05 டிசம்பர் 2014

வேலு நாச்சியார்


      கிஸ்தி, திரை, வரி, வட்டி. வானம் பொழிகிறது, பூமி விளைகிறது, உனக்கு ஏன் கொடுப்பது கிஸ்தி.

     எங்களோடு வயலுக்கு வந்தாயா?, ஏற்றம் இறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? நாத்து நட்டாயா? களை பறித்தாயா? தரணி வாழ் உழவனுக்கு கஞ்சிக் களயம் சுமந்தாயா? அங்கு கொஞ்சி விளையாடும் எம் குலப் பெண்களுக்கு, மஞ்சள் அரைத்துக் கொடுத்தாயா? அல்லது நீ மாமனா? மச்சானா? மானங் கெட்டவனே, எதற்குக் கேட்கிறாய் திரை? யாரைக் கேட்கிறாய் வரி?

     நண்பர்களே, தமிழ் மொழி அறிந்த பெரியவர்கள் முதல், சிறுவர்கள் வரை, அனைவரும், இவ்வீர உரையினை நன்கறிவார்கள். வீரபாண்டிய கட்ட பொம்மனை அறியாதவர்கள் யார்?

ஆனாலும், வீரபாண்டிய கட்ட பொம்மனுக்குச் சற்றும் குறைவில்லாத,
வீரத்தாய் வேலு நாச்சியாரை
தமிழ் மக்களில் எத்தனை சதவீதத்தினர் அறிவர்.
மிக மிகக் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும்.


     வேதனையாக இருக்கிறது நண்பர்களே. ஆங்கிலேயர்களுடன், தீரத்துடன், வீரத்துடன், விவேகத்துடன் போராடி, இழந்த மண்ணை மீட்டெடுத்த,
வீர மங்கை வேலு நாச்சியாரை
அறிந்தவர்கள் குறைவு, என்பதை எண்ணும்போது, உள்ளம் வருந்தத்தான் செய்கிறது.

     கடந்த சில மாதங்களில், வேலு நாச்சியாரைப் பற்றிய சில நூல்களையும், இணையத்தில் பல கட்டுரைகளையும் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. படிக்கப் படிக்க வியப்பு மேலிட்டுக் கொண்டே சென்றது. இப்படியும் ஒரு வீரப் பெண்மணியா? நமது நாட்டிலா? நமது மண்ணிலா? நமது மொழியிலா? நம்பவே முடியவில்லை.

     படித்ததை, உங்களுடன் பகிர்ந்து கொள்வதைவிட, வேறு என்ன வேலை எனக்கு இருக்கிறது.

     வேலு நாச்சியாரின் வீர வரலாற்றினை, ஒரு சிறு தொடராக, குறுந் தொடராக, ஏழே ஏழு அத்தியாயங்களில், என் போக்கில் எழுத முற்படுகிறேன்.

    குற்றம் குறை இருப்பின், சுட்டுங்கள், திருத்திக் கொள்கின்றேன்.

    தங்களின் அன்பான வருகையினையும், தங்களின் உயர்ந்த, உன்னதக் கருத்துக்களையும், எதிர்பார்த்து, ஆவலுடன் காத்திருக்கின்றேன்.

          வாருங்கள் நண்பர்களே, இதோ கால இயந்திரம், தங்களுக்காகத், தயராராகக் காத்திருக்கிறது. வாருங்கள், வந்து இருக்கைகளில் அமருங்கள்,
நொடிக்கு நூறாண்டு வீதம், பின்னோக்கிப் பயணிப்போம். 2014,..... 2000,.... 1900,.... 1800,..... 1700 .... இதோ காளையார் கோயில்.

       
காளையார் கோயில்
    

ஆண்டு 1772. ஜுன் மாதம் 26 ஆம் நாள். காளையார் கோயில். காளேசன் ஆலயம். அதிகாலை நேரம். பட்டு வேட்டி பளபளக்க மன்னர். அருகிலேயே இளைய ராணி. கோயிலுக்கு வெளியே, கட்டுக்கு அடங்காத கூட்டம். இறைவனைத் தரிசிக்க வந்திருக்கும், மன்னரைத் தரிசிக்க.

     இறைவனுக்கு கற்பூர ஆராதனை காட்டப் படுகிறது. மன்னர் இரு கரம் குவித்து, கண்களை மூடி, ஆண்டவனை மனதார வணங்கிக் கொண்டிருக்கிறார்.

     திடீரென்று ஆலயத்திற்கு வெளியில், ஓர் பலத்த வெடிச் சத்தம். மக்களின் கூக்குரல். துப்பாக்கிக் குண்டுகளின் தொடர் முழக்கம்.

     விழி மூடி, இறைவனை மனதார வணங்கிக் கொண்டிருந்த மன்னரின் கண்கள், வியப்புடன் வாயிலை நோக்குகின்றன. இறைவனை நோக்கிக் குவிந்திருந்த கரங்கள் கீழிறங்குகின்றன. வலது கை, இடையில் இருந்த வாளை உருவுகிறது.

     உருவிய வாளுடன், நெஞ்சம் நிமிர்த்தி, சிங்கம் போல், கோயிலுக்கு வெளியே வருகிறார் மன்னர். அவரைப் பின் தொடர்ந்து இளையராணியும் வருகிறார்.

     கோயிலுக்கு வெளியே, ஆங்கிலேயர்களின் வெறிக் கூட்ட்ம் ஒன்று, பொது மக்களை, காக்கைக் குருவிகளைச் சுடுவது போல், சுட்டுத் தள்ளிக் கொண்டிருந்தது.

     மன்னர் உருவிய வாளுடன், வேங்கையென, வெள்ளையரை நோக்கிப் பாய்கிறார். மன்னரின் வாள் சுழன்ற திசையெல்லாம், ஆங்கிலேயர்களின் தலைகள் அறுபட்டு, தரையில் விழுந்து உருண்டோடுகின்றன. மன்னரின் மெய்க் காவல் படையினர் ஒரு பக்கம் சுழன்று, சுழன்று தாக்க, காளையார் கோயில் மக்களும், கையில் கிடைத்த பொருள்களை எல்லாம் எடுத்து, ஆங்கிலேயர்களைத் தாக்கத் தொடங்கினர்.

     ஆங்கிலேயத் தளபதி ஜோசப் ஸ்மித், இராமநாத புரத்தில், அமைச்சர் தாண்டவராயன் பிள்ளையோடு, அமைதிப் பேச்சு வார்த்தை என்னும் பெயரில், ஒரு நாடகம் நடத்திக் கொண்டிருக்க, இதோ, இங்கே, காளையார் கோயிலின், பரந்து விரிந்த மரம் ஒன்றின் பின்னால் மறைந்து நிற்கிறான், மற்றொரு ஆங்கிலேயத் தளபதி பான் ஜோர்.

     நேரே நின்று போராடி, மன்னரை வீழ்த்த முடியாது என்பது பான் ஜோருக்குப் புரிந்து விட்டது. திருட்டுத் தனமாய், மரத்தின் பின் ஒளிந்தபடி., துப்பாக்கியை நீட்டி, மன்னரைக் குறி பார்க்கிறான். ஆள் காட்டி விரல், விசையினை அழுத்துகிறது. அடுத்த நொடி, துப்பாக்கியில் இருந்து, குண்டு சீறிப் பாய்கிறது.

     வீரப் போரிடும் மன்னரைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்த இளைய ராணி, அப்பொழுதுதான் கவனித்தார். மரத்தின் பின்னால் இருந்து, ஒரு துப்பாக்கி,

மன்னரையல்லவா குறி பார்க்கிறது.

மன்னா...

    ஒரு நொடி, ஒரே ஒரு நொடி கூட, தாமதிக்காமல், துப்பாக்கியில் இருந்து, புறப்பட்ட குண்டு, மன்னரைத் தொடும் முன், பாய்ந்து சென்று, மன்னரை மார்போடு கட்டித் தழுவுகிறார். சீறி வந்த குண்டு, இளைய ராணியின் முதுகைத் துளையிட, மன்னரைத் தழுவியபடியே, சரிகிறார்.

      மன்னரைக் காப்பாற்றி விட்டோம், காப்பாற்றி விட்டோம், அது போதும் என்ற நிம்மதி கண்களில் தெரிய, மெல்ல மெல்ல சரிகிறார்.

கவுரி....

      மன்னர் இளைய ராணியைத் தாங்கிப் பிடிக்கிறார். கோபத்தில் சிவந்திருந்த கண்கள், குண்டு வந்த திசையினைத் தேடுகின்றன.

      பான் ஜோரின் துப்பாக்கியில் இருந்து, சீறி வந்த மற்றொரு குண்டு, மன்னரின் மார்பைத் துளைக்கிறது.

     மன்னரும், இளைய ராணியும், ஒருவரை ஒருவர் தழுவிய படியே, மண்ணில் சாய்கின்றனர். இருவரின் இரத்தமும, ஒன்றிணைந்து, கோயிலின் திசையில் இறைவனைத் தேடி ஓடுகிறது.

     இந்திய வரலாற்றில், ஆங்கிலேயர்களை வீறு கொண்டு எதிர்த்து, களம் கண்டு போரிட்டு, மரணத்தைத் தழுவிய முதல் மன்னர் இவர்தான்.

சிவகங்கைச் சீமையின்
மன்னர்
முத்து வடுக நாதர்.



மன்னரின் உள்ளமும், இளைய ராணியின் உள்ளமும், உயிர் பிரியும், அக் கடைசி தருணத்தில், அக்கடைசி நிமிடத்தில், அக்கடைசி நொடியில், மூத்த ராணியை, நினைக்கின்றன. உயிர் பிரிவதற்குள் ஒருமுறையேனும், ஒரே ஒரு முறையேனும், அந்த அன்பு முகத்தினைப் பார்க்க மாட்டோமா, என இரு மனங்களும் தவிக்கின்றன, கண்கள் அலைகின்றன.

அவர்தான்,

ராணி வேலு நாச்சியார்.

- தொடரும்


79 கருத்துகள்:

  1. அன்பு நண்பரே சிவகங்கை மன்னரின் மரணத்தை குறித்து எமக்கு தெரிந்தாலும் இவ்வளவு விபரங்கள் இன்றுதான் தெரிந்து கொண்டேன்.
    வேலு நாச்சியாரின் வரலாற்றை தெரிந்து கொள்ளும் ஆவலில் ....
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
  2. முதலில் தங்களுக்கு நன்றி ஐயா.
    நான் என்னுடைய கல்லூரி படிப்பை(3 ஆண்டுகள்) காளையார் கோயிலுள்ள செல்லப்ப ஞான தேசிக சுவாமிகள் மடத்தில் தங்கித் தான் படித்து முடித்தேன். காளையார் கோயிலின் படங்களை பார்த்தவுடன் நான் அந்த ஊரில் தங்கியிருந்த நாட்கள் ஞாபகத்துக்கு வந்துவிட்டது.

    ஆஹா! ராணி வேலு நாச்சியார் அவர்கள் பற்றிய தொடரா,எழுதுங்கள், எழுதுங்கள் படிக்க ஆவலாக இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் படித்த ஊரா காளையார் கோயில்.
      மிகுந்த மகிழ்ச்சி நண்பரே
      வரலாற்றின் பக்கங்களில் பொன்னேடுகளில் பதிக்கப் பெற்ற ஊரல்லவா?
      நன்றி நண்பரே

      நீக்கு
  3. சாதிய சங்கங்கள் கூட வேலு நாச்சியாரின் புகழ் பாடுவதாக தெரியவில்லையே ?பாடப் புத்தகங்களில் கூட அவர் சாதனையைப் பற்றி இருப்பதாக தெரியவில்லை !உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்!
    த ம 3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் நாட்டிற்கு பாடுபட்டவர்களை மறத்தல் என்பது நமக்கு ஒன்றும் புதிது இல்லையே.
      ஆங்கிலேயர்களுடன் போராடி, இழந்த மண்ணை மீட்டெத்த ஒரே ஒருவர் வேலு நாச்சியார் மட்டும்தான்
      ஆனால் அவரை நாம் மறந்து விட்டோம்
      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே

      நீக்கு
  4. வேலு நாச்சியார் கேள்வி பட்டிருக்கிறேனே தவிர் என்ன செய்தார் என்பது தெரியாது. வீர மங்கையின் வரலாற்றை அறிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. உங்கள் பதிவைப் படித்ததும், வீர வேலுநாச்சியார் பற்றி ஒரு குறும்படம் பார்த்ததைப் போன்ற உணர்வு ஏற்பட்டது.

    // வேலு நாச்சியாரின் வீர வரலாற்றினை, ஒரு சிறு தொடராக, குறுந் தொடராக, ஏழே ஏழு அத்தியாயங்களில், என் போக்கில் எழுத முற்படுகிறேன்.//

    தொடரப் போகும் உங்கள் தொடரை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.
    த.ம.4

    பதிலளிநீக்கு
  6. இது போன்ற வரலாற்று பதிவினை,
    காளனின் கைகளின் சிக்குண்டு காணாமல் போகாமல் காத்து,
    "ராணி வேலு நாச்சியார்" பற்றி எழுதி வருவதை படிக்கும்போது,
    உண்மையில் உள்ளம் சிலிர்க்குது நண்பரே! இந்த
    வரலாற்று பதிவினை பற்றி நாளை வரலாறு சொல்லும் நண்பரே
    உமக்கு நல்வாழ்த்து!
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  7. அருமையான தொடர் ஒன்று ஆரம்பம் ஆகிறது வாழ்த்துக்கள் ...
    தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
  8. வீர மங்கை வேலு நாச்சியரின் வீர வரலாற்றுத் தொடர்!..
    அதுவும் - தங்களின் கைவண்ணத்தில்..

    மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றேன்..
    நல்வாழ்த்துக்களுடன்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. எழுத்துப் பிழை காரணமாக மேற்கட்ட என் பதிலை நீங்கியுள்ளேன் ஐயா

      நீக்கு
    3. நண்பரே இதை தங்களது டேஷ்போர்டிலிருந்தே (கருத்துரைகள் பகுதியில்) எடுத்து விட்டால் இங்கு காண முடியாது.

      நீக்கு
    4. நன்றி நண்பரே
      இனி அவ்விதமே செய்கின்றேன்

      நீக்கு
  9. வணக்கம் ஐயா!

    நானும் இந்த வரலாற்றுத் தொடரினை அறிய ஆவலுடையேன்!

    தொடருங்கள்!....
    நல் வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
  10. சிறப்பை அறிந்தேன்... நன்றி ஐயா...

    தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
  11. காளையார்கோயில் சென்றுள்ளேன். தங்களின் பதிவில் உற்ற சிற்பத்தைப் பார்த்துள்ளேன். தொடர்ந்து வேலு நாச்சியாரைப் பற்றி தங்கள் எழுத்தில் அறிய காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காளையார் கோயிலைக் காணும் வாய்ப்பு எனக்கு இன்னும் கிட்டவில்லை ஐயா.
      அவசியம் ஒரு நாள் செல்ல வேண்டும்
      நன்றி ஐயா

      நீக்கு
  12. வளரும் தலைமுறைக்கு மட்டுமல்ல வரலாற்று பாட புத்தகத்தில் எழுதப்படவேண்டிய தொகுப்பை வழங்க முன் வந்துள்ள உங்களுக்கு வணக்கத்தை தெரிவித்து. அடுத்த பகிர்வுக்காக காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  13. வேலு நாச்சியார் பற்றி படித்து இருக்கிறேன், ரேடியோவில் நாடகமாக வந்து இருக்கிறது.

    நீங்களும் கதையை அழகாக சொல்லி செல்கிறீர்கள்.
    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  14. பெயரில்லா06 டிசம்பர், 2014

    மிக நன்றி தொடரிற்கு.
    தொடருங்கள்
    மிக்க நன்றி.
    வேதா. இலங்காதிலகம்

    பதிலளிநீக்கு
  15. வேலு நாச்சியார் நாவலை எனது எம்ஃபில் பாடத்திட்ட ஆய்விற்காக தேர்ந்தெடுத்தேன்..என்னுள் நுழைந்த அவள் எப்போதும் என்னுடன் வாழ்கின்றாள் ..அவள் வாழ்ந்த இடங்களில்,அவள் நடந்த பாதைகளில் என் கால்கள் பட்ட போது மெய் சிலிர்த்தது....என்ன ஒரு வீரம்...தனக்கென உயிர்விட்ட உடையாளை பெருமை படுத்திய விதம்..அவருக்கிணையாரும் இல்லை...சகோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் வாழ்ந்த இடங்களில், அவர் நடந்த பாதைகளில்,
      தாங்களும் நடந்திருக்கிறீர்கள்
      கொடுத்து வைத்தவர் தாங்கள் சகோதரியாரே
      நன்றி

      நீக்கு
  16. அருமை!தொடருங்கள் தொடர்வேன்

    பதிலளிநீக்கு
  17. ஒவ்வொரு மாநிலத்திலும் ஆங்கிலேயரை எதிர்த்து நின்றஒரு பெண்மணியின் கதை இருக்கிறது ( ராணி சென்னம்மா, ராணிலக்ஷ்மிபாய் போன்றோர்) தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் ஐயா
      ஆனாலும் வேலு நாச்சியார் அளவிற்கு
      எதிர்த்து வெற்றி பெற்றவர்கள் மிகவும் குறைவாகத்தான்
      இருப்பார்கள் ஐயா
      நன்றி ஐயா

      நீக்கு
  18. வேலு நாச்சியார் எனும் வீரத் திருமகளின் கதையை படிக்க நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்...

    த.ம. +1

    பதிலளிநீக்கு
  19. வரலாறுகளில் உள்ள வீரம்
    வரும் தலைமுறை அறிய
    அருமையாய் உரைத்தீர்

    பதிலளிநீக்கு
  20. பெயரில்லா06 டிசம்பர், 2014

    வீரநாச்சியார் வரலாற்றை நீங்கள் எழுதப்போவது, மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது ஐயா. உங்கள் பணி சிறக்கட்டும்!

    பதிலளிநீக்கு
  21. மிக அருமை.வேலு நாச்சியார் அவர்களி ன் வரலாற்றினை தெரிந்துகொள்ள மிகவும் ஆவலாக உள்ளேன்.நன்றி.

    பதிலளிநீக்கு
  22. வேலு நாச்சியார் குறித்த தொடருக்கு வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  23. இந்திய வரலாற்றில், ஆங்கிலேயர்களை வீறு கொண்டு எதிர்த்து, களம் கண்டு போரிட்டு, மரணத்தைத் தழுவிய வேலு நாச்சியார் பகிர்வுகள் சிறப்பானவை.பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  24. ஆவலுடன் படித்தேன். மிக அருமை.

    பதிலளிநீக்கு
  25. அருமையான பதிவு! தொடருங்கள் நண்பரே!

    பதிலளிநீக்கு
  26. உங்களுக்கே உரித்தான அருமையான நடையில் அவசியமான வரலாற்றுப் பதிவு தொடருங்கள் கரந்தையாரே!
    த ம கூடுதல் 1

    பதிலளிநீக்கு
  27. நல்ல கட்டுரை துவக்கம் ,தொடருங்கள்.வாழ்த்துக்களும் பாராட்டுக்களுமாய் ஒரு சேர/

    பதிலளிநீக்கு
  28. மிக அருமையாக உள்ளது. தொடருங்கள். காத்திருக்கிறேன். வேலுநாச்சியார் கட்டாயம் அறியப்பட வேண்டியவர்.

    பதிலளிநீக்கு
  29. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு, அற்புதமான தொடருக்கு அச்சாரத்தை போட்டு விட்டீர்கள். இந்தப் பதிவு ஆவலை அதிகரித்து விட்டது. அடுத்தடுத்த வாரங்கள் எப்பொழுது வரும் என்று இதயத் துடிப்பை ஏற்படுத்தி விட்டது பதிவு.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  30. முதல் கருத்து வலைப்பூ பிரச்சினையில் இருந்து மீண்டு விட்டதா என்பது தெரிவதற்காக போட்ட பதிவு...

    வீரமங்கை வேலு நாச்சியார் பற்றி தாங்கள் தொடர இருப்பது சந்தோஷம் ஐயா...

    காளையார் கோவிலும் மன்னர் முத்துவடுகரும் வரலாற்றில் அதிகம் சொல்லப்படவில்லை என்பது வருத்தமே...

    தற்போது தேவா அண்ணனும் வேங்கைகளின் மண் என இந்த வரலாற்றை எழுதி வருகிறார்...

    தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே
      நண்பர் தேவா அவர்களின் வலைத்தள முகவரியை தெரிவிக்குமாறு வேண்டுகின்றேன்,
      அவரது தளத்தினை, அறியாத பல செய்திகளை அறிந்து கொள்வதற்கும் உதவியாக இருக்கும் என்று எண்ணுகின்றேன்
      நன்றி நண்பரே

      நீக்கு
  31. பெருமையாய் இருக்கிறது. அந்த வீரம் செறிந்த மண்ணில் தான் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொடுத்து வைத்தவர் நண்பரே நீங்கள்
      பெருமையாக இருக்கின்றது
      நன்றி நண்பரே

      நீக்கு
  32. கதை களைகட்ட தொடங்கிவிட்டது! நாமும் பெரிய ராணியை பார்க்க ஆவலோடு காத்திருக்கிறோம்!

    பதிலளிநீக்கு
  33. தங்கள் நடையில் "வேலுநாச்சியார்"

    ஒவ்வொரு வாரமும் வீரமும், நெகிழ்வும் நிரம்பிய வரலாற்றுத் தொடர்
    வெள்ளையரை எதிர்த்த முதல் அரசர், சுதந்திரம் வேண்டி முதல் முழக்கம்! ...தக்க சான்றுகளுடன்....!!!

    தொடரட்டும் வேலுநாச்சியார் வரலாற்றுத் தொடர்...!

    மிகுந்த ஆவலுடன்,
    மும்பை சரவணன்

    பதிலளிநீக்கு
  34. வேலு நாச்சியார் பற்றிய, அறியாத பல வரலாற்று தகவல்களுடன் மிக சுவையாக கொடுத்துள்ளீர்கள். உங்கள் வலைப்பூ வரலாற்றில் மறக்கப்பட்டவர்களை ( மறைக்கப்பட்டவர்களை ?! ) மீட்டெடுக்கும் வரப்பிரசாதப்பூ !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
  35. அரிய புகைப்படங்கள் .. நெகிழ்வான வரலாறு .. நிறைவான கட்டுரை .. நன்றி அய்யா

    பதிலளிநீக்கு
  36. இரண்டு வருடங்களுக்கு முன்னர்தான் வேலு நாச்சியார் பற்றிய நாவலைப் படித்தேன்..அவரை மறந்தது வேதனைதான்..ஜான்சிராணியை மட்டுமே உதாரணம் சொல்லிக் கொண்டிருக்கிறோம் பெண் பிள்ளைகளுக்கு!! :(
    நீங்கள் எழுதுவது மிகுந்த மகிழ்ச்சி, வாழ்த்துக்கள் அண்ணா!

    பதிவைப் படித்துச் சிலிர்த்துவிட்டேன்.
    த.ம.15

    பதிலளிநீக்கு
  37. சிறிது அறிந்திருந்தாலும், அருமையான தெரிந்திராத தகவல்கள்! வேலுநாச்சியார் பற்றிய தகவல்கள். தாங்கள் தொடர இருப்பது மிகவும் மகிழ்ச்சி. ஏன் என்றால், வட இந்திய வீராங்கனைகளைப் போன்று த்ன் இந்திய பெண் வீராங்கனைகள் போற்றபடுவதில்லை.

    தாங்கள் எழுதத் தொடங்கியதற்கு வாழ்த்துக்கள்! இவ்வுலகம் அறியட்டும்! தொடர்கின்றோம் நண்பரே!

    பதிலளிநீக்கு
  38. ஒரு திரைப்படம் பார்த்தது போல் கதையைக் கொண்டு செல்கின்றீர்கள். மிக்க நன்றி. தொடர்கின்றேன்

    பதிலளிநீக்கு
  39. வீரப்பெண் மணியின் திருநாமம் நிலைக்கட்டும் ! வாழ்த்துக்கள் !! உடுவை

    பதிலளிநீக்கு
  40. தொடக்கமே மிக அருமையாக உள்ளது. தொடரட்டும் ............ :)

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு