பெரியார் வீட்டில் பிறக்காத பிள்ளை
அம்பேத்கார் பள்ளியில் படிக்காத பிள்ளை
நண்பர்களே, யாரைப் பற்றிக் கூறுகிறேன்
என்பது புரிகிறதா? நாம் சுபவீ என்று அன்போடு அழைக்கும் பேராசிரியர்
சுப.வீரபாண்டியன் அவர்களைத்தான் கூறுகிறேன்.
நம் வீட்டின் வரவேற்பறைக்கே வந்து, ஒன்றே சொல் நன்றே சொல் என நாள்தோறும் இனிய செய்திகளை, நட்பு கொஞ்சும் குரலில், இனிக்க இனிக்க பேசி வரும் பேராசிரியர் சுபவீ அவர்களின், நட்பினை அன்பினைப் பெற்றவன் என்பதில் பெருமிதம் அடைகின்றேன்.