27 ஜனவரி 2017

தேவகோட்டை தேவதைநடிகர்களுக்கு ரசிகனாய் இருப்பதில் பலன் உண்டா?
நடிகனுக்கு ரசிகனாய் இருப்பதைவிட,
அரசியல்வாதிக்குத் தொண்டனாய் இருப்பதைவிட
ஒரு எழுத்தாளருக்கு வாசகனாய் இரு

நீங்கள் தண்டிக்க நினைக்கும் மனிதர்கள் ?
அனாதைக் குழந்தைகள் உருவாகக் காரணமானவர்களை
குழந்தைகளைப் பிச்சை எடுக்க வைக்கும் கும்பல்களை
குழந்தைகளை பாலியல் வன்முறை செய்பவர்களை
அப்பாவிப் பெண்களை வைத்து விபச்சாரம் செய்பவர்களை
மனநலம் குன்றியோரைத் துன்புறுத்தும் பைத்தியக்கார மனிதர்களை

22 ஜனவரி 2017

புதுகையின் மின்னூலாக்க முயற்சிகள்     களிமண், சுட்ட பானை, ஓடு, கல்வெட்டு, பனை ஓலை, துணிச்சீலை, காகிதம் என மாறி மாறி, புதிய பரிணாமம் பெற்று பயணித்த எழுத்துக்கள், இன்று வானூர்தி ஏறாமலேயே பறக்கக் கற்றுக் கொண்டுவிட்டன.

     கப்பலில் ஏறாமலேயே, பலப் பெருங் கடல்களை, ஒரே நொடியில் சுலபமாய்த் தாவ எளிதாய் கற்றுக் கொண்டுவிட்டன

12 ஜனவரி 2017

நேசமிகு நல் ஆசான்
என்பணி கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கே
என்றுபணி யாற்றும் இனியநல் ஜெயக்குமாரா
பண்புடனே பணியாற்றி, பயனுள்ள நூலியற்றும்
உன்பணி தொடர்ந்திடவே உளமாற வாழ்த்துகிறேன்

என்று என்னை மனமார வாழ்த்திய நல் இதயம், தன் துடிப்பினை நிறுத்தி,

விறகுஇடை மூடி அழல்கொடு போட
    வெந்து விழுந்துமு றிந்து நிணங்கள்
உருகி எழும்பு கருகி அடங்கி
     ஓர்பிடி நீறும்இ லாத உடம்பை

என்னும் பட்டினத்தாரின் வாக்கிற்கேற்ப, அணலில் கரைந்து, காற்றில் கலந்த காட்சியைக் காணும் துர்பாக்கிய நிலை.

08 ஜனவரி 2017

மானுடம் பேணிய வானம்பாடி


நமக்குத் தொழில்கவிதை, நாட்டிற் குழைத்தல்
இமைப்பொழுதுஞ் சோரா திருத்தல்

என்று முழங்குவாரல்லவா, முண்டாசுக் கவி, அம்முண்டாசுக் கவி, இமைமூடி மீளாத் துயிலில் ஆழ்ந்த நாள் செப்டம்பர் 11.

     2009, செப்டம்பர் 11.

     சென்னை.

    மகாகவி கண் துஞ்சிய நாளில்தான், இக்கவியும், தன் அன்பு மகளின் இல்லத்தில் சுவாசம் துறந்து, கண்ணாடிப் பேழையுள் கண்மூடிப் படுத்தார்.

   உற்றார், உறவினர்கள் ஒவ்வொருவராய் வந்து சேர்ந்தனர்.

   காடு நோக்கிய கடைசிப் பயணம் எப்பொழுது?

   என்ன அவசரம், சில நாட்கள் ஆகட்டுமே,

01 ஜனவரி 2017

திருமயம் பாறை ஓவியங்கள்
கரூர் மாவட்டம். பொம்மனத்துப் பட்டி.

     சிறு, குறு மலைகள் சூழ்ந்த சிற்றூர்.

     ஊருக்கு வெளியே ஆங்காங்கே பெருங்கற்படை நடுகற்கள்.

     மலைகளும், பெருங்கற்படை நடு கற்களும் சுற்றி வளைத்திருந்த, கிராமத்தில் பிறந்ததாலும், அங்கேயே வளந்ததாலும், மலைகள் என்றாலே ஒரு தனி மகிழ்ச்சி இவருக்கு.