30 டிசம்பர் 2014

வேலு நாச்சியார் 6


அத்தியாயம் 6 படை புறப்பட்டதுமுதலில் பெரிய மருதுவின் தலைமையில் வாட் படை

குயிலியின் தலைமையில் உடையாள் பெண்கள் படை

சின்ன மருதுவின் தலைமையில் வளரிப் படை

ஒய்யாத் தேவர் படை

வெள்ளிக் கட்டி வைரவன் படை

சிறு வயல் மும்முடியான் படை

சேத்தூர் செம்பியன் படை

மறவமங்கலம் கொங்குத் தேவன் படை

25 டிசம்பர் 2014

வேலு நாச்சியார் 5


அத்தியாயம் 5 ஹைதர் அலி


புதிய மன்னர் உம்தத்-உல் உம்ரா வாழ்க
தளபதி ஜோசப் சுமித் வாழ்க

முத்து வடுகநாதரைத் தீர்த்துக் கட்டிய
மாவீரத் தளபதி பான் ஜோர் வாழ்க

கைக் கூலிகளின் முழக்கங்கள் சிவகங்கைச் சீமையின் அரண்மனையில் ஓங்கி ஒலித்தன.

     சசிவர்ணத் தேவரும், முத்து வடுகநாதரும் வேலுநாச்சியாரும் உலாவிய அரண்மனை இன்று ஆங்கிலேயர் வசம்.

20 டிசம்பர் 2014

வேலு நாச்சியார் 4


 அத்தியாயம் 4 உடையாள்


வேலு நாச்சியாரைக் கண்டதும், காளையார் கோயில் மக்கள் கதறி அழுதனர். எங்கு பார்த்தாலும் மனித உடல்கள். சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என எவரையும் விட்டு வைக்கவில்லை.

      குதிரையில் இருந்து இறங்கிய வேலு நாச்சியார், முத்து வடுகநாதரும், கவுரி நாச்சியாரும் இரத்தத்தில் குளித்து, உயிரற்று கிடப்பதைப் பார்த்தார்.

      வேலு நாச்சியாரின் உள்ளம் குமுறிக் கொண்டிருந்தது. வஞ்சகமாக மறைந்திருந்து கொன்ற ஆங்கிலேயர்களைப் பழிவாங்க வேண்டும், இப்பொழுதே, வாளேந்திப் போரிட்டு அழித்திட வேண்டும் என உள்ளம் துடியாய்த் துடித்தது. ஆனாலும் இறுதிச் சடங்கினைச் செய்ய வேண்டுமல்லவா?

14 டிசம்பர் 2014

வேலு நாச்சியார் 3


 அத்தியாயம் 3 கவர்னர் லாட்டீ காட்

     ஆங்கிலேய கவர்னர் லாட்டீ காட், தனது அரண்மனையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டேயிருக்கிறான். முகமெங்கும் வெறுப்பு மண்டிக் கிடக்கிறது. சில நாட்களுக்கு முன், தனக்கு நேர்ந்த அவமானத்தை, அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

     ஒரு சிறு பெண், தன்னை என்ன பாடு படுத்திவிட்டாள்? சும்மா விடக்கூடாது அவளை? மனதில் கறுவுதலோடு அங்கும் இங்கும் நடக்கிறான்,நடக்கிறான், நடந்து கொண்டே இருக்கிறான். அன்று நடைபெற்ற நிகழ்வு மீண்டும், மீண்டும் அவன் மனத் திரையில், ஓடிக் கொண்டே இருக்கிறது.

10 டிசம்பர் 2014

வேலு நாச்சியார் 2


அத்தியாயம் 2 கவுரி நாச்சியார்

    

வேலு நாச்சியார்.

     இராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதியின் ஒரே மகள். செல்ல மகள். வீர மகள். பன்மொழிப் புலமை வாய்ந்தவர். நிர்வாகத் திறன் மிக்க மாட்சியர். குதிரையேற்றம், யானையேற்றம், சிலம்பம், வாள் வீச்சு அனைத்திலும் வித்தகர்.

      இராமநாதபுரம் அரண்மனையிலே பிறந்தவர், வளர்ந்தவர். மருமகளாய் குடியேறியது சிவகங்கைச் சீமையில். சிவகங்கைச் சிமையின் மன்னர் சசி வர்ணத்தேவரின் திருமகன், இளவரசர் முத்து வடுக நாதரின் கரம் பற்றியவர்.
  

05 டிசம்பர் 2014

வேலு நாச்சியார்


      கிஸ்தி, திரை, வரி, வட்டி. வானம் பொழிகிறது, பூமி விளைகிறது, உனக்கு ஏன் கொடுப்பது கிஸ்தி.

     எங்களோடு வயலுக்கு வந்தாயா?, ஏற்றம் இறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? நாத்து நட்டாயா? களை பறித்தாயா? தரணி வாழ் உழவனுக்கு கஞ்சிக் களயம் சுமந்தாயா? அங்கு கொஞ்சி விளையாடும் எம் குலப் பெண்களுக்கு, மஞ்சள் அரைத்துக் கொடுத்தாயா? அல்லது நீ மாமனா? மச்சானா? மானங் கெட்டவனே, எதற்குக் கேட்கிறாய் திரை? யாரைக் கேட்கிறாய் வரி?

     நண்பர்களே, தமிழ் மொழி அறிந்த பெரியவர்கள் முதல், சிறுவர்கள் வரை, அனைவரும், இவ்வீர உரையினை நன்கறிவார்கள். வீரபாண்டிய கட்ட பொம்மனை அறியாதவர்கள் யார்?

ஆனாலும், வீரபாண்டிய கட்ட பொம்மனுக்குச் சற்றும் குறைவில்லாத,
வீரத்தாய் வேலு நாச்சியாரை
தமிழ் மக்களில் எத்தனை சதவீதத்தினர் அறிவர்.
மிக மிகக் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும்.

02 டிசம்பர் 2014

பந்தக்கால்


அன்பு நண்பருக்கு வணக்கம்,

      ரொம்பவும்தான் நாளாகிப் போனது, உங்களுக்குக் கடிதம் எழுதி.

      பெண் குழந்தை பிறந்திருக்கிறதாமே, சந்தோஷம், வாழ்த்துக்கள்.

      தங்களுக்குத் திருமணமாகி, நான்கு வருடங்கள் கழித்து பிறந்த குழந்தை.

      மனைவி கருவுற்றவுடன், ஸ்கேன் பார்த்து, பெண் குழந்தை என்றவுடன் கலைத்து,... இனியும் கலைத்தால், மனைவியின் உயிருக்கு ஆபத்து, என்ற டாக்டரின் எச்சரிக்கையினால், கலைக்காமல் விட்டு, பிறந்த பெண் குழந்தை.

     உங்கள் கூற்றுப்படி, உங்களைத் தட்டிக் கேட்க, ஒரு ஆண் மகவு வேண்டும் என்கிற எண்ணத்தை, பொய்யாக்கப் பிறந்த பெண் குழந்தை.

     இனி அடுத்ததாய், ஆண் குழந்தை பிறக்கிற காலம் வரை, முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு திரிவீர்கள், அப்படித்தானே?