வலையில் சிக்கியவர்கள் இருப்பார்கள்.
ஆனால் வலையால் மீட்கப் பட்டவன் நான்.
சில வருடங்களுக்கு முன், திடீரென, பணி ஓய்வு பெற்றுவிட்டதைப்
போன்ற ஒரு உணர்வு.
என்ன செய்வது என்று புரியாத நிலை.
யோசித்தேன்.
கரந்தை மண்ணில் அமர்ந்து யோசித்தேன்.
கரந்தை மண், போதி மரமாகி எனக்குப் போதித்தது.
வாழ்வென்றால் என்னவென்று உணர்த்தியது.
கரந்தை மண்ணில் ஒரு சிட்டிகை எடுத்து, நெற்றியில்
பூச, உள்ளத்தில் ஒரு தெளிவு, உள்ளே வந்து அமர்ந்தது.
கரந்தை என்னை மீட்டது.
வலைப் பூவின் திசைநோக்கி வழிகாட்டி, வாழ்த்தி
அனுப்பியது.
தன் பெயருடன், என் பெயரினையும் இணைத்து, ஒரு
வலைப் பூவை உருவாக்கிக் கொடுத்தது.
கரந்தை
ஜெயக்குமார்
2011 ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள்
23 ஆம் நாள், என் முதல் பதிவு அரங்கேற்றம் கண்டது.
பதிவின் தலைப்பு உமாமகேசன்.
தமிழின் இழந்த பெருமைகளை மீட்டெடுத்த, கரந்தையின்,
கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஒப்பிலா முதற்றலைவர் உமாமகேசனுக்கு வணக்கம் கூறி, முதல்
வணக்கம் கூறி, வலையுலகில் மெல்ல நுழைந்தேன்.
![]() |
முதல் பதிவு |
உமாமகேசன்
உமாமகேசனே
தமிழ் முனியே
என் இறையே
முதல் வணக்கம்.
உனை எழுதும்
பித்தன் எனக்கு
சொல்லெடுத்துத் தருவாய்
தனித் தமிழ் அருள்வாய்.
நண்பர்களே, இதுதான் என் முதல்
பதிவு.
இன்று வரை, என்னைத் தவிர வேறு யாருமே பார்த்திடாத
என் முதல் பதிவு.
பின்னர், மெல்ல, மெல்ல, வலையுலகு என்னை ஆரத்
தழுவி வரவேற்றது.
இன்று வலையே என் நேசமாய், என் சுவாசமாய் மாறித்தான்
போய்விட்டது.
ஐந்து வருடங்கள்
290 பதிவுகள்
இரண்டு இலட்சத்தைத் தாண்டிவிட்ட நண்பர்களின் வருகை.
எட்டு புத்தகங்கள்.
நான் தானா? நானே தானா?
எனக்கே வியப்பாகத்தான் இருக்கிறது.
வித்தகர்கள்
எனது
எட்டு நூல்களுள் ஒன்று
மின்னூலாய்
உருமாற்றம்
பெற்றிருக்கிறது.
---
ஆசிரியர், எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர்,
சிறந்த பட்டிமன்றப் பேச்சாளர், கல்வியாளர்
இவர் ஓய்வு பெற்றதே
அதிகமாய்
முன்னிலும் அதிகமாய்
உழைக்கத்தானோ,
கணினி தமிழ்ச் சங்கத்தைப்
போற்றிப் புரக்கத்தானோ
எனக் காண்போர் வியக்கும் வகையில், தளராது, ஒரு நாளின் இருபத்து
நான்கு மணி நேரமும், அயராது பாடுபட்டு வரும்
கவிஞர் நா. முத்து நிலவன் ஐயா அவர்களின்
முயற்சியால்,
புஸ்தகா நிறுவனத்தின் சார்பில்
மின்னூலாய் வெளி வந்திருக்கிறது.

தங்களின் கணினிக்குள், தங்களின் அலை பேசிக்குள்,
வேகமாய், வெகு வேகமாய் வந்திறங்கி, தங்களின் அன்பு முகம் காண காத்திருக்கிறது.
மனம் நிறைந்த வாழ்த்துகள் ஐயா. உங்களின் மேலும் பல புத்தகங்கள் வெளிவர வாழ்த்துகள்.....
பதிலளிநீக்குஎன் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
பதிலளிநீக்குஉண்மையாகவே என் மனம் தங்களின் சாதனையை எண்ணி மிகவும் இறுமாந்து நிற்கிறது, எங்களுடைய நண்பர், எங்கள் பள்ளி ஆசிரியர், எங்கள் கரந்தை மண்ணின் மைந்தர் இந்த சாதனைகளை செய்துள்ளார் என்ற நிலையை பார்த்து. உங்களுடைய வளர்ச்சி மேலும் மேலும் உயர வாழ்த்துகள். உமாமகேசுவரரின் ஆசி உங்களுக்கு எப்போதும் உண்டு.
வாழ்த்துகள் அய்யரே தங்களின் மின்னல் பதிவுகள் மின் நூலா தல் கண்டு மகிழ் கிறோம்..
பதிலளிநீக்குவித்தகர்கள் மின்னூலானது அறிந்து மகிழ்ச்சி! இன்னும் பல மின்னூல்கள் வெளிவர வேண்டும் என வாழ்த்துகிறேன் சகோதரரே!
பதிலளிநீக்குமேலும் மேலும் வளர்ச்சி கண்டிட வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் நண்பரே உங்கள் நூல்கள் பள்ளி கூட குழந்தைகளுக்கு பாடமாக வைக்கலாம் அப்படி ஒரு நாள் விரைவில் வர வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் நண்பரே.
பதிலளிநீக்குமேலும் பல தங்களது நூல்கள் மின் நூலாய் மலரட்டும்.
மென்மேலும் உயர வாழ்த்துகள் நண்பரே..
பதிலளிநீக்கு+தம 1
வாழ்த்துகள். நல்ல ஆரம்பம்...தொடரட்டும் உங்களின் பணியும், எழுத்தும்.
பதிலளிநீக்குSuper sir
பதிலளிநீக்குமிகவும் மகிழ்ச்சி... வாழ்த்துகள் ஐயா...
பதிலளிநீக்குஇது நல்ல ஆரம்பம். தமிழில் மின்னூல்கள் என்பவை சில ஆயிரம் கூட இல்லை. எனவே இணையத்தில் எழுதும் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு ஒரு புத்தகமாவது மின்நூலாகக் கொண்டுவருதல் அவசியம். உலகிலுள்ள கணிப்பொறியர்களில் நான்கில் ஒருவர் தமிழராக இருக்கலாம் என்று தகவல் ஒன்று தெரிவிக்கிறது. ஆனால், தமிழ் எழுத்துருவில் நேரடியாக எழுதும் எளியமுறை இன்னும் அனைவருக்கும் சாத்தியப்படவில்லை. அதற்கு நாளாகலாம். அதற்குள்ளாகவாவது தமிழ்மின்புத்தகங்களின் எண்ணிக்கையை நாம் அதிகரித்தாகவேண்டுவது அவசியம்.
பதிலளிநீக்குமேலும் மேலும் சிறப்புற வேண்டும்.. நல்வாழ்த்துகள்..
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குமேலும் பல உங்கள் நூல்கள் மின்
புத்தகங்களாக வர வேண்டும்.
வாழ்கவளமுடன்.
வாழ்த்துக்கள். மேலும் மேலும் வளர வேண்டும்.
பதிலளிநீக்குஅருமை!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் நண்பரே!
தமிழ் வலையுலகில் தங்கள் ஆளுமை குறிப்பிடத்தக்கது.
மேலும் மேலும் தங்கள் பணி பயனுள்ளதாக அமைய வாழ்த்துக்கள்.
மனம் நிறைந்த வாழ்த்துகள்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஎனக்கும் ஓரிரு படைப்புகளை மின்னூலாக்கப் பிரியம் ஆனால் இதுவரை சாத்தியப்படவில்லை. வாழ்த்துகள் சார்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்,,,,,
பதிலளிநீக்குஅன்புள்ள ஜெயக்குமார்..
பதிலளிநீக்குவணக்கம். உங்களைப் பற்றிய பெருமை நதியில் மூழ்கித் திக்கு முக்காடுகிறேன். என்ன வாழ்த்துவது? உங்களின் பன்னூல்களும் மின்னூலில் பவனி வரவேண்டும். இப்போதும் எப்போதும். இறையருளை வேண்டி நிற்கிறேன். வாழ்க.
வாழ்த்து க்கள் .மொபைல் வழியே அனுப்பு வதால் விவரமாக எழுத வில்லை
பதிலளிநீக்குதங்களின் தரமான பதிவுகள் வலை உலகிற்கு தேவை .கணித மேதை இராமானுஜன் வாழ்க்கை வரலாறு பதிவுகளில் இருந்து தொடர்ந்து படித்து வருகிறேன். தங்களுக்கு சிறிய அளவில் உதவி இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
பதிலளிநீக்குவாழ்த்துகள் அய்யா..!தொடரட்டும் தங்களின் பணி....
பதிலளிநீக்குவாழ்த்துகள் அய்யா..!தொடரட்டும் தங்களின் பணி....
பதிலளிநீக்குஎழுத்தால் எந்த எவரையும்
பதிலளிநீக்குஎம் பக்கம் ஈர்க்கலாம் - அதற்கு
அழகான எழுத்து வேணாம்
அறிவூட்டும் எழுத்தே வேணும் - அது
தங்களிடம் இருக்கிறதே - தங்கள்
படைப்பைப் படிக்கையில் - ஏதோ
என்னையும் இழுத்துக்கொள்ளும் - அந்த
வாசகர் உள்ளத்தை ஈர்க்கும்
தங்கள் எழுத்தால் என்றும்
தங்கள் பணி தொடர
எனது வாழ்த்துகள்!
மனம் நிறைந்த வாழ்த்துகள் மேலும் பல புத்தகங்கள் வெளிவர வாழ்த்துகள்.....
பதிலளிநீக்குதமிழ் மணம் - 7
https://kovaikkavi.wordpress.com/