ஆண்டு
1957,
தஞ்சாவூர்,
பூண்டி புட்பம் கல்லூரி
ஒரு
கிராமத்துச் சிறுவன், தன் தந்தையுடன் அலுவலகத்தில் காத்திருக்கிறான்.
திருவையாறு,
சீனிவாசராகவா உயர்நிலைப் பள்ளியில், பள்ளி இறுதி வகுப்பை முடித்தவன். பூண்டி கல்லூரியில்,
புதுமுக வகுப்பில் சேருவதற்காகக் காத்திருக்கிறான்.
அலுவலர்
ஒருவர், இம்மாணவனது, மதிப்பெண் சான்றிதழை வாங்கிப் பார்த்துவிட்டு, முகம் சுழித்து,
இந்த மார்க்குக்கு இங்கே இடம் கிடையாது
என்கிறார்.
தந்தையோ, அலுவலரிடம் கெஞ்சுகிறார்,
என் மகனைச் சேர்த்துக் கொள்ளுங்கள் என
மன்றாடுகிறார்.
முடியாது உறுதியாய் மறுத்துவிடுகிறார் அலுவலர்.
சிறிது நேரம் யோசித்த தந்தை, தன் மகனைப் பார்த்தார்.
வாடா,
இந்த காலேஜ் இப்ப வந்ததுதாண்டா. இது வராததற்கு முன்பிருந்தவன் எல்லாம், செத்தா போயிட்டான்.
ஏர் இருக்கு, கலப்பை இருக்கு. நீ நல்ல மனுசனா பிழைச்சுக்கலாம்டா. கவலைப் படாதே வா.