கரந்தையில்
பிறந்தவர் இவர். கரந்தையிலேயே வசித்தும் வருபவர். நான் பயின்ற கரந்தைத் தமிழ்ச்
சங்க வளாகத்தில், எனக்கு முன்னரே பயின்றவர். இன்று அண்ணாமலைப் பல்கலைக் கழகத்
தமிழ்ப் பேராசிரியர்.
400 க்கும் மேற்பட்ட சிறுகதைகள்,
பத்திற்கும் மேற்பட்ட குறு நாவல்கள், பத்திற்கும் மேற்பட்ட சிறு கதைத் தொகுப்புகள்,
500 க்கும் மேற்பட்ட கவிதைகள், 5 ற்கும் மேற்பட்ட நாடகங்கள், ஆங்கிலத்தில் பல
கவிதைகள், மொழி பெயர்ப்பு இலக்கியங்கள் என இவரது எழுத்துப் பணி, பல தளங்களில் விரிந்து
கொண்டே செல்லும்.
இவரது சிறுகதையொன்று மேல்நிலைப் பள்ளிப் பாடத்திட்டத்தில் பாடமாக இடம்
பெற்றுள்ளது. காலம் தின்றவர்கள் என்னும் இவரது சிறுகதைத் தொகுப்பு, கோவை
பாரதியார் பல்கலைக் கழகத்தில், பாடமாக இடம் பெற்றுள்ளது.
தமிழ்ப் பல்கலைக் கழகம், பாரதிதாசன்
பல்கலைக் கழகம், பாரதியார் பல்கலைக் கழகம், மனோன்மணியம் பல்கலைக் கழகம்,
அண்ணாமலைப் பல்கலைக் கழகம், பெரியார் பல்கலைக் கழகம், அழகப்பா பல்கலைக் கழகம்,
மதுரை காமராசர் பல்கலைக் கழகம் முதலான பலகலைக் கழகங்களில் பயிலும் எண்ணற்ற
மாணவர்கள், இவரது சிறுகதைகளை ஆய்வு செய்து, எம்.ஃ,பில்., பட்டமும், டாக்டர்
பட்டமும் பெற்றுள்ளனர்.
தமிழ் நாடு கலை இலக்கியப் பெரு மன்றப்
பரிசு, கலைஞர் அறக்கட்டளைப் பரிசு, பாரதி தமிழ்ச் சங்க விருது என பல்வேறு
அமைப்புகளின் சார்பில் பல விருதுகளையும், கணக்கற்ற பரிசில்களையும் பெற்றவர்.
புரண்டு படுக்கும் வாழ்க்கை என்னும்
இவரது சிறுகதைத் தொகுப்பு நூலினைப் படித்து, அதன் பிடியில் இருந்து மீள முடியாமல்
பல நாட்கள் தவித்திருக்கிறேன்.
நண்பர்களே, யாரைப் பற்றிச் சொல்லுகின்றேன்
என்று தெரிகிறதா? இவர்தான் தமிழ் கூறும் நல்லுலகம் நன்கறிந்த
கவிஞர் ஹரணி
---
நண்பர்களே, சில நாட்களுக்கு முன், பள்ளியில்
இருந்து வீடு திரும்பிய போது, ஒரு கடிதம் காத்திருந்தது.
கவிஞர் ஹரணி அவர்களிடமிருந்து ஒரு கடிதம்.
கடிதம் எழுதுதல் என்னும் ஓர் உயரிய பழக்கம்,
ஓர் உன்னதக் கலை, முற்றாய் தொலைந்து விட்ட காலம் இது.
பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளுக்கு
முன்னர், ஒவ்வொரு வீட்டிலும், வீட்டின் மேற்கூரையில் இருந்து ஒரு கம்பியைத் தொங்க
விட்டு, அதில் வீட்டிற்கு வந்த கடிதங்களை எல்லாம் சொருகி வைத்திருப்பார்கள்.
என்றாவது ஒரு நாள், அக்கடிதங்களை எல்லாம்,
மீள் வாசிப்பு செய்யும் பொழுது, கிடைக்கின்ற ஆனந்தம் இருக்கிறதே, அதற்கு இணை ஏது.
பல ஆண்டுகளுக்கு முன்னரே, இயற்கையோடு ஒன்றெனக் கலந்தவர்கள் கூட, எழுத்து
வடிவத்தில் நம்மோடு பேசுவார்களே, அதை
நாமும், நமது அகச் செவிகளில் கேட்டு இன்புறுவோமே, அந்த சுகம் இருக்கிறதே, அதை அனுபவித்தால்தான்
புரியும்.
உறவினர்களின் எண்ணமும், நட்புகளின்
வார்த்தைகளும், இன்று அலைபேசி வழியாக, அடுத்த நொடியே, நம்மை வந்தடைந்து, மறு
நொடியே, காற்றில் அல்லவா கரைந்து போய்விடுகின்றன.
கவிஞர் ஹரணி இன்றும் கடிதத்தை, கடித
இலக்கியத்தை விடாப் பிடியாகப் பிடித்துக் கொண்டு, பின் பற்றி வருகின்றார். பலமுறை
அலைபேசி வழி அழைத்துப் பேசியிருக்கிறார், ஆனால் அவ்வார்த்தைகள் எல்லாம் காற்றோடு காற்றாக
கலந்தல்லவா போய்விட்டன.
இதோ, காலங்காலமாய் உடனிருக்க, அவ்வப்போது
படித்து மகிழ, ஓர் கடிதம். காகிதத்தில் ஓர் விருது.
கரந்தை மாமனிதர்கள்
என்னும் எனது
நூலிற்காக எழுதப் பெற்ற, இக் கடிதத்தில், இந்த எளியேன் மீதுள்ள, கவிஞரின் அன்பு,
எழுத்தாய் வெளிப்பட்டு நிற்பது கண்டு அகம் மகிழ்ந்தேன்.
வலை உலகில் எழுத, எனக்கு வழி காட்டியவர்
இவர். எனது வலையுலக ஆசான்.
ஆசானிடமிருந்து, மாணவனுக்கு ஓர் பாராட்டு. இதைவிட
வேறென்ன வேண்டும் எனக்கு. உண்மையிலேயே கொடுத்து வைத்தவன்தான் நான்.
தங்களை வாழ்த்திய அய்யாவின் தமிழார்வம் எழுத்துளகில் உள்ள பெரும்பாலானோர் அறிந்ததே.
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குநண்பரே இன்றும்கூட கடிதம் எழுதும் கவிஞர் ஹரணி அவர்களின் உயர்ந்த எண்ணம் கண்டு வியக்கின்றேன் தங்களது ஆசானுக்கு எமது வணக்கங்களும்... தகுதியுள்ள தங்களுக்கு முடிசூட்டிய இந்தக்கடிதம் காலத்தால் போற்றிப் பாதுகாக்கப் படவேண்டியதே தங்களுக்கும் எமது வாழ்த்துகள்
பதிலளிநீக்குதமிழ் மணம் 1
நன்றி நண்பரே
நீக்குtha.ma.1
பதிலளிநீக்குகடித இலக்கியம் காணும் தோறும் மகிழ்விக்கும் ஒன்று..வாழ்த்துகள் அண்ணா.
நன்றி சகோதரியாரே
நீக்குஆயிரம்தான் பேசினாலும் எழுத்தைப்போல, கடிதத்தைப் போல வருமா.....?
பதிலளிநீக்குபேசும் போது படபடவென்று ஏதாவது பேசிவிட வாய்ப்பு உண்டு! ஆனால், கடிதம் எழுதும் போது நின்று, நிதானித்து வார்த்தைகளை அளந்து கூற கடிதம்தான் சிறந்த வழி!
பேராசிரியர் திரு. ஹரணி ஐயா அவர்கள் தன் எண்ணத்தை என்னதான் செல்லில் பேசினாலும் இந்த கடிதத்தில் காணும் அன்பும், உயிர்ப்பும் பேச்சில் தெரிந்திருக்குமா?
இன்றும் கூட அரசியலில் உயர்மட்ட தலைவர்களில் கடிதம்தான் இறுக்கத்தை குறைத்து இணக்கத்தை வளர்க்கப் பயணப்படுகிறது.
நேருவை நேரிடையாக விமர்சிக்க முடியாமல் படேல் அவர்கள் தன் அறைக்கு சென்று கோபமாகக் கடிதம் எழுதி தன் மேசைமேலே வைத்துக்கொள்வாராம்.
கடிதங்கள் வரலாற்று பெட்டகம், இன்றைய எஸ்.எம்.எஸ். காற்றில் கரைந்து விடும் கற்பூரம்!
கடிதம் எழுதுவோம் ;கடிதம் போற்றுவோம்; காலத்திற்கு வரலாற்று பொக்கிஷம் உண்டு செய்வோம்!
- அன்பன்,
மும்பை சரவணன்
நன்றி நண்பரே
நீக்குபல வார்த்தைப் பாராட்டுகள் அளிக்காத மகிழ்வை ஒரு கடிதம் தந்து விடும். ஆனால் எஸ்.எம்.எஸ்.ம் வாட்ஸப்பும் ஈமெயிலும் ஆக மாறிவிட்ட உலகில் எழுதத்தான் ஆளில்லை. இன்னும் கடித இலக்கியத்தைத் துறந்துவிடாமல் எழுதி அழகான பாராட்டு எனும் ஊக்க மருந்தை உங்களுக்கு வழங்கியிருக்கும் ஹரணி அவர்களை எத்தனை பாராட்டினாலும் பற்றாது நண்பரே.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஎத்தனை அருமையான ஆனந்தம் தரும் நிகழ்வுகள். இந்த கடிதப்பரிமாற்றம் என்பது. இப்போது எங்கே எல்லாம் மெயில்... வாழ்த்திய அய்யா அவர்களுக்கும் தங்களுக்கும் எனது மனம் கனிந்த பாராட்டுக்கள். நிறைய எழுதுங்க. அய்யா சொன்னதையே நானும் சொல்கிறேன்.
பதிலளிநீக்குஇது மாதிரியான வாழ்த்துக்கள் நமக்கு இன்னும் உற்சாகத்தை தரும். அதுவும் கவிஞர்ஹரணி அவர்களிடம் கடிதத்தில் கிடைக்கப்பெற்ற வாழ்த்து நமக்கு பொக்கிஷம் போன்றது. வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குத.ம.2
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
நீக்குபழைய கடிதங்களைப் படிக்கும் சுவாரஸ்யம்...
பதிலளிநீக்குகம்பி கட்டி சேர்த்து வைத்திருக்கும் வழக்கம் எங்கள் வீட்டிலும் இருந்தது. நிறைய கடிதங்களை எடுத்து வைத்துப் பாதுகாத்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது.
நன்றி நண்பரே
நீக்குதங்கள் எழுத்தும், ஹரிணி அவர்களின் கடிதமும்... அடேங்கப்பா... ரசித்தேன்...
பதிலளிநீக்குஅன்புக்குரிய ஹரணி அவர்கள் வழங்கிய - அருமையான பாராட்டுரையைக் கண்டு மனம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றது..
பதிலளிநீக்குஅவருடைய கடிதத்தை அப்படியே பதிவில் வைத்தது - அழகு!..
வாழ்க நலம்..
நன்றி ஐயா
நீக்குநல்ல மனங்கள் கொண்ட இருவருக்கும்
பதிலளிநீக்குபாராட்டும் வாழ்த்துகளும்.
வேறென்ன கூற. மேலும் வளர்க! வாழ்க!
வேதா. இலங்காதிலகம்.
நன்றி சகோதரியாரே
நீக்குஇந்தக் காலகட்டத்தில் கையிட்டு எழுதி, பாராட்டி ஒரு கடிதம் என்றால் எத்தனைப் போற்றுதற்குரியது! ஆஹா! சொல்ல வைக்கின்றது.
பதிலளிநீக்குதங்கள் இருவருக்குமே எங்கள் மனம் கனிந்த பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!
nice sir
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குடிதப்பரிமாற்றம் என்பது மிக அழகான விஷயம். முக்கியமான கடிதங்களை பல வருடங்களாக நாங்கள் பாதுகாத்து வருகிறோம். பல வருடங்களுக்கு முன் கடந்து சென்ற மகிழ்வான, வருத்தம் மிக்க, பல உணர்ச்சி மிக்க நிகழ்வுகளை நினைக்கும்போதெல்லாம் மீண்டும் மனக்கண் முன்னே கொண்டு வருவது கடிதங்கள் மட்டுமே! அதை மிக அழகாய் நீங்களும் வெளிக்கொணர்ந்திருக்கிறீர்கள்!!
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
நீக்குகடிதப்பரிமாற்றம் என்பது மிக அழகான விஷயம். முக்கியமான கடிதங்களை பல வருடங்களாக நாங்கள் பாதுகாத்து வருகிறோம். பல வருடங்களுக்கு முன் கடந்து சென்ற மகிழ்வான, வருத்தம் மிக்க, பல உணர்ச்சி மிக்க நிகழ்வுகளை நினைக்கும்போதெல்லாம் மீண்டும் மனக்கண் முன்னே கொண்டு வருவது கடிதங்கள் மட்டுமே! அதை மிக அழகாய் நீங்களும் வெளிக்கொணர்ந்திருக்கிறீர்கள்!!
பதிலளிநீக்குமிகவும் அருமை! இது ,கடிதம் மட்டுமல்ல! தங்கள் நூலுக்கோர் அரிய விமர்சனமும் ஆகும் !நன்றி அவருக்கும் உமக்கும்!
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குவாழ்த்துக்கள் ஐயா...
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குரொம்ப காலத்துக்கு பிறகு கடிதத்தை காண்கிறேன், இன்றைய தலைமுறையினருக்கு கடிதம் என்று ஒன்று இருக்கிறதே தெரிந்திருக்காது.
பதிலளிநீக்குகடிதம் எழுதிய ஐயாவிற்கும், அதனை மற்றவர்களும் படிக்க பதிவிட்ட உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
நன்றி நண்பரே
நீக்குகடிதமாக வந்த நல்லதொரு விமர்சனம்...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் ஐயா...
நன்றி நண்பரே
நீக்கு//ஆசானிடமிருந்து, மாணவனுக்கு ஓர் பாராட்டு.//
பதிலளிநீக்குஅப்புறம் என்ன ...?! கொழுத்துங்கள் ....!
நன்றி ஐயா
நீக்குவஞ்சனை இல்லாமல் ஊக்கப் படுத்தி வாழ்த்தும் குணம் ஹரணி ஐயாவுக்கு இருக்கிறது. என் பதிவுகளுக்குப் பின்னூட்டமாக அவர் இடும் கருத்துக்கள் எனக்கு ஒரு டானிக் போல் இருக்கும். திரு.ஹரணியின் பாராட்டுக்கடிதம் ஒரு பொக்கிஷம் போன்றது. கிடைக்கப் பெற்ற உங்களுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநீங்கள் சொல்வதுபோல் இந்தக் கடித மரபு பெரும்பாலும் அலுவல் சார்ந்ததாக மாறி வெகுநாளாயிற்று.
பதிலளிநீக்குஇது போன்ற அன்பின் கருத்துப் பகிர்தலை அதே கையெழுத்தில் காணும் போது வரும் மகிழ்ச்சி உண்மையில் அனுபவித்தவர்களுக்கே விளங்கும் !
நன்றி கரந்தையாரே!
த ம 6
நன்றி நண்பரே
நீக்குகடிதங்கள் ஒரு காலத்தே பொக்கிஷமாக கருதப்பட்டன! கடிதம் எழுதுவது பாடத் திட்டமாகவே இன்று இருக்கிறது! இந்த நிலையில் கடிதம் மூலம் தங்களின் நூலை பாராட்டி எழுதி மகிழ்வூட்டியது சிறப்பே! பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குகடிதங்கள் பெற்ற உடன் படிப்பதை விட சில மாதங்கள் கழித்து எடுத்து படிப்பதில் அதிகம் திருப்தி அடைந்ததுண்டு... மறந்து போன ஒரு பழக்கத்தினை நினைவு படுத்தியது பதிவு.
பதிலளிநீக்குஹரணி ஐயாவின் கடிதம் மிக அருமை.
நன்றி ஐயா
நீக்குபேராசிரியர் ஹரணி அவர்களின் வலைப்பதிவில் அவரது படைப்புகளை படிப்பவர்களில் நானும் ஒருவன். இமெயில் காலத்தில் இன்னமும் கடிதம் எழுதுவது பெருமையான விஷயம். அவரது கடிததையே ஒரு பதிவாகத் தந்த உங்களது திறமையைப் பாராட்டுகிறேன்.
பதிலளிநீக்குத.ம.8
நன்றி ஐயா
நீக்குமோதிரக் கையால் குட்டுபடுவது என்பது இது தானா ?
பதிலளிநீக்குத ம +1
நன்றி நண்பரே
நீக்குமதிப்பிற்குரிய உறரணி அய்யா அவர்களுக்கு வணக்கம். அவரது கையெழுத்தைக் காணும்படிப் பதிவிட்ட தங்களுக்கு நன்றி. அவர் பாராட்டுமளவிற்கு எழுதிய தங்களுக்கு வாழ்த்துகளும் வணக்கங்களும்.
பதிலளிநீக்குகுருவின் வாழ்த்துக்கடிதமும் அதனைப்பகிர்ந்த உங்கள் அன்பும் என்றும் போற்றுதற்குரியது. வாழ்த்துக்கள் ஐயா.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குகரந்தை உண்மையிலேயே ஒரு தமிழ்க் கிடங்கு . எத்தனை அறிஞர்கள்! அப்பெருமக்களின் தொடர்ச்சியாக ஹரணி அவர்களும் தாங்களும் விளங்கி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. சிறப்பான பாராட்டுரை கடித வடிவில் வழங்கியுள்ளார் ஹரணி அவர்கள்
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குபாராட்டுக்கள் நண்பரே, வாழ்த்துக்கள் பல
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஎனது இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
பதிலளிநீக்குகடிதப் பரிமாற்றம் குறித்த தங்களின் இந்தப் பதிவினை வாசித்த பலருக்கு வாழ்வின் பின்னோக்கிய நினைவுகளை தூண்டிவிட்டிருக்கும் என்றால் அது மிகையாது. நாம் அனைவரும் நினைத்தால் வாரத்திற்கு ஒரு கடிதம் நமது உறவினருக்கோ நண்பருக்கோ எழுதலாம் என்று முடிவு செய்து கொள்ளலாம். அதற்கு தூண்டி விட்ட பேராசிரியர் திரு.அன்பழகன்[ஹரணி] அய்யா அவர்களுக்கும் அதனை வெளியிட்ட தங்களுக்கும் பாராட்டுகளும் நன்றிகளும்.
தகுதியுள்ள தங்களுக்கு பெருமை வாய்ந்த ஒருவரின் அருமையான பாராட்டு கண்டு மனம் மகிழ்கிறது...
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஅருமையான அழகான வாழ்த்துக் கடிதம்.
பதிலளிநீக்குஎப்போது வேண்டுமென்றாலும் நீங்கள் இந்த வாழ்த்து கடிதத்தை எடுத்து படிக்கலாம். மனம் மகிழலாம்.
நாங்களும் கடிதங்களை கம்பியில் குத்தி வைத்து இருந்தோம். இப்போது கடிதங்களே இல்லை, எல்லாம் போன் தான்.
வாழ்த்துக்கள்.
நன்றி சகோதரியாரே
நீக்குதங்களுக்கு வரும் வாழ்த்துக்கள் தங்கள் எழுத்தின்மீதான நண்பர்களின் ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது. தொடர்ந்து எழுதுங்கள், பகிர்ந்துகொள்ளுங்கள். உங்களது எழுத்துக்களைப் படிக்க ஆவலோடு இருக்கிறோம்.
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குஅய்யா வணக்கம்.கடிதங்கள்..என்பன தொலைந்துபோன நம் பண்பாட்டு மரபின் எச்சங்கள்..உணர்வுகளை நாகரீகமாக வெளிப்படுத்தும் உச்சங்கள்....நல்ல ஆவணம்..வாழ்த்துகள் ஐயா..
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஹரிணியாரின் கடிதம் நல்லதோர் ஊக்க மருந்து...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் அய்யா.
த ம 12
நண்பரே
பதிலளிநீக்குகணணி உலகில் காணாமல் போன நினைவுகளை மீட்கும் மடல்வாழ்த்து கண்டதில் எங்களுக்கும் மகிழ்ச்சியே அருமையா சொல்லி இருக்கிறார்
பதிலளிநீக்குஒரு வாழ்த்தும் .விமர்சனமும் ஒருங்கு பெற்ற மடல் அருமை அருமை
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !
கரந்தைமண் காக்கின்ற காப்பியங்கள் போல
சிரத்தையுடன் நற்பணிகள் செய்தீர் - அரனாளும்
அண்டம் அழகாகும் ஆயகலை மேவிவிடும்
திண்மை பெருகும் திளைத்து !
நன்றி நண்பரே
நீக்குவாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஉங்கள் மூலமாகத் திரு ஹரணி அவர்களின் அறிமுகம் கிடைத்தது. இன்னமும் கடிதப் போக்குவரத்து வைத்திருப்பதில் மகிழ்ச்சியும் கூட. பல கடிதங்கள் தொலைந்து விட்டன! அடிக்கடி வீடு மாறுவதில் இது ஒரு பிரச்னை! புத்தகங்களும் அப்படியே போய்விடுகின்றன. :( கையெழுத்தில் கடிதத்தைப் படிக்கப் படிக்கப் பரவசம். :)
பதிலளிநீக்கு