பெருக
அழைக்கவும் நேரமே யில்லை
உற்றார்
உறவினர்க்காக உழைக்க
ஒருநாள்
ஒருநொடி இருந்ததே இல்லை
கற்றவர்
தமிழர் என்னுமோர் உயர்நிலை
காண வேண்டி
இல்லந் துறந்து
முற்றுங்
காலத்தைத் தமிழ்த் தொண்டாக்கினோன்
வாழ்க
தமிழ் முனிவன் திருப்பெயர்.
பெற்ற அன்னையை, அம்மா என மனம் மகிழ அழைத்து மகிழவும்,
உற்றார் உறவினர்க்காக உழைத்திட, ஒரு நாளைக் கூட ஒதுக்கிடாமல், ஒரு நாளின் ஒரு மணி நேரத்தைக்
கூட ஒதுக்கிடாமல், ஒரு மணியின் ஒரு நிமிடத்தைக் கூட ஒதுக்கிடாமல், தமிழ் தமிழ் தமிழ்
என நெஞ்சம் துடிக்கத் துடிக்க, அயராது பாடுபட்டிருக்கிறார் ஒரு மனிதர், ஒரு மாமனிதர்
என்பதை நினைக்கும் பொழுதே நெஞ்சம் நெகிழ்கிறதல்லவா, விழிகள் வியப்பால் விரிகின்றன அல்லவா.