18 ஜனவரி 2024

ஓர் உளி, எழுதுகோலான கதை

 


     ஆண்டு 1945.

     கரந்தை.

     வடவாற்றங்கரையின், தென் கரைக்கு அருகில் அமைந்துள்ள, பாலோபா நந்தவனம் கோயிலுக்கு முன்புறம், ஒரு பெரும் கல்லால், ஒரு நவக்கிரக மேடை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

     ஓர் இளைஞர், இடுப்பில் நான்கு முழ வேட்டி, தோளில் ஒரு துண்டு, கலைந்த தலை, வெற்றிலை போட்டுப் போட்டு கறை படிந்த பற்களுடன், பெரும் கல் ஒன்றினைக் கொத்தி சீரமைக்கும் பணியினைச் செய்து கொண்டிருக்கிறார்.

03 ஜனவரி 2024

கண்டேன் உறவை

     என் தாய், சகுந்தலா அம்மையார் மறைந்து எட்டு மாதங்கள் கடந்து விட்டன.

     நான்கு மாதங்களில், முதலாமாண்டு நினைவு நாள் வருகிறது.