27 ஏப்ரல் 2016

தியாகத்தின் திருஉரு    ஆண்டு 1919. அன்னியர் ஆட்சியில் அடிமைப் பட்டுக் கிடந்த தேசம் அது. சீர்திருத்தச் சட்டம் ஒன்றினை இயற்றிய அன்னியர்கள், அச் சட்டத்தின்படி, மாகாண, மத்திய சட்டசபைகளுக்குத் தேர்தல் நடத்த இருப்பதாக அறிவித்தனர்.

     1920 இல் தேர்தலும் நடைபெற்றது. தேசிய அளவிலான கட்சியும், மாகாண அளவிலான கட்சியும் தேர்தலை எதிர் கொண்டன.

      கல்வியில், வேலை வாய்ப்பில், சமூகத்தில் உரிமை வேண்டும், சமமாய் உரிமை வேண்டும், சம உரிமை வேண்டும் என்று உரத்துக் கூறி, மனித தர்மமே இன்றைய தேவை என முழங்கியது மாகாணக் கட்சி.

20 ஏப்ரல் 2016

காளையார் கோயில்ஆண்டு 1772. ஜுன் மாதம் 26 ஆம் நாள்.

         காளையார் கோயில். காளேசன் ஆலயம்.

         அதிகாலை நேரம். பட்டு வேட்டி பளபளக்க மன்னர். அருகிலேயே இளைய ராணி. கோயிலுக்கு வெளியே, கட்டுக்கு அடங்காத கூட்டம். இறைவனைத் தரிசிக்க வந்திருக்கும், மன்னரைத் தரிசிக்க.

     இறைவனுக்கு கற்பூர ஆராதனை காட்டப் படுகிறது. மன்னர் இரு கரம் குவித்து, கண்களை மூடி, ஆண்டவனை மனதார வணங்கிக் கொண்டிருக்கிறார்.

     திடீரென்று ஆலயத்திற்கு வெளியில், ஓர் பலத்த வெடிச் சத்தம். மக்களின் கூக்குரல். துப்பாக்கிக் குண்டுகளின் தொடர் முழக்கம்.

14 ஏப்ரல் 2016

வள்ளல்

   
 ஆண்டு 1901.

     நகர் முழுவதும் மகிழ்ச்சி அலை பரவிக் கொண்டிருக்கிறது.

     ஊரெங்கும் ஒரே பேச்சு,

     மன்னர் வந்திருக்கிறார்.

     மக்கள் ஒவ்வொருவரும், மற்றவர்களிடம் இதே செய்தியை மகிழ்வோடு பகிர்ந்து கொள்கிறார்கள்.

     மன்னர் நம் ஊருக்கு வந்திருக்கிறார்.

    தொலைவில் நின்றாவது மன்ன திருமுகத்தைப் பார்த்தாக வேண்டும். அவர்தம் காந்தக் குரலினைக் கேட்டாக வேண்டும். மக்கள் ஆசைப் படுகின்றனர்.

      மன்னர்

      சிறந்த கல்விமான்.

      தமிழாய்ந்த பெருமகன்.

      சொற்பொழிவாற்றுவதில் வித்தகர்

     ஊர் பெரியவர்கள் சிலர் ஒன்று சேர்ந்து சென்று, மன்னரைப் பார்க்கிறார்கள். ஒரு வேண்டுகோளினையும் முன் வைக்கிறார்கள்.

07 ஏப்ரல் 2016

டாப் ஸ்டேசன்

   

கடந்த ஆண்டு 2015, மே மாதம் 17ஆம் நாள். டெம்போ டிராவலர் வேன், வளைந்து நெளிந்து, மெல்ல மெல்ல, மலைப் பாதையில் மேலே மேலே ஏறிச் சென்று கொண்டிருக்கிறது.

    இரு புறமும் தேயிலைத் தோட்டங்கள். பிற்பகலிலேயே எங்கும் இருள் சூழ்ந்த தோற்றம். வானில் இருந்து அவ்வப்போது கீழிறங்கும் மழைத் துளிகள்.

      ஆடைகளை ஊடுருவி, உடலைச் சில்லிடச் செய்யும் குளிர்.

     குளிரால் உடல் சில்லிட்டாலும், மனமெங்கும் மகிழ்ச்சி அலை பரவிக் கொண்டே இருக்கிறது. டெம்போ வேன் மெல்ல மெல்ல மேலே மேலே ஏறிக் கொண்டே இருக்கிறது.