17 டிசம்பர் 2022

சிங்கத் தமிழ்

மூவேந்தர் முத்தமிழ் முனைகூடக் குறையாது

பாவேந்தி இதழ்சிரிக்கும் நாடு – இது

நான்வாழ வகைசெய்து என்போலப் பலபேரை

மேலோங்கச் செய்தநன் னாடு.

                                                        கவிஞர் ப.திருநாவுக்கரசு

 

     ஆண்டு 1819.

     சுல்தான் ஹுசைன் ஷா.

     மலேசியாவின் தென்கோடியில் உள்ள, ஜோகூர் மாநிலத்தை ஆட்சி செய்த சுல்தான்.

     சர் ஸ்டாம்ஃபர்ட் ராஃபிள்ஸ்.

     ஓர் ஆங்கிலேயர்.

04 டிசம்பர் 2022

தஞ்சாவூர் பைத்யம்

 


     நீங்கள் துணிச்சல் மிகுந்த கலைஞரா?

     உங்கள் படைப்புகளைப் பத்திரிக்கைகள், புத்தக நிலையங்கள், பண்டித, புலவ, வித்வசிரோன்மணிகள் மறுக்கின்றனரா?

     இதோ குயுக்தம் வெளியிடக் காத்திருக்கிறது.

     எதை வேண்டுமானாலும் எழுதுங்கள்.

23 நவம்பர் 2022

துபாய் புத்தர்

 


தேடிச் சோறுநிதந் தின்று – பல

     சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்

வாடித் துன்பமிக உழன்று – பிறர்

     வாடப் பலசெயல்கள் செய்து – நரை

கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்

     கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல

வேடிக்கை மனிதரைப் போல – நான்

     வீழ்வே னென்றுநினைத் தாயோ?

     இவரைப் பார்க்கும் பொழுதெல்லாம், முண்டாசுக் கவிஞனின், இந்தப் பாடல் வரிகள்தான் என் நினைவிற்கு வரும்.

15 நவம்பர் 2022

10 நவம்பர் 2022

தமிழால் மருத்துவக் கல்வி

      எல்லா வளர்ந்த நாடுகளுமே, கல்வியைத் தங்களோட தாய்மொழியில்தான் கொடுக்குது.

     ஜெர்மன்ல உயர் மருத்துவப் படிப்பு வரைக்கும் ஜெர்மன் மொழியிலதான் படிக்கிறாங்க.

     ஜப்பான்ல அவங்க மொழியிலதான் எல்லா உயர் படிப்புகளும் இருக்கு.

இஸ்ரேல்ல அழிந்த மொழின்னு சொல்லப்படுற, அவங்க தாய் மொழியான ஹீப்ரூவை மீட்டெடுத்து, பி.எச்டி., வரைக்கும் படிக்கிறாங்க.

     மூத்த மொழி, செம்மொழின்னு சொல்ற தமிழ்ல மட்டும் ஏன் அது சாத்தியமாகலே.

     பின்னனியில் பெரிய அரசியல் இருக்கு.

01 நவம்பர் 2022

திண்ணை

 


     திண்ணை.

     யார் வேண்டுமானாலும் உறங்கி, ஓய்வெடுத்து, தண்ணீர் வாங்கிக் குடித்து தாகம் தனித்துச் செல்ல உதவியது திண்ணை.

     திண்ணை.

     இன்று நாம் இழந்துவிட்ட பண்பாட்டுத் தொட்டில்.

     திண்ணை.

28 அக்டோபர் 2022

தங்கம் மறைந்தார்

     அம்மா பசி இல்லாமல் இருப்பதற்காக, வேலை தேடிச் சென்ற மகன்.

     எப்படியாவது தன் செல்வங்களை உயர்ந்த நிலைக்குக் கொண்டு வந்துவிட வேண்டும் என்று நினைத்து, வாழைப் பழங்களைத், தன் செல்வங்களுக்கு உணவாக் கொடுத்துவிட்டு, அதன் தோல்களைத் திண்று, தன் பசியாற்றிக் கொண்ட தாய்.

    

23 அக்டோபர் 2022

தொவரக் காடு

     ஏண்டி … அசதிக்கு ஒதுங்குனத எல்லாம் நா … கட்டித் தொலைக்கனும்னா எத்தனயதான்டி கட்றது. ஒங்க ஊருல ஒங்களையெல்லாம் தொட்டாலே தீட்டுங்குறானுக.

     போனாப் போகுதுன்னு, எறக்கப்பட்டு தொட்டா, புள்ளய சொமந்துக்கிட்டு புருசன் கேக்குறீங்களோ …

     சொல்லிக்கொண்டே, தாவணியால் கழுத்தை இறுக்கினான்.

    

12 அக்டோபர் 2022

காட்டுயானம்

     ஆண்களுக்குத் தனி.

     பெண்களுக்குத் தனி.

     குழந்தைகளுக்குத் தனி.

     பூப்படைந்த மற்றும் கர்ப்பம் அடைந்திருக்கும் பெண்களுக்குத் தனி.

     தனி, தனி.

     தனி, தனி என்றால், எது தனி?

03 அக்டோபர் 2022

ரஞ்சன் குடி கோட்டை

 


 ஒரு யானை படுத்திருப்பது போன்ற வடிவம் கொண்ட சிறு மலை.

     நான்காயிரம் மீட்டர் சுற்றளவு.

     80 மீட்டர் உயரம்.

     இம்மலையின் உச்சியில் ஒரு கோட்டை.

    

24 செப்டம்பர் 2022

மாமனாரும், மருமகனும்



     ஆண்டு 1906.

     திருவல்லிக்கேணி.

     சுக்குராம செட்டித் தெருவில், தனது நண்பர் வீட்டில் தங்கியிருந்த அம்மனிதர், ஒரு நாள் பட்டணம் நோக்கிச் சென்ற பொழுது, வழியில் ஒரு பெரிய வீட்டைப் பார்க்கிறார்.

     இந்தியா என்னும் வார இதழின் உரிமையாளர் திருமலாச்சாரியார் வீடு என்பதை அறிகிறார்.

      இதழின் உரிமையாளரைச் சந்திக்க எண்ணி, வீட்டிற்குள் நுழைகிறார்.

      அவர் மாடியில் இருக்கிறார் என்கிறார்கள்.

      மாடிக்குச் செல்கிறார்.

      உரிமையாளரைச் சந்திக்கிறார்.

      தனது ஊரையும், பெயரையும் கூறுகிறார்.

      மகிழ்ந்து போன உரிமையாளர், மாடியின் உள் பக்கம் நோக்கி, உங்கள் ஊரார் ஒருவர் வந்திருக்கிறார், வந்து பாருங்கள் என யாரையோ அழைக்கிறார்.

     

15 செப்டம்பர் 2022

வெள்ளந்தி

 


ஊரான் ஊரான் தோட்டத்திலே

ஒருத்தன் போட்டானாம்

வெள்ளரிக்காய்.

காசுக்கு நாலாய்

விக்கச் சொல்லி

காயிதம் போட்டானாம்

வெள்ளைக்காரன்.

    

31 ஆகஸ்ட் 2022

வாருங்கள், வாழ்த்துவோம்

 



     திருமணம்.

     புதுமனைப் புகுவிழா.

     காதணி விழா.

     கோயில் குடமுழுக்கு விழா.

     படத் திறப்பு.

     மகிழ்வைத் தருகின்ற விழாவாக இருந்தாலும், துயரைப் பகிர்ந்து கொள்கின்ற நிகழ்வாக இருந்தாலும், நாம் முதலில் செய்யும் பணி, அழைப்பிதழ் அச்சிடுவதுதான்.

    

25 ஆகஸ்ட் 2022

மறைந்த தமிழோசை

 


     மறதி.

     மறதி ஒரு மாமருந்து என்பார்கள்.

     ஒருவன் தன் வாழ்வில் நிகழும், அத்துணை நிகழ்வுகளையும், நினைவுகளாய் பத்திரமாய் பாதுகாப்பான் எனில், அவன் விரைவில் மனநல மருத்துவரை நாட வேண்டிய அவசியம் வரும்.

    

17 ஆகஸ்ட் 2022

வலவன் ஏவா வான வூர்தி

 


     ஒரு சமுதாயத்தின் பண்பாட்டையும், நாகரிகத்தையும், பொருளாதாரத்தையும், மக்களின் அறிவையும், பழக்க வழக்கங்களையும் ஏடுத்துரைப்பவையே இலக்கியங்களாகும்.

     மேல்நாட்டு அறிவியல் சிந்தனையின் பயனாய், புதுப் புது அறிவியல் கண்டுபிடிப்புகளும், புத்தம் புது அறிவியல் கோட்பாடுகளும் தோற்றம் பெறுவதற்கு, வெகு காலத்திற்கு முன்னரே, இக்கண்டுபிடிப்புகளுக்கான, கோட்பாடுகளுக்கான வித்துக்கள், நம் சங்க இலக்கியங்களில் பரவிக் கிடப்பதைக் காணலாம்.

05 ஆகஸ்ட் 2022

இலக்கிய மாமணி

 





     நினைவாற்றல்.

     நினைவாற்றல் என்பது அனைவரிடமும் இருக்கக் கூடிய ஒன்றுதான்.

     ஆனால்  நினைவடுக்குகளில் எவ்வளவு செய்திகளை சேமித்து வைத்திருக்கிறோம் என்பதில்தான் விசயமே இருக்கிறது.

    

12 ஜூலை 2022

நலம்பெற வாழ்த்துவோம்

  


     மெய்யறம்.

     மெய்யறிவு.

     பாடல் திரட்டு.

     இவையெல்லாம் இவர் எழுதிய கவிதை நூல்கள்.

     திருக்குறளுக்கும், சிவஞான போதத்திற்கும் உரை எழுதியுள்ளார்.

    

07 ஜூலை 2022

வள்ளியம்மை

 



     ஆண்டு 1913.

     தென்னாப்பிரிக்காவின் மாரிட்ஸ் பர்க்.

     இது ஒரு சிறைச்சாலை.

     இந்தச் சிறைச்சாலையில் வாடி வதங்கிக் கொண்டிருந்தார் ஒரு இளம் பெண்.

     தமிழ்ப் பெண்.

   

16 ஜூன் 2022

கோளி

 


மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய் பெருமணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்

சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே

என்னும் தொல்காப்பியப் பாடல் வழி குறிப்பிடப்படும் முல்லை, குறிஞ்சி, மருதம் மற்றும் நெய்தல் எனப்படும் நான்கு நிலப் பாகுபாடே, இன்றைய அத்துணை வேளாண் ஆய்வுகளுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும் அடிப்படையாகும்.

24 ஏப்ரல் 2022

கடைசிக் கடிதம்

 


அன்புகெழுமிய அண்ணலே,

     தங்கள் நலம் விழையும் அவாவினேன். எனது அன்பிற்குரிய சிதம்பரம், அண்ணாமலை, சொக்கலிங்கம், திருநாவுக்கரசு, திருஞானசம்பந்தம் ஆகிய அனைவரும் நலந்தானே.

     தமிழாண்டின் முதனாளாகிய நன்னாளில், கரந்தைத் தமிழ்ச் சங்கத்துக்கு, உதவி செய்யும் பெரியோர்களை யான் நினைப்பதும், அவர்கள் இயற்றிய அறச் செயல்களின் பெருமைகளை நினைத்து நினைத்து நன்றி கூர்வதும் இயல்புதானே.

    

15 ஏப்ரல் 2022

தீ இனிது



இன்நறு நீர் கங்கை ஆறு எங்கள் ஆறே

இங்கிதன் மாண்பிற்கு எதிர் ஏது வேறே?

என்று பாடியவர், கங்கை ஆற்று நீரை, நறு நீர் கங்கை, நல்ல தூய்மையான நீரை உடைய கங்கை என்று புகழ்கிறார்.

     ஒரு காலத்தில் தூய்மையாக இருந்த ஆறுதானே?.

    

08 ஏப்ரல் 2022

இறுதி அழைப்பு

     பிப்ரவரி 28.

     திங்கள் கிழமை.

     உடல்நிலை நலிவுற்று படுக்கையில் முடங்கிக் கிடந்த நான், உடல் நலம் தேறி, 18 நாட்களுக்குப் பின், அன்றுதான் பள்ளிக்குச் சென்றேன்.

     சக ஆசிரியர்களையும், மாணவ, மாணவிகளையும் நேரில் பார்த்த பிறகு, உடலிலும்,  மனதிலும் ஒரு புத்துணர்ச்சி பிறந்தது.

     காலை மணி 11.00

     ஆசிரியர் ஓய்வறையில் அமர்ந்திருந்த பொழுது, என் அலைபேசி ஒலித்தது.

     ஹலோ என்றேன்.

     நீங்கள் யார்?

    

17 மார்ச் 2022

விண்ணில் மறைந்தவர்

 


     நீ எங்கே அமர்ந்தாலும், அவ்விடத்தை சுத்தம் செய்துவிட்டுத்தான் அமர்கிறாய். இடத்தை துடைப்பதற்கான துணி கிடைக்காவிட்டாலும், வாயால் ஊதியாவது, அவ்விடத்தை சுத்தம் செய்த பிறகுதான் அமர்கிறாய்.

     நீ அமரும் இடம் மட்டும் சுத்தமாக இருந்தால் போதாது, உன் மனமும் தூய்மையாக இருக்க வேண்டும்.

    

06 மார்ச் 2022

ஓய்வெடுங்கள் ஐயா

 

     முதன் முதலில் என்னை, ஏடெடுத்து எழுதச் சொன்னவர் இன்று இல்லை.

     எங்கோ ஒரு மூலையில், ஒரு மெட்ரிக் பள்ளியில், மிக மிகக் குறைந்த ஊதியத்தில் உழன்று கொண்டிருந்த எனக்கு, அரசு ஊதியத்தில், ஆசிரியர் பணி வழங்கி, என் வாழ்வை வளப்படுத்தியவர் இன்று இல்லை.

    

26 பிப்ரவரி 2022

அல்லு பகல் நினைவெல்லாம்

     கரிவலம் வந்த நல்லூர்.

     பால் வண்ண நாதர் ஆலயம்.

     ஒரு பெரியவர், கோயில் அலுவலகத்துள் நுழைந்து, அங்கு பணியில் இருந்த பணியாளரிடம், சில தகவல்களைக் கேட்கிறார்.

பெரியவர்:  வரகுண பாண்டியர் வைத்திருந்த, ஏட்டுச் சுவடிகள் எல்லாம், ஆலயத்தில் இருக்கின்றனவாமே?

பணியாளர்: அதெல்லாம் எனக்குத் தெரியாது. என்னவோ வைக்கோற் கூளம் மாதிரி, கணக்குச் சுருணையோடு, எவ்வளவோ பழைய ஏடுகள் இருந்தன.

பெரியவர்: அப்படியா, அவை எங்கே இருக்கின்றன? தயை செய்து அந்த இடத்திறகு அழைத்துப் போவீர்களா?

பணியாளர்:  அதற்குள் அவசரப்படுகிறீர்களே? வரகுண பாண்டியர் இறந்தபிறகு, அவர் சொத்தெல்லாம், கோயிலைச் சேர்ந்துவிட்டதாம். அவர் வைத்திருந்த ஏட்டுச் சுவடிகள் எல்லாம், அப்போதுதான் கோயிலுக்கு வந்ததாம்.

பெரியவர் :  அது தெரியும்.  இப்போது அவை எங்கே இருக்கின்றன?

பணியாளர்: குப்பை கூளமாக கிடந்த சுவடிகளை நான் பார்த்திருக்கிறேன். எந்த காலத்துக் கணக்குச் சுருணைகளோ.

பெரியவர் : வேறே ஏடுகள் இல்லையா?

பணியாளர் : எல்லாம் கலந்துதான் கிடந்தன.

     பணியாளர் பேசப் பேச, பெரியவருக்கு மெல்ல மெல்லக் கோபம் ஏறுகிறது.

30 ஜனவரி 2022

மணியான சேகரன்


A customer is the most important Visitor in our Premises.

He is not depending on us.

We are dependent on him.

He is not an interruption in our work.

He is the purpose of it.

He is not an outsider in our business.

He is part of it.

We are not doing him a favour by serving him.

He is doing us a favour by giving us an opportunity to do so.

    

23 ஜனவரி 2022

கூடலூர் வே.இராமசாமி வன்னியர்

 


     செந்தமிழ்ப் புராணங்களை,

     தமிழ்ப் புலவர்கள் வரலாற்றை,

     செந்தேன் சிந்திடும் தனிப் பாடல்களை, கேட்போர் உளம் குளிர எடுத்துரைக்கும் பாங்கு.

     சிலப்பதிகாரச் செல்வத்தின், செந்தமிழ்ப் பாடல்களை, தாளத்தோடும், இராகத்தோடும் பாடி, கேட்போரை மதுரைக்கே அழைத்துச் செல்லும் திறமை.

    

16 ஜனவரி 2022

ஊகம் வேய்ந்த தமிழர்

 


உச்சங்கோல் எண்கோல் உயரம் பதினாறுகோல்

எச்சம் பிரிவாய் இருபதுபோல் – தச்சளவு

மண் கொள்ளக்கொண்ட கோல் என்கொல் வளவர்கோன்

கண் கொள்ளக் கண்ட கரை.

     கரை புரண்டோடும் காவிரியின் வெள்ளப் பெருக்கை, கட்டுப்படுத்த நினைத்த கரிகாலன், காவிரியுடன் கொள்ளிடம் இணையும் இடத்தில், கொள்ளிடப் படுகை, காவிரியைவிடத் தாழ்வாக இருப்பதைக் கண்டு, அவ்விடத்தில் அணை கட்ட முடிவெடுத்து, காவிரியின் கரைகளை உயர்த்தி, அணை கட்டினான்.