வெறும் பைகள்
கணத்த இதயம்
முதுமை.
மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய் பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே
என்னும் தொல்காப்பியப் பாடல் வழி குறிப்பிடப்படும் முல்லை, குறிஞ்சி, மருதம் மற்றும் நெய்தல் எனப்படும் நான்கு நிலப் பாகுபாடே, இன்றைய அத்துணை வேளாண் ஆய்வுகளுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும் அடிப்படையாகும்.
அன்புகெழுமிய அண்ணலே,
தங்கள் நலம் விழையும் அவாவினேன்.
எனது அன்பிற்குரிய சிதம்பரம், அண்ணாமலை, சொக்கலிங்கம், திருநாவுக்கரசு, திருஞானசம்பந்தம்
ஆகிய அனைவரும் நலந்தானே.
தமிழாண்டின் முதனாளாகிய நன்னாளில்,
கரந்தைத் தமிழ்ச் சங்கத்துக்கு, உதவி செய்யும் பெரியோர்களை யான் நினைப்பதும், அவர்கள்
இயற்றிய அறச் செயல்களின் பெருமைகளை நினைத்து நினைத்து நன்றி கூர்வதும் இயல்புதானே.
இங்கிதன் மாண்பிற்கு எதிர் ஏது வேறே?
என்று
பாடியவர், கங்கை ஆற்று நீரை, நறு நீர் கங்கை,
நல்ல தூய்மையான நீரை உடைய கங்கை என்று புகழ்கிறார்.
ஒரு காலத்தில் தூய்மையாக இருந்த ஆறுதானே?.
பிப்ரவரி 28.
திங்கள் கிழமை.
உடல்நிலை நலிவுற்று படுக்கையில் முடங்கிக் கிடந்த
நான், உடல் நலம் தேறி, 18 நாட்களுக்குப் பின், அன்றுதான் பள்ளிக்குச் சென்றேன்.
சக ஆசிரியர்களையும், மாணவ, மாணவிகளையும் நேரில்
பார்த்த பிறகு, உடலிலும், மனதிலும் ஒரு புத்துணர்ச்சி
பிறந்தது.
காலை மணி 11.00
ஆசிரியர் ஓய்வறையில் அமர்ந்திருந்த பொழுது, என்
அலைபேசி ஒலித்தது.
ஹலோ
என்றேன்.
நீங்கள்
யார்?