2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கின்படி,
24.60 கோடி இந்தியக் குடும்பங்களில், 67 சதவீத மக்கள் மட்டுமே மின்சாரம் பெறுகின்றனர்.
மீதி 33 சதவீத மக்கள் மண்ணென்ணெய் விளக்கில்தான் இரவில் வெளிச்சம் பெறுகின்றனர்.
இந்தியாவின் மின் சக்தியின் தேவை, நாள் தோறும்
அதிகரித்துக் கொண்டே போகிறது.
நாம் என்ன செய்யப் போகிறோம்
இதை எப்படி எதிர்கொள்வது?
வருங்கால சந்ததிகளுக்கு, ஒளிமயமான எதிர்காலத்திற்கு
என்ன வழி செய்யப் போகிறோம்?
என்று
பாடுவாரே ஒரு சித்தர் நினைவிருக்கிறதா. இச்சித்தர் இப்புவியில் இறுதியாய் நடமாடிய மண்ணில்,
கடற்கரை மணலில், கடந்த 4.3.2016 வெள்ளிக் கிழமை, பிற்பகல் 11.00 மணியளவில், நானும்
கால் பதித்தேன்.
சித்தர் இறுதியாய் சுவாசித்த, இக்கடற்கரைக் காற்றை
நானும் மெல்ல மெல்ல சுவாசித்தேன்.
புதுகைக் கவிஞர், கணினித் தமிழ்ச் சங்க ஒருங்கிணைப்பாளர் அவர்களிடமிருந்து ஓர் உத்தரவு, ஓர் அன்புக் கட்டளை, இணைய வழி பறந்து வந்தது.
மனம்
கவர் பதிவர்கள் பற்றி ஓர் பதிவு எழுதுக.
மீற முடியுமா? கால அவகாசம் மட்டும் கொடுங்கள்
ஐயா? என அனுமதி கேட்டிருந்தேன் .தேர்வுக் காலம் அல்லவா.
இதோ, தங்களின் எழுத்துக்களாலும், சிந்தனைகளாலும்,
செயற்கரியச் செயல்களாலும், என் உள்ளம் கவர்ந்த பதிவர்ககளில், ஒரு சிலரை மட்டும் இப்பதிவில்
சந்திக்கலாம், வாருங்கள்.