14 டிசம்பர் 2023

ஆன்பொருநை

     3000 ஆண்டுகளுக்கும் மேலானப் பழமையை, தொன்மையை, வரலாற்றினைத் தன்னகத்தே கொண்ட ஊர்.

     வஞ்சி.

     வஞ்சி முற்றம்.

     இவை இவ்வூரின் சங்ககாலப் பெயர்களாகும்.

     இதனாலேயே இவ்வூர் கோயில், வஞ்சியம்மன் கோயில்.

     காவிரி மற்றும் அமராவதி பாயும் ஊர்.

     அமராவதி.

     இதுதான் சங்ககால ஆன்பொருநை.

06 டிசம்பர் 2023

பையுள் சிறுமை

 


     நோய் என்பது உடலைப் பற்றியது அல்ல. மனம் சார்ந்தது என்பார் தொல்காப்பியர். எனவேதான்,

பையுள் சிறுமையும் நோயின் பொருள்

என்பார். உடலுக்கும், உள்ளத்திற்கும் துன்பம் தரும் நிகழ்வே நோய் என்பார்.

     உளவியல் சார்ந்த நோயினால், உடலியல் சார்ந்த நோய் ஏற்படுகிறது.

     எதனால் நோய் வருகிறது?

25 நவம்பர் 2023

மாமரத்தார்


 அது சீவுக்குச்சி மேய்ந்து, தாழ்வாரம் வைத்த சுத்துவிட்டு வீடு.

     வீட்டின் வலது பக்க, முன்புறத்தில், ஒரு மரம்.

     படர்ந்து வளர்ந்த மரம்.

     மாமரம்.

16 நவம்பர் 2023

சாமி சார்

 


     நாம், நம் வாழ்வின் தொடக்கப் புள்ளியில் இருந்து, இன்று வரை, எத்துணையோ நட்புகளை, உறவுகளைச் சந்தித்து வருகிறோம்.

     சிலரோடு பல்லாண்டுகள் பழகியபோதும், அவர்கள் ஒருபோதும், நம் நெஞ்சுக்கு நெருக்கமாக வரமாட்டார்கள். பணியாற்றும் இடமாயிற்றே என்று பேசுவதையும், பழகுவதையும் தவிர்க்க முடியாமல் தொடர்ந்து கொண்டிருப்போம்.

     சில உறவுகளும் இப்படித்தான், புறந்தள்ள விரும்பாமல் பழகுவோம்.

     ஆனால் சிலரைப் பார்த்த, பழகிய ஒரு சில நிமிடங்களிலேயே நமக்குப் பிடித்துவிடும்.

09 நவம்பர் 2023

தற்கொலைக்கு முயன்றவர்



தேவகோட்டை சாலை.

     தொடர் வண்டி நிலையைம்.

     அந்த மாணவர் மிகவும் கவலை தோய்ந்த முகத்துடன், அந்த தொடர் வண்டி நிலையத்திற்குள் நுழைகிறார்.

     ஒரு முடிவோடுதான் வந்திருக்கிறார்.

     எவ்வளவோ யோசித்துப் பார்த்துவிட்டார்.

     வேறு வழி தெரியவில்லை.

27 அக்டோபர் 2023

ஓடத்துறைத் தெரு

    


 திருவையாறு.

     நினைத்தாலே போதும் நெஞ்சமெல்லாம் இனிக்கும்.

     என் தந்தை பிறந்து, தவழ்ந்து, வளர்ந்த ஊர்.

     கரந்தையில் பிறந்தாலும், சின்னஞ்சிறு வயதில், என்னைத் தாலாட்டி வளர்த்த ஊர்.

19 அக்டோபர் 2023

மணி மாறன்



இந்தியா முழுமையும் 35 இலட்சம் ஓலைச் சுவடிகள் இருக்கின்றன.

     தமிழ் நாட்டில் மட்டும் 15 இலட்சத்திற்கும் அதிகமான தமிழ்ச் சுவடிகள் உள்ளன.

     இந்தியா தவிர, 35 நாடுகளில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட, தமிழ்ச் சுவடிகள் இருக்கினறன.

     இதில் வியப்பிற்குரிய செய்தி என்னவென்றால், தமிழ்ச் சுவடிகளில் 60 சதவீதச் சுவடிகள் மருத்துவச் சுவடிகள்.

06 அக்டோபர் 2023

அரந்தரங்க சுத்தி

 


சாவது எளிது, அரிது சான்றாண்மை நல்லது

மேவல் எளிது, அரிது மெய்போற்றல் – ஆவதன்கண்

சேறல் எளிது, நிலை அரிது தெள்ளியராய்

வேறல் எளிது, அரிது சொல்.

21 செப்டம்பர் 2023

தஞ்சாவூர், தஞ்சாவூர், தஞ்சாவூர்



     பித்தளை உலோகத் தட்டில், புடைப்புச் சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைந்த செம்பு, வெள்ளி உலோகத் தகடுகளைப் பதிப்பார்கள்.

     இப்பொருளின் தனித்தன்மையே, ஓர் உலோகத்தின் மீது இருவேறு உலோகங்களைப் பதிப்பதே ஆகும்.

14 செப்டம்பர் 2023

தவ்வை

     இயற்கையின் எல்லையற்ற ஆற்றலும், சீற்றமும் ஆதிகால மனிதர்களுக்கு அளவிலா அச்சத்தைக் கொடுத்தன.

     காற்று, நீர், நெருப்பு, நிலம், வானம் ஐந்தும் அவ்வப்பொழுது தனது ஆற்றலை வெளிப்படுத்திய பொழுது, மனிதர்கள் தங்களைக் காத்துக் கொள்ள கடவுளை நாடினர்.

     காலப் போக்கில், பழந்தமிழர் இயற்கையைக் கண்டு அஞ்சிய மனநிலையில் இருந்து சிறிது மாறினர்.

03 செப்டம்பர் 2023

பஸ்தர்

  


     தசரா.

     தசரா பண்டிகை.

     இராவணனைக் கொன்று, இராமன் பெற்ற வெற்றியைக் கொண்டாடும் பண்டிகை தசரா.

     இந்தியாவில் தசரா பண்டிகைக் கொண்டாடப்படும் காரணம் இதுதான்.

     ஆனால், ஒரு மாநிலத்தில் மட்டும், தசரா இராமனுக்காகக் கொண்டாடப் படுவதில்லை.

23 ஆகஸ்ட் 2023

பத்தாம் அறிவு

 


ஒன்றறிவதுவே உற்றறிவதுவே

இரண்டறிவதுவே அதனொடு நாவே

மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே

நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே

ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே

ஆறறிவதுவே அவற்றொடு மனனே


05 ஆகஸ்ட் 2023

சுள்ளிகள்

 


யாரேனும் ஒருவர்

விட்டுக் கொடுத்துப் போயிருக்கலாம்.

அப்பாவுடன் கூடப்பிறந்தவர்கள்

அப்பாவைப் போலில்லை …

அப்பாவிடம் அவர்கள் உதவிபெற்று

உயிர்வாழ்ந்த தருணங்களை ஒருபோதும்

அப்பா அனுபவித்ததேயில்லை ….

26 ஜூலை 2023

திண்ணை இருந்த வீடு

     இதுதாண்டா மாப்பிள்ளை எங்களுக்குக் குலசாமி. இந்த ஊருக்கு ஒண்ணுமில்லாம வந்தோம். இந்த மண்ணும், இந்த சாமியும்தான் எங்களுக்கு வழி காட்டுச்சு.

     பாப்பாவுக்கு ஆவணியில கல்யாணம் வச்சுருக்கிறேன். முத பத்திரிக்கையை அய்யனாருக்கு வச்சுட்டுப் போகலாம்னு வந்தேன்.

     செல்வி அக்காவும், முருகேசன் மாமாவும் பத்திரிக்கையை வச்சு, சாமி கும்பிட்டுவிட்டு சென்ற பிறகு, அந்த கல்யாணப் பத்திரிக்கையை எடுத்துப் பிரித்துப் பார்த்தேன்.

     பெண்ணின் தாய் மாமன் பெயராக, எங்கள் ஊரில் உள்ள ஏழு சாதி மக்களும் இருந்தார்கள்.

19 ஜூலை 2023

மருந்தே ஆயினும்

ஈதல் அறம்  தீவினைவிட்டு  ஈட்டல்பொருள் எஞ்ஞான்றும்

காதல் இருவர் கருத்து ஒருமித்து – ஆதரவு

பட்டதே இன்பம் பரனை நினைந்து இம்மூன்றும்

விட்டதே பேரின்ப வீடு.

03 ஜூலை 2023

கணிதம் பிறந்த இல்லம்

 


நான் உண்ண உணவின்றி அரைப் பட்டினியாகக் இருக்கும் ஒரு மனிதன். எனது மூளையைப் பாதுகாக்க, எனது  வயிற்றிற்குச் சிறிது உணவு தேவைப் படுகிறது. இதுவே எனது முதல் தேவையாகும்.

     இவர்தான் இராமானுஜன்.

     கணிதமேதை சீனிவாச இராமானுஜன்.

22 ஜூன் 2023

சீதனப் புலவர்

     அவர் ஒரு புலவர்.

     வரகுண பாண்டியனின் அவையை அலங்கரித்தப் புலவர்.

     பாண்டியனுக்குத் தமிழ்ச் சொல்லிக் கொடுத்தப் புலவர்.

     பாண்டியனின் மகளுக்கும் தமிழ்ச் சொல்லிக் கொடுத்தப் புலவர்.

     பாண்டியனின் பேரன்பைப் பெற்றவர்.

     பாண்டியன் தன் மகளை, சோழனுக்கு, குலோத்துங்கச் சோழனுக்குத் திருமணம் செய்து கொடுக்கிறார்.

     பாண்டியன் மகள் புகுந்த வீட்டிற்குப் புறப்பட்ட பொழுது, பொன்னும், மணியும், வைரமும் அள்ளி அள்ளிச் சீதனமாகக் கொடுத்து அனுப்புகிறார்.

     சீதனத்தோடு சீதனமாய், தனக்கும், தன் மகளுக்கும் தமிழ்ச் சொல்லிக் கொடுத்தப் புலவரையும் அனுப்பி வைக்கிறார்.

04 ஜூன் 2023

கரந்தை மாமனிதர்

     இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் என்ற வாசகம், என் கல்லறையில் இடம்பெற வேண்டும்.

     என்னை அடக்கம் செய்யும் பொழுது, நான் மொழிபெயர்த்த திருக்குறளையும், திருவாசகத்தையும் என்னுடன் வைக்க வேண்டும்.

     எனது கல்லறைக்குச் செலவிடும் தொகையில், ஒரு சிறு பகுதியாவது, தமிழ் மக்களின் நன்கொடையால் அமைய வேண்டும்.

16 மே 2023

எழுதுகோலில் மிளகாய் பொடி

 


     வீரபாண்டிய கட்டபொம்மன்.

     வீரபாண்டிய கட்டபொம்மன், திருச்செந்தூர் முருகனின் தீவிர பக்தர்.

     ஒவ்வொரு நாளும், திருச்செந்தூர் கோயிலில், முருகனுக்குப் பூசை செய்யும் அதே நேரத்தில், பாஞ்சாலங்குறிச்சியில், தன் அரண்மனையில் பூசை செய்ய வேண்டும் என்று விரும்பினார்.

22 ஏப்ரல் 2023

என் தாய் மறைந்தார்

 


ஐயிரண்டு திங்களா அங்கமெலாம் நொந்து பெற்றுப்

பையலென்ற போதே பரிந்தெடுத்துச் – செய்யஇரு

கைப்புறத்தில் ஏந்தி கனகமுலை தந்தாளை

எப்பிறப்பிற் காண்பேன் இனி.

-          பட்டினத்தார்

     சகுந்தலா.

     என் தாய்.

     84 வயது.

     கடந்த 19.4.2023 புதன் கிழமை அதிகாலை, மீளா உறக்கத்தில் ஆழ்ந்து போனார்.

15 ஏப்ரல் 2023

பாதிரி

 


     காளையார் கோயில்.

     காளையார் கோயிலுக்கு மிகப் பெரியத் தேர் ஒன்றினைச் செய்ய விரும்பினார்கள் மருது சகோதரர்கள்.

     திறமை மிகுந்த தச்சர்களை வரவழைத்தனர்.

     தேர் செய்வதற்குத் தேவையான மரங்கள் மற்றும் பிற பொருள்களை எல்லாம் சேகரித்து முடித்தனர்.

     ஆயினும் ஒரு பொருள் மட்டும் கிடைக்கவில்லை.

05 ஏப்ரல் 2023

மாடசாமி



     ஆண்டு 1911.

     ஜுன் மாதத்தில் ஓர் நாள்.

     வங்காள விரிகுடா கடல்.

     புதுச்சேரியின் கரையில் இருந்து புறப்பட்ட ஒரு சிறு கட்டுமரம், கடல் அலையின் ஏற்ற இறக்கங்களில், ஏறியும் இறங்கியும் தத்தளித்தவாறு, செல்கிறது.

29 மார்ச் 2023

மரணக் கடன்

 


     நாங்க என்ன பாவம் பண்ணினோம்.

     யார் பண்ணின பாவமோ திருநங்கையா பிறந்துட்டோம்.

     எங்களுக்கும் ஆசை இருக்குயா புருஷன், புள்ளைங்கன்னு வாழறத்துக்கு …       

     முடிஞ்சா வேண்டிக்குங்க. அடுத்த பிறவியிலாவது, உங்கள மாதிரி பொறக்கனும்னு…

     நாளைக்கே உங்களுக்கு இப்படியொரு புள்ள பொறந்தா அப்ப தெரியும்யா வலியும் வருத்தமும்.

15 மார்ச் 2023

கலம் தரு திரு

 


     அண்மையில்.

     மிக அண்மையில்.

     இரு மாதங்களுக்கு முன்,

     திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின், பேராசிரியர் எஸ்.எம்.ராமசாமி அவர்களின் தலைமையிலான ஆய்வுக் குழுவினர், ஒரு பெரு ஆய்வினை மேற்கொண்டு, பூம்புகார் பற்றிய ஆய்வு அறிக்கையினை வெளியிட்டனர்.

09 மார்ச் 2023

இசைத் தமிழ்க் கலைஞர்கள்

 


     இசைத் தமிழ்.

     இசைத் தமிழின் ஆய்வுப் பரப்பானது, பெரிதினும் பெரிது.

     நிலத்தினும்  பெரிது.

     நீரினும் ஆழமானது.

     வானத்தினும் அகன்றது.

23 பிப்ரவரி 2023

கலைஞரைக் காணப் புறப்பட்டவர்

 


     ஆண்டு 2023.

     பிப்ரவரி 19 ஆம் தேதி.

     ஞாயிற்றுக் கிழமை.

     காலை 9.00 மணி.

     இவருக்கு வயது 81.

     மனைவியை இழந்தவர்.

     வாழவேண்டிய வயதுள்ள மகனையும் இழந்தவர்.

     ஒரு மகள்.

     பிரிவுத் துயர் வாட்டியபோதும், தமிழால் வாடாமல் வாழ்ந்து வருபவர்.

     இன்னும் சற்று நேரத்தில், இவரது தங்கையின் பெயரனுக்குத் திருமணம்.

09 பிப்ரவரி 2023

குந்தவையின் சபதம்



புரியும்படி சொல்கிறேன், அருமை மன்னா, கேள்.

     உலகு போற்றும் இரண்டாம் பராந்தகச் சோழனின் கொள்ளுப் பேரனும், என் அருமைத் தம்பி சிவபாத சேகரன் விருதுபெற்ற, அருண்மொழி வர்மனின் பேரனும், முடி கொண்ட சோழனாகிய, உன் தலை புதல்வனைக் கடத்தியவனும், அன்பு குமாரத்திகளைக் கடத்தத் திட்டமிட்டவனும், என்னை திருவாணைக்கா ஆலயத்தில் நுழைந்து, கொலை செய்ய முயற்சித்தவனுமாகிய, அந்த எம்பெருமானின் பக்தனாக வஞ்சக வேடமிட்டவனை, அந்த கபடதாரியை, நான் பார்க்க வேண்டும்.

31 ஜனவரி 2023

தமிழ்ப் பரிதி

 


 தேவர் குறளாட்டித் திருவாசகம் சூட்டி

மூவர் தமிழ் ஓதி, நாலாயிரம் சொல்லி

தாள் வடங்களாக முச்சங்கத் தமிழ் அணிந்து

தீவினை நீக்கும் திருமந்திரம் சொல்லி

காவிய மாமணி கம்ப முடி கவித்து

ஆவி உருக்கும் அருட்பாவால் அர்ச்சித்து

கூவித் திருப்புகழைக் கூத்தாடிக் கும்பிட்டு

தேவாதி தேவனடி

சேர்ந்திடுவோம் எம்பாவாய்.

---

24 ஜனவரி 2023

அறியாதபுரம்



தொண்ணூறு வயது முதியவர் மடியில்

முன்னூறு நிமிடத்திற்கு முன்

பிறந்த குழந்தை ஒன்று

சிரித்துப் பார்த்து சிறுநீர் கழிக்கிறது

முதுமை அதையும் பேறாய் மகிழ்ந்து

மெச்சிப் பேசி, உச்சி முகர்ந்து

இறையை நிறைய துதிக்கிறது.

21 ஜனவரி 2023

ஓடுகளால் ஒரு மேடு

     பொ.ஆ.பி.12 ஆம் நுற்றாண்டு.

     கவிஞர்.

     இக்கவிஞருக்கு ஒரு வித்தியாசமானப் பழக்கம்.

     விசித்திரமானப் பழக்கம்.

13 ஜனவரி 2023

சங்கறுத்தவர்

 


அங்கம் புழுதிபட அரிவாளில் நெய்பூசி

பங்கம் படவிரண்டு கால்பரப்பி – சங்கதனைக்

கீர் கீர் என அறுக்கும் நக்கீரனோ என் கவியை

ஆராய்ந்து சொல்லத் தக்கவன்?