அண்ணாமலை கின்னஸ் சாதனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அண்ணாமலை கின்னஸ் சாதனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

11 ஜூன் 2015

அண்ணாமலைப் பல்லைக் கழகத்தின் கின்னஸ் சாதனை


கருமைஉரு, வெண்மைப் பல், நரைத்ததலை குறைமீசை
கறையற்ற செம்மைமனம், புன்சிரிப்பு எளிமை நிலை
பிறைகருத்த பெருநெற்றி அதில் மணக்கும் நறுஞ்சாந்தம்
மறைவல்ல ஒளிமுகத்திற் கொப்புமையும் இலையன்றோ
-           சி.அரசப்பன்

     ஆண்டு 1948. தஞ்சாவூர், கரந்தைத் தமிழ்ச் சங்கம். சிங்கம் போல் கம்பீர நடை நடந்து, செம்மாந்தக் குரலில், சங்க இலக்கிய, இலக்கணங்களை, நகைச்சுவை என்னும் நறுந்தேன் கலந்து, மாணவர்கள் மயங்கும் வகையில், எடுத்தியம்பும் ஆற்றல் பெற்ற, அப்பேராசிரியரின் கால்களில் ஓர் தளர்ச்சி.

     மருத்துவம் பார்த்தும் பலனில்லை. நாளாக, நாளாக நிற்கக் கூட இயலாத நிலை.