25 டிசம்பர் 2016

வெட்டிக்காடு கீதா கஃபே




நான் சிறுவனாக இருந்த காலத்தில், எங்கள் வீட்டில், கறவை எருமை மாடுகள், பசு மாடுகள், உழவு மாடுகள், வண்டி மாடுகள் என ஒவ்வொரு கால கட்டத்திலும் 10லிருந்து 15 மாடுகள் இருக்கும்.

     எருமை மாடுகள், பசு மாடுகளை மேய்க்கும் வேலை எனக்கும், உழவு, வண்டி மாடுகளை பராமரிப்பது, மாடுகளுக்குத் தீவனம் வைப்பது போன்ற வேலைகள் அண்ணனுக்கும் வழங்கப் பட்டது.

     தினமும் பள்ளி விட்டு வந்தவுடன், மாலை சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு, மாடுகளை மேய்த்து வர வேண்டும்.

18 டிசம்பர் 2016

வாழும் மகாகவி



இவர் – என்றும்
கனன்று கொண்டிருக்கும்
கவிதை நெருப்பு – இவரின்
காவியப் பொழுதுகளும் வாழ்வும்
கவிதைச் சிறகுகொண்டு எந்நாளும்
வானம்பாடியாய்ப் பறக்கட்டும்
                      -விழிகள் தி.நடராசன்

      ஆண்டு 2011.

      ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாள், வகுப்பறையில் கணிதம் கற்பித்துக் கொண்டிருந்த வேலையில், என் அலைபேசி உயிர்பெற்று மௌனமாய் துடித்தது.

     அலைபேசியில் அழைப்பவரின் பெயரினைப் பார்த்த, அந்த நொடியில், இதயம் ஒரு முறை நின்று, பின் வெகு வேகமாய் துடிக்கத் தொடங்கியது.

     மனம் நம்ப மறுத்தது.

     மாமனிதரிடமிருந்து, இந்த எளியேனுக்கு அழைப்பா ?

13 டிசம்பர் 2016

வெற்றிவேல் முருகன் பேசுகிறேன் 17


    

என் தங்கை திருமணம் செயது கொண்டார். யாருக்கும் தெரியாமல்.

     எம் மனம் உடைந்து சுக்கு நூறானது.

  என் அன்புத் தங்கையே, ஏன் இப்படிச் செய்தாய்? நிம்மதியிழந்து தவித்தேன்.

10 டிசம்பர் 2016

வெற்றிவேல் முருகன் பேசுகிறேன் 16



தங்களைப் பணியில் சேர்க்க இயலாத நிலையில் இருக்கிறோம்.

    பல நாட்கள், இதே வார்த்தைகள், என் மனதில் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருந்தன. பல இரவுகள் உறங்கா இரவுகளாகவே கழிந்தன.

    உடற்குறைபாடு உடையவன் என்ற ஒரே காரணத்திற்காக, எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என்பதை என்னால் தாங்கிக் கொள்ளவே இயலவில்லை.

07 டிசம்பர் 2016

புத்தகக் கோட்டை



     புதுக்கோட்டை.

     புதுக்கோட்டை, இனி புதுக் கோட்டையல்ல

     புத்தகக் கோட்டை

    ஆம் புதுக்கோட்டையினை, இனி புத்தகக் கோட்டை என அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

     கடந்த நவம்பர் 26 ஆம் தேதி முதல், திசம்பர் 4 ஆம் தேதி வரை, ஒன்பது நாட்கள், நடந்த நிகழ்வால் புதுக்கோட்டையே, புதுப்பொலிவு பெற்று, மெருகு கூடி, புத்துணர்வு பெற்றிருக்கிறது.

06 டிசம்பர் 2016

ஆழ்ந்த இரங்கல்கள்


தஞ்சைத் தரணியில்
பன்னெடுங்காலமாகத் தமிழுக்கு மாபெரும் தொண்டாற்றிவரும்,
கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின்
மாணவர் இல்லம்,
தமிழ் பயிலும் மாணவியர் விடுதி, கூடுதல் நூலகக் கட்டிடம் முதலியவற்றின் கட்டுமானப் பணிகளுக்கென,
எழுபத்தைந்து இலட்சம் ரூபாய் நன்கொடை வழங்குகிறேன்
என்று மனமகிழ்ந்து அறிவித்து,
அறிவித்த வண்ணம், மனமுவந்து வழங்கியும் மகிழ்ந்தவர்
தமிழக முதல்வர்
மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா அவர்கள்.

முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின்
மறைவிற்கு
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்