22 ஜூன் 2023

சீதனப் புலவர்

     அவர் ஒரு புலவர்.

     வரகுண பாண்டியனின் அவையை அலங்கரித்தப் புலவர்.

     பாண்டியனுக்குத் தமிழ்ச் சொல்லிக் கொடுத்தப் புலவர்.

     பாண்டியனின் மகளுக்கும் தமிழ்ச் சொல்லிக் கொடுத்தப் புலவர்.

     பாண்டியனின் பேரன்பைப் பெற்றவர்.

     பாண்டியன் தன் மகளை, சோழனுக்கு, குலோத்துங்கச் சோழனுக்குத் திருமணம் செய்து கொடுக்கிறார்.

     பாண்டியன் மகள் புகுந்த வீட்டிற்குப் புறப்பட்ட பொழுது, பொன்னும், மணியும், வைரமும் அள்ளி அள்ளிச் சீதனமாகக் கொடுத்து அனுப்புகிறார்.

     சீதனத்தோடு சீதனமாய், தனக்கும், தன் மகளுக்கும் தமிழ்ச் சொல்லிக் கொடுத்தப் புலவரையும் அனுப்பி வைக்கிறார்.

04 ஜூன் 2023

கரந்தை மாமனிதர்

     இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் என்ற வாசகம், என் கல்லறையில் இடம்பெற வேண்டும்.

     என்னை அடக்கம் செய்யும் பொழுது, நான் மொழிபெயர்த்த திருக்குறளையும், திருவாசகத்தையும் என்னுடன் வைக்க வேண்டும்.

     எனது கல்லறைக்குச் செலவிடும் தொகையில், ஒரு சிறு பகுதியாவது, தமிழ் மக்களின் நன்கொடையால் அமைய வேண்டும்.