02 டிசம்பர் 2014

பந்தக்கால்


அன்பு நண்பருக்கு வணக்கம்,

      ரொம்பவும்தான் நாளாகிப் போனது, உங்களுக்குக் கடிதம் எழுதி.

      பெண் குழந்தை பிறந்திருக்கிறதாமே, சந்தோஷம், வாழ்த்துக்கள்.

      தங்களுக்குத் திருமணமாகி, நான்கு வருடங்கள் கழித்து பிறந்த குழந்தை.

      மனைவி கருவுற்றவுடன், ஸ்கேன் பார்த்து, பெண் குழந்தை என்றவுடன் கலைத்து,... இனியும் கலைத்தால், மனைவியின் உயிருக்கு ஆபத்து, என்ற டாக்டரின் எச்சரிக்கையினால், கலைக்காமல் விட்டு, பிறந்த பெண் குழந்தை.

     உங்கள் கூற்றுப்படி, உங்களைத் தட்டிக் கேட்க, ஒரு ஆண் மகவு வேண்டும் என்கிற எண்ணத்தை, பொய்யாக்கப் பிறந்த பெண் குழந்தை.

     இனி அடுத்ததாய், ஆண் குழந்தை பிறக்கிற காலம் வரை, முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு திரிவீர்கள், அப்படித்தானே?


    

நண்பர் விமலன், இப்படித்தான் தொடங்குகிறார், தனது பந்தக்காலு சிறு கதையை.

     செய்தி கேள்விபட்டு, மறுநாள் உன்னை பார்க்க வந்தபோது, அதே வெள்ளைச் சிரிப்புடன், வேதனை கலந்து, என் கையைப் பிடித்துக் கொண்டு சொன்னாய், முருகபூபதி.

     எங்க மாமாகிட்ட சொல்லுங்க, ஒரு வேள நான் யெறந்துட்டா, என் பொண்டாட்டிக்கு, வேற ஒரு கல்யாணம் பண்ணி வைக்கச் சொல்லி.

      அஞ்சலி என்னும் சிறுகதையினைப் படிக்கப் படிக்க உடல் சிலிர்க்கிறது.

      குழந்தையைப் பார்க்க வந்திருந்தவர்களில், பாதிக்கு மேல் சொன்னார்கள், மொதல்லயும் பையன், இப்ப இரண்டாவதும் பையன். யோகக்காரன்.

     பொண்ணு பொறக்கும்முன்னு நினைச்சோம், ஆணுல்ல பொறந்திருக்கு.

     பேசிக் கொண்டிருந்தவர்களில் சிலரிடம், இவனும் மனம் ஒட்டாமல், ஒப்புக்கு பேசிவிட்டு, வார்டினுள் நுழைந்தான். இவன் வருகையை எதிர்பார்த்தது போல் மனைவியும்.

      மௌனம் .........

      பரிமாறிக் கொண்ட பார்வைகளில் நிறைய நிறைய

     ஏன் குடும்பக் கட்டுப்பாடு ஆப்ரேசன் வேணாம்னுட்ட

      ஒரு பெண் குழந்தைப் பெத்துக்கனும்.

      குருத்து சிறுகதையினைப் படித்தபோது, மனமெங்கும் ஓர் மகிழ்ச்சி அலை பரவுவதை உணர முடிந்தது.

      மனைவியைப் பார்த்தான். காபி டம்ளரை நீட்டினாள். முகத்தில் கேள்வியை தேக்கி நின்ற இவனைப் பார்த்த நண்பன் .....

       டேய், ஒங்க்கிட்டயெல்லாம் சொல்ல சந்தர்ப்பம் வாய்க்கல. பஞ்சாப்புக்கு கேம்ப் போயிருந்தப்ப ஏற்பட்ட பழக்கம்.

       கையில் புள்ளயோட, நஞ்சி போயி

       அனாதையா, விதவையா நின்னா

       கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

        அம்மி மிதித்து ...சிறுகதையில் வரும் நண்பனை, கையெடுத்துக் கும்பிடத் தோன்றுகிறதல்லவா.

     ஒங்க தாத்தா யெறப்புக்கு பின்னாடி, அந்த மனுசர நெனச்சு, அப்பிடி உருகிப் போனா, மாத்தைக்கி ஒரு நா, ஒங்க தாத்தாவ நெனச்சு, வெரதம் இருக்குறதோட மட்டும் இல்லாம, அக்கம் பக்கத்து வீட்டுப் புள்ளைங்க ரெண்டு பேருக்காவது, கூழோ, கஞ்சியோ, சாப்பாடோ, அவ வீட்டுல வச்சுப் போடுவா.  அப்பேர்ப்பட்ட சீவன் அது.

     தம்பி, இன்னைக்கு அது மனசு பூரா ஒங்க தாத்தாதாம்பா.

     பக்கத்து வீட்டுப் பாட்டி, பேசிய பேச்சில், சின்னதாய் ஒரு பொறி தட்டல்.

     அம்மா, அந்த மந்த வீட்ட, சுத்தம் பண்ணிக் குடுத்துரு, பாட்டி கொஞ்ச நா, அங்க போயி, யௌப்பாறிட்டு வரட்டும்.

      பாட்டியின் முகத்தில் சந்தோஷ ரேகை.

      பஞ்சாரம் சிறுகதையைப் படிக்கப் படிக்க, உறவின் மேன்மையும் புரிந்தது, வாழ்வின் அர்த்தமும் விளங்கியது.

பெண்மை வாழ்கவென்று கூத்திடு வோமடா
    பெண்மை வெல்கவென்று கூத்திடு வோமடா
தண்மை இன்பம்நற் புண்ணியஞ் சேர்ந்தன
    தாயின் பெயரும் சதியென்ற நாமமும்

என்று பாடுவார் புரட்சிக் கவி பாரதி.
    

நண்பர் விமலன் அவர்கள், தனது தனித்துவமான நடையால், கிராமத்து வெள்ளந்தி மனிதர்களின் கள்ளம், கபடமற்ற வார்த்தைகளால், பெண்ணியச் சிந்தனையோடு, பெண்மையின் பெருமையினைப் பேசும், சிறுகதைகள் ஒவ்வொன்றினையும், திரைப்படம் போலவே, நம் கண் முன்னே ஓட விடுகிறார்.

என்னை சற்றே ஆழமாக
இம்மண்ணில் பதியனிட்ட
எனது பெற்றோர்களுக்கு
என்று கூறி
பந்தக்கால்
என்னும், தனது சிறுகதைத் தொகுப்பினை
தன் பெற்றோர்களுக்குச்
சமர்ப்பித்துள்ளார்
நண்பர் விமலன்.

இவர்தம் பெற்றோர்
சற்றே அல்ல,
மிக ஆழமாகவே
இம்மண்ணில்
இவரைப் பதியனிட்டதும்,

இவரும்
ஆல்போல்
தழைத்து, கிளை விட்டு
பரந்து பரவி, உயர்ந்து நிற்பதும்,
இவரது
ஒவ்வொரு வார்த்தைகளிலும்,
அவ்வார்த்தைகளில் உள்ள
ஒவ்வொரு எழுத்திலும்
தெள்ளத் தெளிவாய் தெரிகிறது.


வா ழ் த் து க் க ள்   ந ண் ப ரே.


66 கருத்துகள்:

  1. 'பந்தக்கால்' சிறுகதை தொகுப்பினை
    சமர்ப்பித்துள்ள வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. ஒரு நல்ல நூலுக்கு அருமையானதொரு விமர்சனம்! உங்களின் விமர்சனத்தைப்படித்த வரையிலுமே திரு விமலனின் எழுத்து ஆழமும் கூர்மையும் மென்மையுமாய் மனதைத்தொட்டு நெகிழ வைக்கின்றன! மேன்மேலும் அவர் எழுத்து உயரிய இடத்தை அடைய என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!!

    விமர்சனத்தைப்படித்த பின் எனக்கும் இந்த நூலைப்படிக்க வேண்டும்போல இருக்கிறது. எங்கே வாங்கலாம் என்று எழுதுங்கள். இல்லையென்றாலும் நான் தங்களிடம் வாங்கிப்படித்துக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானே வந்து தங்களிடம் நூலினைத் தருகின்றேன்
      நன்றி சகோதரியாரே

      நீக்கு
  3. ஆகா இந்த நூலை விமலன் அவர்களைச் சந்தித்த பொழுதே பெறாமல் போய்விட்டேனே என்று ஏங்க வைத்த பதிவு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. த ம நானே முதல்வன்... அவ்வ்

    பதிலளிநீக்கு
  5. முதலில் திரு. விமலன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
    விமர்சனமே இவ்வளவு நன்றாக இருக்கிறதே,நூல் எவ்வளவு நன்றாக இருக்கும்.

    அடுத்து, ஜெயக்குமார் சார் தங்களுக்கு வாழ்த்துக்கள். மிகவும் சிறப்பாக நூலிற்கு விமர்சனம் வழங்கியமைக்கு.

    பதிலளிநீக்கு
  6. சிறப்பான விமர்சனம் ஐயா...

    இனிய நண்பர் விமலன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  7. நன்றி சார். நல்ல விமர்சனத்திற்கும் என்றென்றும் மாறாத அன்பிற்கும் நட்பிற்குமாய்/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான நூல் நண்பரே
      நூலினைப் பெற்று, ஒரு மாதமாகியும், பல்வேறு அலுவல்களால் உடனடியாக பதிவு எழுத இயலாமற் போய்விட்டமைக்கு வருந்துகின்றேன்.
      மதுரையில் தங்களைச் சந்தித்தும், அதிக நேரம் தங்களுடன் பேசுவதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. விரைவில் சந்திப்போம் நண்பரே
      நன்றி

      நீக்கு
  8. திரு. விமலன் அவர்களின் பந்தக்காலினை சிறப்பான விமர்சனத்துடன் எங்களுக்கு வழங்கிய தங்களுக்கும் நூலாசிரியர் அன்பின் திரு. விமலன் அவர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்!...

    பதிலளிநீக்கு
  9. நண்பர் விமலன் அவர்களுக்கும், விமர்சனம் கொடுத்த கரந்தையார் அவர்களுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. நல்ல விமர்சனம். விமலன் அவர்களின் எழுத்துககளில் மனதைப் பறிகொடுத்த வாசகர் நீங்கள். அவரது எழுத்துக்கள் பற்றிய உங்களது பழையபதிவு நினைவுக்கு வருகிறது.
    த.ம.4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐயா
      விமலன் அவர்கள் மனதினை கொள்ளை கொள்ளும் எழுத்திற்குச் சொந்தக்காரர்.
      நன்றி ஐயா

      நீக்கு
  11. அழகானதொரு விமர்சனம். விமலன் அவர்களின் எழுத்து நடை அனைவரையும் கவர்ந்திழுக்கும் என்பது தெரிந்ததுதான் என்றாலும். இன்று தங்களின் விமர்சனப்பார்வை படிக்கும் அனைவரையும் இன்னும் ஆர்வமாய் புத்தகத்தை தேட வைக்கும்.

    பதிலளிநீக்கு
  12. எதையும் ஆழ்ந்து படிக்கும் தங்கள் பழக்கம் நன்றாகத் தெரிகிறது! நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  13. விமலன் நண்பருக்கு வாழ்த்துக்கள்! அவரது வலைத்தளத்தில் அவர்கது எழுத்துக்களைத் தொடர்கின்றோம். அருமையான எழுத்துக்கள்!

    தங்கள் விமர்சனமும் மிக நன்று!

    பதிலளிநீக்கு
  14. உங்கள் மூலமாகக் கிடைத்த இந்த அறிமுகத்துக்கும் விமரிசனத்துக்கும் நன்றி. தாமதமான வருகைக்கு மன்னிக்கவும். :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாமதமானால் என்ன சகோதரியாரே
      தங்களின் தொடர் வருகை மட்டில்லா மகிழ்வினை அளிக்கின்றது
      நன்றி சகோதரியாரே

      நீக்கு
  15. பொதுவாய் இம்மாதிரி விமரிசிக்கும் நீங்கள் புத்தகம் பதிப்பான இடம் முகவரி போன்றவற்றைத் தருவீர்களே. ஆழ்ந்து படிக்கும் உங்கள் நேர்த்தி மகிழ்ச்சி அளிக்கிறது. ஆசிரியருக்கும் விமரிசித்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா
      பதிப்பு முகவரியினை பதிவில் பதிவிட மறந்தமைக்கு வருந்துகின்றேன் ஐயா.
      இந்நூலினை வெளியிட்டோர்
      சரவணா வெளியீடு,
      4/106, ஸ் அம்மன் இல்லம்
      செல்வ கணபதி நகர், குமணன் சாவடி,
      சென்னை - 600 056

      நீக்கு
  16. வாழ்க்கையின் வெவ்வேறு கோணங்களில் எழுதிய வரிகள் மனதில் பதிய வைத்துவிட்டீர்கள் ஜயக் குமார். சோளபொரி சுவை. யானையைப் படிக்கவேண்டும். வித்திட்ட உங்களுக்கும்,வரிகளிட்ட திரு விமலனுக்கும் மனம் நிறைந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  17. அருமையான மதிப்புரை.
    மிக்க நன்றி.
    எனது பக்கத்தில் பகிர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும்
      பகிர்விற்கும் மிக்க நன்றி ஐயா

      நீக்கு
  18. வணக்கம் ஐயா!

    தங்கள் பணி அளப்பரியது!

    சகோதரர் விமலின் பக்கம் பார்த்திருக்கின்றேன்! அவரின் கதைகளில் காட்சிப் படுத்தும் கற்பனைத் திறன் அற்புதமானது!..
    அப்படியே எம்மை ஒரு குறும்படம் பார்க்கும் உணர்வுக்குள் இட்டுச் சென்றுவிடுவார்!.. நல்ல எழுத்தாளர்!

    பகிர்ந்து கொண்டீர்கள் அவர் பெருமையை இங்கு நீங்களும்!
    மிக்க நன்றியுடன் வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்!

    பதிலளிநீக்கு
  19. அருமையாக விமர்சனம் செய்து இருக்கிறீர்கள் . வாழ்த்துக்கள்.
    விமலன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  20. நூல் அறிமுகத்திற்கான அறிமுகப் பத்தி மிகவும் அருமை. தொடர்ந்து நூலைப் பற்றி நுண்ணிய முறையில் தாங்கள் எழுதியுள்ள மதிப்புரை நூலைப் படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியது. நூல் ஆசிரியருக்கும் சிறப்பான மதிப்புரை தந்த தங்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  21. நூலைப்படிக்கும் ஆர்வத்தைத்தூண்டும் மதிப்புரை.இருவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  22. அருமையான விமர்சனம். முழுவதும் படிக்க ஆவல்.

    புத்தகம் கிடைக்குமிடம் சொன்னால் வாங்க வசதியாக இருக்கும்.... ஆன்லைனில் வாங்க முடியுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா
      ஆன்லைனில் கிடைக்குமா என்று தெரியவில்லை ஐயா
      இந்நூலினை வெளியிட்டோர்
      சரவணா வெளியீடு,
      4/106, ஸ் அம்மன் இல்லம்
      செல்வ கணபதி நகர், குமணன் சாவடி,
      சென்னை - 600 056

      நீக்கு
  23. வலைப்பூவில் விமலன் எழுத்துக்களைப் படித்து ரசித்து வருகிறேன் ,தங்கள் அறிமுகம் நன்று !
    த ம 11

    பதிலளிநீக்கு
  24. வலைப்பூவில் விமலன் எழுத்துக்களைப் படித்து ரசித்து வருகிறேன் ,தங்கள் அறிமுகம் நன்று !
    த ம 11

    பதிலளிநீக்கு
  25. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  26. நல்ல விமர்சனம் அய்யா. அஞ்சலி கதையின் முடிவு போன்றே பல வருடங்களுக்கு முன்னர்( பொன்னீலனா அல்லது தி.க.சி.யா தெரியவில்லை ) எழுதியிருப்பதாக என் சித்தப்பா பல முறை சொல்லி சிலாகித்திருக்கிறார்கள். Great men think alike. பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  27. அருமையான விமரிசனம் தந்த தங்களுக்கும் அதற்கு ஆதாரமான அந்த நூலை எழுதிய விமலன் அவர்கலுக்கும் என் மனமார்ந்த அன்பு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  28. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
    திரு.விமலன் அவர்கள் எழுதிய ’பந்தக்கால்’ சிறுகதை தொகுப்பிற்கு மிக அருமையாக தாங்கள்எழுதிய இந்த மதிப்புரையை வாசித்தவர்கள் அனைவரும் அந்தப் புத்தகத்தினை தேடுவது உறுதி.

    பதிலளிநீக்கு
  29. உங்கள் விமர்சனத்தைப் படிக்கும்போதே நூலைப் படிக்க ஆவல் எழுகிறது. திரு. விமலன் அவர்களுக்கு பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  30. பெயரில்லா03 டிசம்பர், 2014

    நல்ல விமர்சனம் ஐயா. புதிய வாசகர்களுக்கு இதைவிடச் சிறப்பாக யாரும் நூல் அறிமுகம் செய்துவிட முடியாது.

    பதிலளிநீக்கு
  31. யதார்த்தமான சூழலும் அன்றாடம் நாம் பார்க்கும் மனிதர்களுமே இவரது கதைக் களங்களாக அமைந்து சிறப்பு சேர்க்கிறது. இதை அவரது பதிவுகள் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது. இந்த நூலையும் படிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  32. திரு. விமலன் அவர்களின் ’பந்தக்கால்’ தங்களின் விமர்சனத்திறமையால் மேலும் உறுதியாக வேறூன்றி நிற்கிறது. மிக்க மகிழ்ச்சி ஐயா. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு