28 பிப்ரவரி 2017

வித்தகர்கள்



     வலை.

    வலையில் சிக்கியவர்கள் இருப்பார்கள்.

    ஆனால் வலையால் மீட்கப் பட்டவன் நான்.

    சில வருடங்களுக்கு முன், திடீரென, பணி ஓய்வு பெற்றுவிட்டதைப் போன்ற ஒரு உணர்வு.

    என்ன செய்வது என்று புரியாத நிலை.

26 பிப்ரவரி 2017

விடுமுறையில் படித்தவர்


 பொருள்.

     பொருளாதாரம்

     ஒரு வீடு வளமிக்கதாக விளங்க, பொருளாதாரம் மிக முக்கியமான ஒன்று.

    அன்பும் பண்பும் வழிந்தோடும் குடும்பமே ஆயினும், பொருளில்லை என்றால் வாழ்வானது வேதனையைத்தான் வாரி வாரி வழங்கும்.

     இன்றைய பெரும்பாலான குற்றங்களுக்கு, சட்ட மீறல்களுக்கு அடி நாதமாய் விளங்குவது இந்தப் பொருளின்மைதானே.

     45 வயது நிரம்பிய இம்மனிதருக்கும் இதே பிரச்சினைதான்.

19 பிப்ரவரி 2017

தங்கக் கவிஞர்




அப்பாவை நினைத்தபடி
வாசல் படியில்
அமர்ந்திருந்தேன்
என்
பிள்ளைகளின் வருகைக்காக.

இப்படித்தான், இக்கவிஞர் தன் கவிதையை நிறைவு செய்கிறார்.

     இதிலென்ன இருக்கிறது, நாம் அனைவருமே, நம் பிள்ளைகளின் வருகைக்காக, அது பள்ளியோ, கல்லூரியோ, அல்லது அலுவலகமோ, தினசரி காத்துக் கிடப்பவர்கள்தானே என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா.

15 பிப்ரவரி 2017

ஹரணி


தேடிச் சோறுநிதந் தின்று – பல
     சின்னஞ் சிறுகதைகள் பேசி –மனம்
வாடித் துன்பமிக வுழன்று – பிறர்
     வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
     கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
     வீழ்வே னென்றுநினைத் தாயோ?

என்னும் பாரதியின் பாடல் வரிகளையே, தனது வாழ்வியல் மந்திரமாகக் கொண்டு, வாழ்ந்து, எதிர் வந்தத் தடைகளை எல்லாம் தகர்த்து எறிந்து, வாழ்வில் உயர்ந்து வருபவர் இவர்.

     இவர் இல்லத்திற்கும், இவர் பணியாற்றும் இடத்திற்குமான தொலைவு மிகவும் குறைவுதான்.

     வெறும் 120 கிலோ மீட்டர்கள்தான்.

08 பிப்ரவரி 2017

தேடலின் நாயகன்



இட்டிலி உப்புமா ஈர்வகைச் சோறுடன் பூரிரொட்டி
முட்டை யடையும் குளம்பி முறுவலம் தோசையுடன்
கெட்டித் துவையலைக் கேட்ட உடனே மகிழ்ந்தபடி
கட்டித் தருவான் குமாரெனும் வள்ளல் கடையினிலே

      பெற்று வளர்த்த பெற்றோரைப் போல், பாசம் காட்டி, நேசத்தோடு அரவணைத்து, காசில்லாவிட்டாலும் பரவாயில்லை, வயிராரச் சாப்பிடு, என மூன்று வேளையும் இன்முகத்தோடு உணவிட்ட, உணவு விடுதியின் உரிமையாளர் குமார் என்பாரைப் பற்றி, அழகிய கட்டளைக் கலித்துறையில், இப்பாடலை எழுதியபோது, அந்த இளைஞரின் வயது 23.

03 பிப்ரவரி 2017

ஹைபேஷா




கி.பி. 415

     அலெக்ஸாண்ட்ரியா. எகிப்தின் தலைநகர்.

     இருள் சூழும் நேரம்.

     அகன்று நீண்டிருந்த அந்தச் சாலையின் வழியே, அந்தத் தேர் வேகமாய், வெகு வேகமாய் வந்து கொண்டிருக்கிறது.

      அந்தச் சாலையின் ஒரு திருப்பத்தில் பலர், அந்தத் தேரின் வரவினை எதிர் நோக்கியபடி காத்திருக்கின்றனர். சாலையின் இரு மருங்கிலும், நெடிது வளர்ந்திருந்த மரங்களின் பின்னே, மேலும் பலர் மறைந்து நிற்கின்றனர்.