27 ஏப்ரல் 2016

தியாகத்தின் திருஉரு



    ஆண்டு 1919. அன்னியர் ஆட்சியில் அடிமைப் பட்டுக் கிடந்த தேசம் அது. சீர்திருத்தச் சட்டம் ஒன்றினை இயற்றிய அன்னியர்கள், அச் சட்டத்தின்படி, மாகாண, மத்திய சட்டசபைகளுக்குத் தேர்தல் நடத்த இருப்பதாக அறிவித்தனர்.

     1920 இல் தேர்தலும் நடைபெற்றது. தேசிய அளவிலான கட்சியும், மாகாண அளவிலான கட்சியும் தேர்தலை எதிர் கொண்டன.

      கல்வியில், வேலை வாய்ப்பில், சமூகத்தில் உரிமை வேண்டும், சமமாய் உரிமை வேண்டும், சம உரிமை வேண்டும் என்று உரத்துக் கூறி, மனித தர்மமே இன்றைய தேவை என முழங்கியது மாகாணக் கட்சி.

      தேர்தல் நடைபெற்றது

      வாக்குகள் எண்ணப் பட்டன.

      மாகாணக் கட்சி அமோக வெற்றி பெற்றது.

      மாகாணமே திருவிழாக் கோலம் பூண்டது.

     ஆளுநர் லார்டு வில்லிங்டன், மாகாணக் கட்சித் தலைவருக்கு, அழைப்பு விடுத்தார்.

வாருங்கள்,
வந்து ஆட்சியினை அமையுங்கள்.
அரசுக் கட்டிலில் அமருங்கள்.

    மாகாண மக்கள், தங்களின் தலைவர் அரியணையில் ஏறும் காட்சியைக் கண்ணாரக் காண ஆவலுடன் காத்திருந்தனர்.

    தலைவர் அறிவித்தார்.

எனக்குப்  பதவி  வேண்டாம்.

    உலகே திடுக்கிட்டுத்தான் போனது. முதல்வர் பதவியைத் துச்சமாய் மதித்துத் தூக்கி எறிகிறாரே ,என்ன மனிதர் இவர் என உலகே திடுக்கிட்டுத்தான் போனது.

    தேடி வரும், தம்மை நாடிவரும், முதல்வர் பதவியைப் புறக்கணிக்க, தனது கைகளால் புறந்தள்ள, எத்துனை நெஞ்சுரம் வேண்டும். உலகே வியந்துதான் போனது.

     ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்த ஆளுநரோ, இப்படியும் ஒரு மனிதரா?, மூக்கில் விரலை வைத்து அதிசயித்துப் போனார்.

நமது நாட்டின் வரலாற்றில், முன் எப்போதும் இல்லை என்னும்படி, அரசியல் ஞானமற்ற, பாமர மக்களைத் தட்டி எழுப்பிய பாவத்துக்காக, என்னையும், அண்மையில் மறைந்த, என்னருமை சகத் தலைவரையும்,

அன்னியருக்கு வால் பிடிப்பவர்கள்,
அன்னியரின் பூட்சு காலை நக்குபவர்கள்
என
நூறு சதவிகித தேச பக்தர்களான, எதிர் கட்சியினர் தூற்றினர்.

எனவே, நான் இப்பதவியினை ஏற்பேனேயானால், எனது புனிதமான கட்சிக்குக் களங்கம் விளைவித்தவன் ஆவேன். எனவே அரியணை ஏறேன்.

     தலைவரின் விளக்கம் கேட்டு, நாடே விக்கித்துப் போனது. இவர் போன்ற மாசற்ற மனிதரல்லவா, நம்மை ஆள வேண்டும்.

     பல்வேறு தலைவர்களும், அனைத்து மக்களும் வேண்டினர். ஆயினும் அவர் மனம் மாறவில்லை.

      வேறொருவரை முதல்வராக்கி விலகி நின்றார்.

      நண்பர்களே, நம்ப முடிகிறதா உங்களால். முதல்வர் பதவியைத் தூக்கி எறிந்த மனிதர், மாமனிதர் ஒருவரும், இப்புவியில் வாழ்ந்துள்ளார் என்பதை நம்ப முடிகிறதா?

     ஆனால் உண்மை.

      எந்த நாட்டில் இந்த நிகழ்வு அரங்கேறியது தெரியுமா?

      சொன்னால் நம்பமாட்டீர்கள்

      இந்தியாவில்.

      என்ன இந்தியாவிலா?

      இந்தியாவில் எந்த மாநிலத்தில்?

      சொன்னால் நம்பவே மட்டீர்கள்.

      பெருமூச்சு ஒன்றினை, ஒருமுறை விட்டுக் கொள்ளுங்கள்.

      அம்மாநிலம்,

      தமிழ்நாடு

      அன்றைய, சென்னை மாகாணம்.

     என்ன? என்ன? நமது மண்ணிலா? அதுவும் நமது தமிழ் மண்ணிலா?

     ஆம், உண்மை நண்பர்களே, உண்மை.

தனக்குப் பதவி வேண்டாம் என்று ஆளுநருக்குக் கடிதம் எழுதி,
1920 ஆம் ஆண்டு,
திவான் பகதூர் ஏ.சுப்பராயலு ரெட்டியார் அவர்களை,
முதல்வர் ஆக்கினார் இவர்.

இவர்தான்,

நாமிருக்கும் நாடு, நமதென்று அறிய வேண்டும்.
இங்கு நாம் அடிமைகளாய் வாழ்வது அடாது.

திராவிட வீரனே,
விழி,  எழு,   நட

என உணர்வூட்டியவர். திராவிட உணர்வுகளைத் தட்டி எழுப்பியவர்.

நீதிக் கட்சியின்
தலைவர்,
வெள்ளுடை வேந்தர்
சர் பி.தியாகராயர்.

தியாகராயரின் தியாகத்தைப் போற்றுவோம்

(சென்னையில் டி.நகர் என்றழைக்கப்படும், தியாகராய நகர் இவர் பெயராலேயே வழங்கப் படுகிறது)
   

  

63 கருத்துகள்:

  1. ஆழமான கட்டுரை..இப்படியும் இருந்தார்களா? வியக்கவைக்கிறது...அருமையான..நெகிழும் பதிவு

    பதிலளிநீக்கு
  2. காலத்துக்கேற்ற பதிவு!

    தம +1

    பதிலளிநீக்கு
  3. நல்ல பதிவு.நாட்டுக்காக உழைத்த தலைவர்கள் தமிழக பூமியில் வாழ்ந்ததால்தான் இன்றும் மனிதநேயம் வாழ்ந்துகொண்டிருக்கிறது.வாழ்க தியாகராயர் அவர் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.நன்றி.

    பதிலளிநீக்கு
  4. சர் பி. தியாகராயர் அவர்களின் பெயரிலேயே 'தியாகம்' இருக்கிறதே!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே
      பெயரில் மட்டுமல்ல செயலிலும் தியாகத்தைச் செய்தவர்
      நன்றி நண்பரே

      நீக்கு
  5. இத்தலைமுறையினர் அறிந்துகொள்ளவேண்டிய ஒன்றை, உரிய நேரத்தில் பதிவு செய்துள்ளீர்கள். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் நண்பரே முதன் முதலாக அறிகின்றேன் நம்ம மறுக்கின்றது மனம் இப்படி மனிதர்களும் வாழ்ந்த தமிழ் நாட்டில் இன்று எவ்வளவு கீழ்த்தரமான ஆட்சியாளர்கள்.
    த.ம.4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியும் மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதில் பெருமை கொள்வோம்
      நன்றி நண்பரே

      நீக்கு
  7. T நகர் என்றழைத்தே அந்த தியாக சீலரை மறந்துவிடுவோம் போலிருக்கிறது !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டி நகர் என்றழைப்பதே, தீயாகச்சீலரின் தியாகத்தை மறைப்பதற்கான வழிதான்
      நன்றி நண்பரே

      நீக்கு
  8. நல்ல பதிவு.எந்த புத்தகத்தில் இருந்து எடுத்த தகவல் எனச் சொன்னால் மேலும் படிக்கலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணா கண்ட தியாகராயர்
      நீதிக் கட்சி அரசு பாடுபட்டது யாருக்காக?
      ஜஸ்டிஸ் கட்சி அரசின் சாதனைகள்
      போன்ற நூல்களில் இருந்தே மேற்கண்ட செய்திகளை
      எடுத்தேன் நண்பரே
      நன்றி

      நீக்கு
  9. இத்தலைமுறையினர் அறிந்துகொள்ளவேண்டிய ஒன்றை, உரிய நேரத்தில் பதிவு செய்துள்ளீர்கள். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  10. சர்.பி. தியாகராயரின் தியாக உள்ளம் வியக்கவைக்கிறது. தன்னலம் துறந்தவர்கள் அரசியலில் வாழ்ந்த இத்திருநாட்டில் இப்போது தன்னலமில்லாத அரசியல்வாதிகளைக் காண்பதே அரிதாக உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் சகோதரியாரே
      அரிதினும் அரிதானத் தலைவர் தியாகராயர்
      நன்றி சகோதரியாரே

      நீக்கு
  11. ஆழமான கட்டுரை..இப்படியும் இருந்தார்களா? வியக்கவைக்கிறது...அருமையான..நெகிழும் பதிவு

    பதிலளிநீக்கு
  12. ஏற்கெனவே அறிந்த செய்தியாக இருந்தாலும் இன்றைய தலைமுறையும் அறியச் செய்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  13. முதல்வர் பதவிக்காக
    தன்னைத் தியாகம் செய்யும்
    காலத்திலேயே
    முதல்வர் பதவி வேண்டாமென
    தன்னைத் தியாகம் செய்த
    பெருந் தலைவர் வரலாற்றைப் பகிர்ந்தமை
    பாரட்டுக்குரியது!

    பதிலளிநீக்கு
  14. நீதிக்கட்சியினர் ஆங்கிலேயருக்குத் துணை போனவர்கள் என்ற கருத்தும் இருந்தது திவான் பகதூர் சர் பட்டம் போன்ற வற்றை பெருமையுடன் ஏற்ற வர்கள். நீங்கள் பதிவைச் சொல்லிப் போன விதம் பாராட்டுக்குரியது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீதிக் கட்சியினர் நமது சமூகத்தினரிடையே இருந்த ஏற்றத்தாழ்வுகளை நீக்கப் போராடியவர்கள்
      நன்றி ஐயா

      நீக்கு
  15. தகவல்கள் நன்றாக உள்ளது திரு பி.டி.தியாகராசர் மற்றும் திருஓ .வி அழகேசன் திரு ,பக்தவத்சலம் ஆகியோர்நெருங்கிய உறவினர்கள் (சகலைகள் )என்று நினைக்கிறேன் .

    பதிலளிநீக்கு
  16. புதிய தகவல் சகோ, இப்படியும் மனிதர்களா? அவர் பெயரால் அழைக்காமல் T நகர் என்று சுருக்கிவிட்டோமே,,தேவையான நேரத்தில் சொன்ன தகவல் அருமை,, தொடருங்கள் சகோ,

    பதிலளிநீக்கு
  17. புதியதகவல் வியக்க வைக்கின்றது ஐயா.

    பதிலளிநீக்கு
  18. வியந்துபோனேன் நண்பரே! பதவியை விட மற்ற மாட்சிமைகளை உயர்வாக நினைத்தவர்கள். இன்றோ வேதனையே மிஞ்சுகிறது.!
    த ம 7

    பதிலளிநீக்கு
  19. இது போன்ற தலைவர்கள் வாழ்ந்த மண்ணில்தான் இப்போதைய தலைவர்களும் வாழ்கிறார்கள்! காலம்தான் மாறிவிட்டதா? இல்லை மனிதன் தான் மாறிவிட்டானா? அருமையான தலைவர் ஒருவரை அடையாளம் காட்டிய சிறப்பான பதிவு! நன்றி!

    பதிலளிநீக்கு
  20. சர் பிட்டி தியாகராயர் பிறந்த நாளில் (எப்ரல்,27)அவரது சிறப்பைப் போற்றி ஒரு கட்டுரை தந்த ஆசிரியருக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏப்ரல் 27 அவரது பிறந்த நாளா
      அறியேன் ஐயா
      எதிர்பாராமல் ஏற்பட்ட ஒற்றுமை ஐயா
      நன்றி

      நீக்கு
  21. நல்ல தகவல் ! நண்பரே! நன்றி!

    பதிலளிநீக்கு
  22. இப்படியுமாய் அரசியலில் மனிதர்கள் இருந்துள்ளார்கள்/

    பதிலளிநீக்கு
  23. அருமையான பகிர்வு நண்பரே...

    பதிலளிநீக்கு
  24. சரியான நேரத்தில் சரியான தகவல். நன்றி

    பதிலளிநீக்கு
  25. அவர் எங்கே... இன்றைய அரசியல்வாதிகள் எங்கே...
    நல்ல பகிர்வு ஐயா...

    பதிலளிநீக்கு
  26. அன்புள்ள கரந்தையாரே!

    நீதிக் கட்சியின் தலைவர் சர் பி.தியாகராயர் தியாகத்தை எண்ணி வியந்து போற்றுவோம்.

    இன்றைக்கு எப்படியாவது முதல்வர் பதிவிக்கு வந்துவிட வேண்டும் என்று கண்டகண்டவர்களெல்லாம் அலைகிறார்கள்.

    அன்றைக்கு அரசியல் செய்து மக்களை வாழவைத்தார்கள்.
    இன்றைக்கு அரசியல்வாதிகள் மக்களை வீழகைக்கிறாக்கள்.
    அரசியல்... பிழைக்க நல்ல தொழிலாகிவிட்டது.

    நன்றி.

    த.ம. 10


    பதிலளிநீக்கு
  27. அன்புள்ள

    வருத்தமாக உள்ளது. இப்படி சொல்லுக்காக தியாகம் செய்த தமிழ்நாட்டில்தான் தாத்தா. அப்பா. மகன், மகள். பேரன். பேரனுக்குப் பேரன். அண்ணன், தம்பி, மாமன். மச்சான் என்று பதவிக்கு அலைகிறது கூட்டம். தமிழ்நாட்டைக் காப்பாற்றுவது இயற்கையும் கடவுளும் இதுபோன்ற முன்னோர் தியாகங்களும்தான். தொடர்ந்து எழுதுங்கள் இதுபோன்ற அற்புதங்களைப் பதிவுகளாக. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  28. நீதிக்கட்சியின் தலைவர் தியாகராயரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் முதல்வர் பதவியை வேண்டாம் எனத் துறந்தவர் என்று இப்போது தான் தெரிந்து கொண்டேன். தமிழகத்தில் இப்படிப்பட்ட தலைவர்களும் இருந்திருக்கிறார்கள் என்று எண்ணும் போது வியப்பாய் இருக்கிறது. இன்றைய நிலையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால்....? நல்லதொரு பதிவுக்குப் பாராட்டுக்கள் சகோ!

    பதிலளிநீக்கு
  29. அனைவரும் கட்டாயம் அறிந்து கொள்ளவேண்டிய தகவல் தி.நகர் பலமுறை போய் இருக்குறோம். என்றாவது இதற்கு ஏன் இந்தப் பெயரில் இருக்கும் தியாகராயர் பற்றி அறிந்தோம் இல்லை.
    நான் சென்னை தியாகராய நகர் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்தேன். இவர்களைப் போன்ற பெருந்தகைகள் பற்றி பாடப் புத்தகங்களில் இடம்பெற வேண்டும்

    பதிலளிநீக்கு
  30. அறியாத தகவல். பகிர்வுக்கு நன்றி. மதுரையில் உள்ள தியாகராசர் கல்லூரிகள் இவரால் தொடங்கப் பட்டவையா அய்யா ?

    பதிலளிநீக்கு
  31. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
    சர்.பி.தியாகராசர் பற்றிய பதிவு மனதில் ஒரு ஏக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இவரைப் போன்ற மனிதர்களை, தலைவர்களை இனி காண முடியுமா? முடியும் எனில் அது கனவெனில் வேறு ஏது?

    பதிலளிநீக்கு
  32. உண்மையான தியாகியை எழுத்தில் வடித்த உங்களுக்கு நன்றி....ரி.நகர் என்ற பெயர் வேறு ஒரு நடிகரின் பெயரைக் குறிப்பிடுகிறது என தவறாகப் புரிந்து கொண்டதற்காக வருந்துகின்றேன்....தகவலுக்கும் நன்றி.......உடுவை

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு