது.

     வெகுவேகமாய் ஒரு பேருந்தும் வந்தது.

14 ஜூன் 2025

வரலாற்றில் புதுகை

 


     அது ஒரு கோயில்.

     எங்கு பார்த்தாலும் நாகர் சிலைகள் நிரம்பி வழியும் கோயில்.

     கோயில் தெய்வமே நாகர்தான்.

03 ஜூன் 2025

ஆக்கூரார்

 


     ஆண்டு 1936-37.

     பாரதி.

     பாரதி சாதாரணக் கவியா? மகா கவியா?

     விவாதம் எழுந்த காலம்.

     பாரதி மகா கவியே அல்ல, சாதாரணக் கவிதான் என்றார் இவர்.

23 மே 2025

அம்மை யகர அறிவு



      

      அம்மையகரம்.

     தஞ்சை மாவட்டத்தில் ஒரு சிற்றூர்.

     ஒரு சிறு ஆற்றைக் கடந்துதான் அம்மையகரத்திற்குச் செல்லவேண்டும்.

     ஐம்பது ஆண்டுகளுக்கும் முன், இச்சிறு ஆற்றைக் கடப்பதற்குப் பாலம் கிடையாது.

     ஆற்றில் இறங்கித்தான் செல்ல வேண்டும்.

     ஆற்றில் பாலம் இல்லாதது, அவ்வூர் மக்களைவிட அருகில் இருந்த காவல் நிலையக் காவலர்களுக்குத்தான் பெரும் இடையூறாக இருந்தது.

15 மே 2025

ஒலியும், ஒளியும்

 


     ஒலி, ஒளி.

     ஒலி ஆற்றலும், ஒளி ஆற்றலும்தான் உயிரினங்களின் தோற்றத்திற்குக் காரணம் என்பது, நம் முன்னோர்கள், அருளாளர்கள், அகத்தாய்வின் மூலம் கண்டுபிடித்ததாகும்.

02 மே 2025

முனியம்மா



     ஆண்டு 2011.

     அந்தத் தாய், தனது பத்து வயது மகனோடு, மெல்லப் படியேறி, முதல் தளத்தில் அமைந்திருந்த, அந்த அலுவலகத்திற்கு வருகிறார்.

     பார்த்தாலே தெரிகிறது. கிராமப்புறத்தைச் சேர்ந்த பெண்மணி.

     வயல் வெளிகளில், வெயிலைப் பொருட்படுத்தாமல், உழைத்து, உழைத்துக் கருத்தப் பெண்மணி.

26 ஏப்ரல் 2025

மரண இரயில் பாதை

 

     ஆண்டு 1942.

     ஓராண்டுப் பணி.

     அப்படித்தான் சொன்னார்கள்.

     கை நிறைய சம்பளம். அதுவும் டாலரில் தருவோம்.

     பணி முடிந்து திரும்பும்பொழுது, பணிக் கொடையும் தருவோம்.

     இத்திட்டத்தில் சேர்ந்து பணியாற்றினால், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் தருவோம்.

17 ஏப்ரல் 2025

அம்பேத்கரின் தங்கை

  



     சென்னையில் எனக்கொரு தங்கை இருக்கிறார்.

     கேட்டவருக்கு, தன் காதுகளையே நம்பமுடியவில்லை.

     என்ன, என்ன, உங்களுக்குச் சென்னையில் ஒரு தங்கை இருக்கிறாரா?

05 ஏப்ரல் 2025

இசையின் எதிரொலிகள்

 

     எலிகளும் நம்மைப்போல் இவ்வுலகில் வாழ முழு உரிமை பெற்றவை. அவற்றைக் கொல்வதற்கு நமக்கு என்ன உரிமை இருக்கிறது?. அவை நம் வேளாண்மையை நாசப்படுத்தாமல், சேதப்படுத்தாமல் இருப்பதற்கு என்ன வழிகள் உள்ளதென்று சிந்தித்துச் செயல்பட வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம்.

29 மார்ச் 2025

படத்திறப்பு

 



     படத் திறப்பு,

     படத்திறப்பு என்பது, இவ்வுலக வாழ்வு துறந்தவர்களுக்குச் செய்யப்பெறும், 16 ஆம் நாள் நீத்தார் கடன் சடங்குகளுள் ஒன்றாக நிலை பெற்றுவிட்டது.

     நம்மோடு வாழ்ந்து மறைந்தவர்களுக்கு மட்டும், செய்யப்பெறும் ஒரு நிகழ்வாகவே, படத்திறப்பு இன்று மாறிவிட்டது.

     படத்திறப்பு என்பது இறந்தவர்களுக்கு மட்டும்தானா?

21 மார்ச் 2025

தமிழ்ப் புத்தாண்டு – ஒரு புதிய பார்வை

 

தமிழ்ப் புத்தாண்டு எது?

     என்று தொடங்குகிறது?

     தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டா?

     சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டா?

15 மார்ச் 2025

ஐந்திணைப் பெருவாழ்வு

 


     குரங்கு.

     மனிதக் குரங்கு.

     மனிதக் குரங்குகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் ஒருவர்.

03 மார்ச் 2025

பெரியாரும், உமாமகேசரும்

 


     தமிழின் இழந்த பெருமைகளை மீட்கவும், எப்பொழுதெல்லாம் தமிழர் மொழி, நாகரிகக் கலைகள் குலைக்கப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம், தமிழ் மக்களைத் தூண்டியுய்த்துப் பழம் பெருமைகளைக் காப்பதற்காக,

28 பிப்ரவரி 2025

மூங்கில்

  


மடி வேண்டும் – ஒரு

மடி வேண்டும்.

மனச்சுமையை இறக்கிவைத்து

மாளாத கண்ணீரைக்

கொட்டி மனம் கழுவுவதற்கே

மடி வேண்டும் – ஒரு

மடி வேண்டும்

20 பிப்ரவரி 2025

ஈரச்சுவடு

     என்ன செய்யச் சொல்ற, ஒம் பேச்சுலயும், நீ பக்கத்துல ஒக்காந்து வர்ற சந்தோசத்துலயும், புத்திய பறிகொடுத்துட்டேன்.

     அது இந்த 61 ல எனக்கும், 58 ல ஒனக்கும் வாய்ச்சிருக்கு.

     ஊம், வாய்க்கும் வாய்க்கும், கொமட்டுல நாலு இடி இடிச்சா.

     துள்ளி விளையாடுதோ கெழம்?.

15 பிப்ரவரி 2025

விதைப் பொறுக்கு விழா

 


இந்தப் புவிதனில் வாழு மரங்களும்

இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும்

அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும்

ஔடத மூலிகை பூண்டுபுல் யாவும்

எந்தத் தொழில் செய்து வாழ்வன வோ

06 பிப்ரவரி 2025

தமிழகமே வளர்த்த சங்கம்

 

     அந்தோ தமிழகமே, ஏனோ நின் மக்கள், அவர்தம் கடமையை உணர்ந்திலர்? வெள்ளம் மிகுந்து வருகின்றதே, ஏ, தமிழா, நின் கரைகளை வலிமை பெறச் செய்க. விரைந்து நோக்குதி. அன்றேல் நினது வீர வாழ்வு மாயும். நீ அடிமைத்தளைப் பூணுவாய். இஃதுண்மை, இஃதுருதி. இது வீண்மொழியல்ல.

01 பிப்ரவரி 2025

தி.ம.நா.,

 

     ஆண்டு 1948.

     பாபநாசம்.

     தஞ்சை மாவட்டம்.

     காலை 10.00 மணி.

     அந்தச் சிறுவனுக்கு வயது வெறும் 14.

     பாபநாசம் கிளைச் சிறையில் இருந்து வெளியே வருகிறான்.

24 ஜனவரி 2025

கரந்தை

 


     கரந்தையில் பிறந்தவன் நான்.

     கரந்தையில் வளர்ந்தவன் நான்.

     கரந்தையில் படித்தவன் நான்.

     கரந்தையில் பணியாற்றியவன் நான்.

19 ஜனவரி 2025

தமிழர் அறநெறிக் கழகம்

 


     பர்மா.

     பர்மாவிற்கும், தமிழகத்திற்கும் இடையிலான உறவு, தொடர்பு என்பது, இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்த, மிகவும் தொன்மையான உறவாகும்.

      பர்மாவில் தமிழர்கள் உயர்நிலை பெற்று விளங்கிய காலமும் உண்டு.

      பர்மாவின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்திகளாகத் தமிழர்கள் விளங்கிய காலமும் இருந்தது.

07 ஜனவரி 2025

இராசாளியார்

 


மாணவர் கழகம், மருந்தருள் சாலை,

பேணு மன்ன சத்திர மிவற்றை

புதுக்கிய புண்ணிய புனிதமா தவனா

நிலமதை யளந்த நெடுமுடி யண்ணறன்

மலர்ப்பத மறவா மாண்பமை மனத்தோய்