29 ஜூன் 2016

வெற்றிவேல் முருகன் பேசுகிறேன்
          1976 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 30 ஆம் நாள். இந்நாள் என் வாழ்வில் மறக்க இயலாத நாள்.

        தாயின் கருவறையில் குடியிருந்த நான், அந்த அன்புத் தாயின் கரங்களில் முதன் முதலாய் தவழ்ந்த நாள்,  இந்நாள். ஆம் நண்பர்களே, நான் பிறந்த பொன்னாள் இது.

        தமிழகத்தின் தருமபுரி மாவட்டத்தின் கோட்டப் பட்டி என்னும் சிற்றூரில் பிறந்தவன் நான்.

     அழகிய கிராம்ம். அன்பு நிறைந்த பெற்றோர். வேறு என்ன வேண்டும் எனக்கு.

21 ஜூன் 2016

முதல் மனித வெடிகுண்டு

   
     ஆண்டு 1780.

     விஜயதசமி. இரவு நேரம்.

     சிவகங்கை..

    தீ பந்தங்களின் ஒளியில் இராஜராஜேசுவரி அம்மன் கோயில் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.

     பெண்கள் கூட்டம் அலை மோதிக் கொண்டிருக்கிறது.

     அப்பொழுதுதான் கோயிலுக்கு அருகில் வந்த, அந்தப் பெண், இரு கைகளாலும் கூட்டத்தைப் பிளந்து கொணடு முன்னேறுகிறார்.

     சுடர் விட்டுப் பிரகாசிக்கும் கண்கள். மகிழ்வைச் சுமந்த உதடுகள்.

    உடலைச் சுற்றி இறுகப் பற்றியிருக்கும் புடவைக்குள், ஏதோ ஒரு பொருள் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது.

    சாதாரணப் பார்வைக்குப் புலப்படாத வகையில், அப்பெண்ணின் புடவைக்குள் ஓய்வெடுக்கிறது, ஓர் வாள்.

10 ஜூன் 2016

புதிய மரபுகள்ஆண்டு 1976.

    அரசர் கல்லூரி, திருவையாறு.

    கல்லூரி மாணவர்களால் அந்தச் சாலையே நிரம்பி வழிகிறது.

    மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கூடிய மாணவர்களின் ஊர்வலம்.

     ஊர்வலத்தில் நடுநாயகமாக, ஒரு மாணவரைப் பல மாணவர்கள், தங்களின் தோளில் சுமந்தபடி, வெற்றி முழக்கங்களை முழங்கியபடி செல்கின்றனர்.

    காரணம் என்ன தெரியுமா?

06 ஜூன் 2016

அசல் மனிதர்சட்டசபை உறுப்பினர்கள் சொல்கிற சிபாரிசுகளைப் புறக்கணித்து விடுங்கள். மக்கள் குறைகளைக் கேட்டு, அந்தக் குறைகளை நிவர்த்திக்க வேண்டும். மனசாட்சிக்கு எது சரியோ அதை மட்டும் செய்யுங்கள். தூய்மையான நிர்வாகத்துக்கு நீங்கள்தான் பொறுப்பாவீர்கள்.

எம்.எல்ஏ., தலையிட்டார், மந்திரி சொன்னார், அதற்காகத்தான் இப்படி உத்தரவு பிறப்பித்தேன் என்று சொல்லக் கூடாது.