22 பிப்ரவரி 2014

மொழியும் வாழ்வும்

பெரியார் வீட்டில் பிறக்காத பிள்ளை
அம்பேத்கார் பள்ளியில் படிக்காத பிள்ளை

     நண்பர்களே, யாரைப் பற்றிக் கூறுகிறேன் என்பது புரிகிறதா? நாம் சுபவீ என்று அன்போடு அழைக்கும் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களைத்தான் கூறுகிறேன்.
    

நம் வீட்டின் வரவேற்பறைக்கே வந்து, ஒன்றே சொல் நன்றே சொல் என நாள்தோறும் இனிய செய்திகளை, நட்பு கொஞ்சும் குரலில், இனிக்க இனிக்க பேசி வரும் பேராசிரியர் சுபவீ அவர்களின், நட்பினை அன்பினைப் பெற்றவன் என்பதில் பெருமிதம் அடைகின்றேன்.

16 பிப்ரவரி 2014

சுவடிச் சாலை

தனித்தமைந்த வீட்டிற்புத் தகமும் நானும்
     சையோகம்  புரிந்ததொரு வேளை தன்னில்
இனித்தபுவி  இயற்கையெழில்  எல்லாம் கண்டேன்
     இசைகேட்டேன், மணம்மோந்தேன் சுவைகள் உண்டேன்.
                                          பாவேந்தர் பாரதிதாசன்


நண்பர்களே, திருச்சி வாழ், வலையுலகப் பதிவர்,
திரு தி.தமிழ் இளங்கோ அவர்கள்,

திருச்சி புத்தகக் கண்காட்சி பற்றி, ஓர் அருமையான பதிவினை, தனது வலையில் பகிர்ந்திருந்தார். இப்பதிவினைக் கண்டு மகிழ்ந்தவாரே, கருத்துரைகளைப் படித்த எனக்கு, ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

13 பிப்ரவரி 2014

மரியாட்டு

   

     அந்தப் பெண்ணின் வயது வெறும் பதினொன்றுதான். சின்னஞ்சிறு பெண். அப்பெண்ணை, ஒரு பாறையை ஒட்டி இழுத்து வந்தான் ஒரு பையன். அப்பெண்ணின் வலது கையைப் பிடித்து இழுத்து, பாறையின் மீது படுத்த வாக்கில் வைத்தான். இன்னொரு பையன் கத்தியை ஓங்கினான். அச்சின்னஞ்சிறு பெண் பயத்தில் கண்களை மூடிக் கொண்டாள். திடீரென்று மயான அமைதி. ஒரு நொடி அப்பெண், கண்களைத் திறந்தாள். அப்போதுதான் கத்தி அதிவேகமாக, அவள் கையை நோக்கி இறங்கியது.

05 பிப்ரவரி 2014

பூப்பதெல்லாம் ...


மூலையிலோர் சிறுநூலும் புதுநூ லாயின்
முடிதனிலே சுமந்து வருந்து தருதல் வேண்டும்
                                  பாவேந்தர் பாரதிதாசன்

     நண்பர்களே, புதுமைப் பித்தன் அவர்களை வாசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. வழிவழியான நமது நம்பிக்கைகளை, கற்பனைகளை, கனவுகளை, பொய்மைகளை நம் கண் முன்னே போட்டு உடைத்தவர்தான் புதுமைப் பித்தன்.

     உன் சித்தாந்த புனைவுகளுக்குள், புராதண மதிப்பீடுகளுக்குள் இருப்பதல்ல வாழ்க்கை. இதோ என் கதைகளுக்குள் இருப்பதுதான் பச்சையான வாழ்க்கை. இதுதான் உன் யதார்த்தம் என்று நம் முகத்தில் அறைந்தாற்போல், யதார்த்தத்தைப் புனைவதில் புதுமைப் பித்தன், புதுமைப் பித்தன்தான்.

     முடிவில் தர்மத்திற்கு வெற்றி கொடுக்க வேண்டியது கலைத் தொழிலில் ஈடுபடுகிறவனுடைய கடமை என்பதைப் புதுமைப் பித்தன் ஒத்துக் கொண்டவரல்ல. வாழ்வை பலவித கோணங்களில் இருந்து புரிந்து கொள்வதற்கான சாதனமே இலக்கியம் என்பதை உணர்த்தியவர் புதுமைப் பித்தன்.